வரலாற்றில் இன்று (29.06.2024)

 வரலாற்றில் இன்று (29.06.2024)

வரலாறு என்பது இறந்த காலத்தில் நிகழ்ந்த விஷயத்தை பற்றி நாம் தெரிந்து கொள்ளும் ஒன்றாகும். குறிப்பாக வரலாற்றில் ஒருவர் செய்த சாதனைகள், தியாகங்கள், சிறப்புகள் இதுபோன்ற பலவகையான முக்கிய விஷயங்கள் பற்றி அனைவருக்கும் தெரியப்படுத்தும் விஷயமாகும். தெளிவாக சொல்ல வேண்டும் என்றால் தங்கள் வாழும் காலத்தின் பின்னணியில் கடந்த காலத்தின் நிகழ்வுகளை விளக்கி வரலாறாக எழுதுகின்றனர். சரி இந்த பதிவில் நாம் நமது வாழ்வில் கடந்து செல்லும் ஒவ்வொரு நாட்களிலும் ஏதாவது ஒரு விஷயம் நிகழ்ந்திருக்கலாம் அந்த  வகையில் வரலாற்றில் இன்று என்ன நாள்? என்பதை பற்றி நாம் நமது மின்கைத்தடியின் இந்த தொகுப்பில் படித்து தெரிந்து கொள்வோம் வாங்க..

வரலாற்றில் இன்று | Today History in Tamil

ஜூன் 29  கிரிகோரியன் ஆண்டின் 180 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 181 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 185 நாட்கள் உள்ளன.

நிகழ்வுகள்

1534 – பிரின்ஸ் எட்வேர்ட் தீவு சாக் கார்ட்டியே என்ற ஐரோப்பியரால் கண்டுபிடிக்கப்பட்டது.
1613 – லண்டனில் உள்ள குளோப் நாடகமாளிகை தீயில் எரிந்து அழிந்தது.
1786 – அலெக்சாண்டர் மாக்டொனெல் மற்றும் 500 கத்தோலிக்கர்கள் ஸ்கொட்லாந்தில் இருந்து சென்று ஒண்டாரியோவின் கிளென்கரி என்ற ஊரில் குடியேறினர்.
1814 – மெதடிஸ்த திருச்சபையைச் சேர்ந்த ஆறு மதப்பரப்புனர்கள் இலங்கையின் காலி நகரை வந்தடைந்தனர்.
1850 – வான்கூவர் தீவில் நிலக்கரி கண்டுபிடிக்கப்பட்டது.
1864 – கனடாவில் கியூபெக்கில் தொடருந்து விபத்தில் 99 பேர் கொல்லப்பட்டனர்.
1880 – பிரான்ஸ் டெஹீட்டி தீவைக் கைப்பற்றியது.
1888 – ஜோர்ஜ் எடுவார்ட் கவ்ராட் என்பவர் ஆண்டெலின் எகிப்தில் இசுரேல் என்ற ஆக்கத்தை கிராமபோன் உருளை ஒன்றில் பதிவு செய்தார்.
1895 – சாரின் உருசியப் அரசின் படைக்குக் கட்டாய ஆளெடுக்கும் நடவடிக்கையைக் கண்டித்து டுகோபார் தமது ஆயுதங்களை எரித்தனர்.
1904 – மொஸ்கோவில் இடம்பெற்ற சூறாவளியினால் சுமார் 1.500 வீடுகள், கட்டடங்கள் அழிந்தன.
1914 – கிரிகோரி ரஸ்புட்டீன் சைபீரியா நகரில் உள்ள அவரது வீட்டில் இடம்பெற்ற கொலை முயற்சி ஒன்றில் தப்பினார்.
1925 – கலிபோர்னியாவில் 6.3 நிலநடுக்கம் ஏற்பட்டதில் சாண்டா பார்பரா என்ற இடம் முற்றாக அழிந்தது.
1976 – சீசெல்சு ஐக்கிய இராச்சியத்தில் இருந்து விடுதலை அடைந்தது.
1995 – அட்லாண்டிஸ் விண்ணோடம் ரஷ்யாவின் மீர் விண்வெளி நிலையத்துடன் முதற்தடவையாக இணைந்தது.
1995 – தென் கொரியாவின் சியோலில் சம்பூங் பல்பொருள் அங்காடி இடிந்து வீழ்ந்ததில் 501 பேர் கொல்லப்பட்டு 937 பேர் படுகாயமடைந்தனர்.
2002 – தென் கொரியாவுக்கும் வட கொரியாவுக்கும் இடையில் இடம்பெற்ற கடல் மோதலில் ஆறு தென் கொரிய மாலுமிகள் கொல்லப்பட்டு ஒரு வட கொரியக் கப்பல் மூழ்கடிக்கப்பட்டது.
2007 – ஆப்பிள் நிறுவனம் தனது முதலாவது கைப்பேசி ஐ-போனை வெளியிட்டது.

பிறப்புகள்

1945 – சந்திரிகா குமாரதுங்க, இலங்கையின் நான்காவது அதிபர்
1981 – ஜோ ஜான்சன், அமெரிக்கக் கூடைப்பந்து ஆட்டக்காரர்
1925 – ஜார்ஜியோ நபோலிடானோ, 11வது இத்தாலிய அரசுத்தலைவர்
1978 – நிக்கோல் செர்சிங்கர், அமெரிக்கப் பாடகர், நடிகை

இறப்புகள்

2009 – வ. ஐ. சுப்பிரமணியம், மொழியியல் அறிஞர் (பி. 1926)

சிறப்பு நாள்

சீசெல்சு – விடுதலை நாள் (1976)

சதீஸ்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...