வரலாற்றில் இன்று (18.07.2024)

 வரலாற்றில் இன்று (18.07.2024)

வரலாறு என்பது இறந்த காலத்தில் நிகழ்ந்த விஷயத்தை பற்றி நாம் தெரிந்து கொள்ளும் ஒன்றாகும். குறிப்பாக வரலாற்றில் ஒருவர் செய்த சாதனைகள், தியாகங்கள், சிறப்புகள் இதுபோன்ற பலவகையான முக்கிய விஷயங்கள் பற்றி அனைவருக்கும் தெரியப்படுத்தும் விஷயமாகும். தெளிவாக சொல்ல வேண்டும் என்றால் தங்கள் வாழும் காலத்தின் பின்னணியில் கடந்த காலத்தின் நிகழ்வுகளை விளக்கி வரலாறாக எழுதுகின்றனர். சரி இந்த பதிவில் நாம் நமது வாழ்வில் கடந்து செல்லும் ஒவ்வொரு நாட்களிலும் ஏதாவது ஒரு விஷயம் நிகழ்ந்திருக்கலாம் அந்த  வகையில் வரலாற்றில் இன்று என்ன நாள்? என்பதை பற்றி நாம் நமது மின்கைத்தடியின் இந்த தொகுப்பில் படித்து தெரிந்து கொள்வோம் வாங்க..

வரலாற்றில் இன்று | Today History in Tamil

சூலை 18 (July 18) கிரிகோரியன் ஆண்டின் 199 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 200 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 166 நாட்கள் உள்ளன.

நிகழ்வுகள்

64 – ரோமில் பெரும் தீ பரவி நகரின் வர்த்தக மையத்தில் பெரும் சேதம் ஏற்பட்டது. அப்போது நீரோ மன்னன் பிடில் வாசித்துக் கொண்டிருந்தான் என்று சொல்லப்படுகிறது.
1656 – போலந்து, மற்றும் லித்துவேனியப் படைகள் வார்சாவில் சுவீடனின் படைகளுடன் போரை ஆரம்பித்தன. சுவீடிஷ் படைகள் இப்போரில் வெற்றி பெற்றனர்.
1872 – ஐக்கிய இராச்சியத்திலும் அயர்லாந்திலும் இரகசிய வாக்கெடுப்பு முறை நடைமுறைப்படுத்தப்பட்டது.
1916 – யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற பெரும் சூறாவளியில் பலர் கொல்லப்பட்டனர். வீடுகள், மற்றும் பல தொலைத்தொடர்பு சாதனங்கள் சேதமடைந்தன.
1944 – இரண்டாம் உலகப் போர்: போரில் ஏற்பட்ட பல தோல்விகளை அடுத்து ஜப்பானியப் பிரதமர் ஹிடெக்கி டோஜோ பதவியைத் துறந்தார்.
1965 – சோவியத்தின் சோண்ட் 3 விண்கலம் ஏவப்பட்டது.
1966 – நாசாவின் ஜெமினி 10 விண்கலம் ஏவப்பட்டது.
1977 – வியட்நாம் ஐக்கிய நாடுகள் அவையில் இணைந்தது.
1982 – குவாத்தமாலாவில் பெண்கள், குழந்தைகள் உட்பட 268 மாயன் பழங்குடியினர் இராணுவத்தினரால் படுகொலை செய்யப்பட்டனர்.
1984 – கலிபோர்னியாவில் மக்டொனால்ட் உணவகத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு நிகழ்வில் 21 பேர் கொல்லப்பட்டனர் 19 பேர் படுகாயமடைந்தானர். துப்பாக்கிதாரி ஜேம்ஸ் ஹியூபேர்ட்டி காவற்துறையினரால் கொல்லப்பட்டான்.
1995 – கரிபியன் தீவான மொன்செராட்டில் சௌபியரே மலை வெடித்ததில் வெடித்துச் சிதறியதன் காரணமாக ‎மொன்செராட்டின் தலைநகரம் அழிக்கப்பட்டதுடன் மண்டலத்தின் மக்கட்தொகையின் மூன்றில் இரண்டு பகுதியினர் தீவை விட்டு வெளியேறினர்.
1996 – ஓயாத அலைகள் ஒன்று: முல்லைத்தீவு இலங்கைப் படைமுகாம் விடுதலைப் புலிகளால் முற்றுகையிடப்பட்டது.
1997 – மும்பாயில் 10 சிறுவர்கள் காவற்துறையினரால் கொல்லப்பட்ட நிகழ்வுக்குப் பின்னர் சுமார் 8000 தலித் மக்கள் கலகத்தில் ஈடுபட்டனர்.
1998 – பப்புவா நியூ கினியில் 23-அடி கடற் சூறாவளியில் 3,000 பேர் வரையில் கொல்லப்பட்டனர்.
2007 – மும்பாயில் ஏழு மாடிக் கட்டிடம் உடைந்து வீழ்ந்ததில் 29 பேர் கொல்லப்பட்டனர்.

பிறப்புகள்

1909 – அந்திரே குரோமிக்கோ, சோவியத் அதிபர் (இ. 1989)
1918 – நெல்சன் மண்டேலா, தென்னாப்பிரிக்காவின் கறுப்பினத் தலைவர், நோபல் பரிசு பெற்றவர். (இ. 2013)
1935 – ஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள், இந்து ஆன்மிகத் தலைவர்.
1950 – சேர் றிச்சர்ட் பிரான்சன், உலகின் பெரும் பணக்காரர்களுள் ஒருவர்
1982 – பிரியங்கா சோப்ரா, இந்தியத் திரைப்பட நடிகை

இறப்புகள்

1817 – ஜேன் ஆஸ்டின், ஆங்கில நாவலாசிரியை (பி. 1775)
1892 – தோமஸ் குக், ஆங்கிலேய பிரயாண முகவர் (பி. 1808)
1968 – கோர்னெல் ஹேமன்ஸ், நோபல் பரிசு பெற்றவர்.
1974 – எஸ். வி. ரங்கராவ், தமிழ், தெலுங்கு திரைப்பட நடிகர் (பி: ஜூலை 3 1918)
2012 – ராஜேஷ் கன்னா, இந்தி திரைப்பட நடிகர், (பி. 1942)
2013 – வாலி, கவிஞர் (பி. 1931)

சிறப்பு நாள்

உருகுவே – அரசியலமைப்பு நாள் (1830)
நெல்சன் மண்டேலா நாள் (ஐநா)

சதீஸ்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...