தர்பார் படத்தின் ட்ரெய்லர்
நீண்ட நாளாக எதிர்பார்க்கப்பட்ட ஒரு திரைப்படம் தர்பார்.
ஆதித்யா அருணாசலம் பொலீஸ் கமிஷனர் ஆப் மும்பை என்ற அறிமுகத்துடன் ட்ரெய்லர் வெளிவந்துள்ளது.
முழுக்க முழுக்க மும்பை சுற்றிய ஒரு கதை களம் என புரிய வைத்து விடுகிறது. ஒன்றரை நிமிடங்களில் ஒட்டுமொத்த படத்தையும் கட்டிவிடுகிறது இந்த ட்ரெய்லர்.
முதல் காட்சியிலேயே மும்பை கலாச்சாரத்தை சில நொடிகளில் காண்பித்து விடுகிறார்கள், அதில் ரத்தம் தோய்ந்த கத்தியும் இருக்கையை சுற்றி அமரும் ரஜினியும் ஆர்வத்தை தூண்டி விடுகிறது.
இளமையாக காட்டப்பட்ட நயன்தாராவும் 2 காட்சிகளில் வந்து செல்வதை பார்க்க முடிகிறது. விருவிருப்பான பாடல், தெய்வீகப் பாடலை ரீமிக்ஸ் செய்து ரஜினி அவர்களின் ஓபனிங் பாடலாக பதிவு செய்தால் அது படத்திற்கு எப்படி பலம் சேர்க்கிறது என்று படம் பார்த்தபின் தான் தெரியும்.
ஏ ஆர் முருகதாஸ் என்றாலே விறுவிறுப்புக்கு பஞ்சமில்லை. பழைய ரஜினிக்கு தங்கமுலாம் பூசி வெளியிட்டது போன்ற ஒரு உணர்வு.
இது எப்படி இருக்கு என்று அவரது அக்மார்க் வசனம் வழக்கமான அவரது கம்பீரத்துடன் கூடிய குரல் ஒலிக்கும் பொழுது ஈர்ப்பு குறைந்து விட்டது என்றுதான் என்று சொல்லவேண்டும்.
அந்த வயதான தோற்றம் உணரவைக்கிறது. இன்னமும் அந்த அதிரடியான காட்சிகளில் கொஞ்சம் கூட பொருந்தாத தோற்றம் தேவையா என்று யோசித்திருக்கலாம்.
போலீசார்கள் வரும் காட்சிகள் ஏனோ சிங்கம் படத்தின் காட்சிகளை நினைவுபடுத்துகிறது ரஜினி அவர்களின் வயதுக்கு ஏற்றவாறு இன்னும் கொஞ்சம் சிறப்பான படமாகவே எடுத்திருக்கலாம் என்று தோன்றுகிறது முழு படத்தையும் பார்த்தால் இதுவே அனைவருக்கும் தோன்றலாம். பொங்கல் விழாவை முன்னிட்டு இப்படம் திரைக்கு வர காத்திருக்கிறது…