ஆபாச வீடியோ – முதல் கைது

ஆபாச வீடியோ – முதல் கைது
குழந்தைகள் ஆபாச வீடியோக்கள் பகிர்ந்ததாக தமிழகத்தில் முதல் கைது. சமூகவலைதளத்தில் குழந்தைகளின் ஆபாச வீடியோவை பகிர்ந்தவர் திருச்சியில் கைது.கிறிஸ்டோபர் அல்போன்ஸ் என்பவரை கைது செய்து பாலக்கரை போலீசார் விசாரணை.

சமூக வலைதளங்கள் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வந்தன. சிறார்களின் ஆபாச படங்களை பகிர்ந்ததாக இந்தியாவிலேயே முதல் முறையாக திருச்சியை சேர்ந்த கிறிஸ்டோபர் அல்போன்ஸ் ராஜ், என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். திருச்சி, காஜாபேட் தெருவில் வசிக்கும் கிறிஸ்டோபர், ஐடிஐ ஏசி மெக்கானிக் படித்து, நாகர்கோவிலில் பணியாற்றி வந்துள்ளார்.

சமீபகாலமாக பெண்கள், சிறார்களின் மீதான பாலியல் வன்கொடுமை அதிகரித்து வருகிறது. இதற்கு ஆபாச வீடியோ பார்ப்பதும் ஒரு காரணியாக இருப்பதாக 
கருத்து நிலவுகிறது. இதனை தடுக்கும் விதமாக ஆபாச இணையதளங்களை தடை செய்யப்பட்டது. ஆனாலும், சில இணைய டெக்னிக்களை பயன்படுத்தி ஆபாச படங்களை பார்ப்பதும், பகிர்வதும் தொடர்ந்து வந்தன.இந்நிலையில், பெண்கள் மற்றும் சிறார்களுக்கு எதிரான குற்றத்தடுப்பு பிரிவு கூடுதல் டி.ஜி.பி., ரவி, ”சிறார்கள் தொடர்பான ஆபாச படம் மற்றும் வீடியோ பார்த்தவர்களின் பட்டியல் தயாரிக்கப்பட்டு வருகிறது. அவர்கள், விரைவில் கைது செய்யப்படுவர்,” எனக் கூறினார். இதனையடுத்து,

‘நிலவன் நிலவன்’,
 ‘ஆதவன் ஆதவன்’

உள்ளிட்ட பெயர்களில் போலி பேஸ்புக் கணக்கில் 2 ஆண்டுகளாக தொடர்ந்து ஆபாச படங்களை பதிவேற்றியுள்ளார். மேலும், பேஸ்புக் மெஸஞ்சர் மூலமாக சுமார் 15 பேருக்கு சிறார்களின் ஆபாச படங்களை அனுப்பியதாக இன்று (டிச.,12) கைது செய்யப்பட்டார். இவரை 15 நாட்கள் நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்க திருச்சி மகளிர் நீதிமன்ற நீதிபதி வனிதா உத்தரவிட்டார். இது குறித்து ஏ.டி.ஜி.பி., ரவி கூறுகையில்;

Tags:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Follow by Email
Instagram
Telegram
WhatsApp
FbMessenger
URL has been copied successfully!