வரலாற்றில் இன்று ( 31.05.2024)

 வரலாற்றில் இன்று ( 31.05.2024)

வரலாறு என்பது இறந்த காலத்தில் நிகழ்ந்த விஷயத்தை பற்றி நாம் தெரிந்து கொள்ளும் ஒன்றாகும். குறிப்பாக வரலாற்றில் ஒருவர் செய்த சாதனைகள், தியாகங்கள், சிறப்புகள் இதுபோன்ற பலவகையான முக்கிய விஷயங்கள் பற்றி அனைவருக்கும் தெரியப்படுத்தும் விஷயமாகும். தெளிவாக சொல்ல வேண்டும் என்றால் தங்கள் வாழும் காலத்தின் பின்னணியில் கடந்த காலத்தின் நிகழ்வுகளை விளக்கி வரலாறாக எழுதுகின்றனர். சரி இந்த பதிவில் நாம் நமது வாழ்வில் கடந்து செல்லும் ஒவ்வொரு நாட்களிலும் ஏதாவது ஒரு விஷயம் நிகழ்ந்திருக்கலாம் அந்த  வகையில் வரலாற்றில் இன்று என்ன நாள்? என்பதை பற்றி நாம் நமது மின்கைத்தடியின் இந்த தொகுப்பில் படித்து தெரிந்து கொள்வோம் வாங்க..

வரலாற்றில் இன்று | Today History in Tamil

மே 31 கிரிகோரியன் ஆண்டின் 151 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 152 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 214 நாட்கள் உள்ளன.

நிகழ்வுகள்

455 – உரோமைப் பேரரசர் பெட்ரோனியசு மாக்சிமசு உரோமை விட்டு வெளியேறுகையில் கும்பல் ஒன்றினால் கற்களால் எறிந்து கொல்லப்பட்டார்.
1223 – செங்கிஸ் கானின் மங்கோலியப் படை சுபுதையின் தலைமையில் கிப்சாக்கியரை சமரில் தோற்கடித்தது.
1293 – சிங்காசாரி மன்னர் கேர்த்தனிகாரா யுவான்களுக்குத் திறை செலுத்த மறுத்ததால், மங்கோலியர்கள் சாவகம் மீது போர் தொடுத்தனர். இப்போரில் மங்கோலியர் தோல்வியுற்றனர்.[1][2]
1669 – சாமுவேல் பெப்பீசு கடைசிப் பதிவைத் தனது நாட்குறிப்பில் எழுதினார்.
1790 – ஐக்கிய அமெரிக்கா தனது முதலாவது பதிப்புரிமைச் சட்டத்தை அமுலாக்கியது.
1859 – வெஸ்ட்மின்ஸ்டர் அரண்மனையில் பிக் பென் மணிக்கூண்டுக் கோபுரம் இயங்க ஆரம்பித்தது.
1889 – அமெரிக்காவின் பென்சில்வேனியாவில் ஜோன்ஸ்டவுன் நகரில் அணைக்கட்டு ஒன்று உடைந்ததில் 2,200 பேர் உயிரிழந்தனர்.
1902 – இரண்டாம் பூவர் போர் முடிவுற்றது. தென்னாபிரிக்கா பிரித்தானியாவின் முழுமையான ஆட்சியின் கீழ் வந்தது.
1910 – தென்னாபிரிக்க ஒன்றியம் அமைக்கப்பட்டது.
1911 – டைட்டானிக் கப்பல் வட அயர்லாந்து, பெல்பாஸ்ட்டில் வெள்ளோட்டம் விடப்பட்டது.
1911 – மெக்சிக்கோ புரட்சி: மெக்சிக்கோவின் அரசுத்தலைவர் பொர்பீரியோ தீயாசு நாட்டை விட்டு வெளியேறினார்.
1921 – அமெரிக்காவில் ஓக்லஹோமா, துல்சா என்ற இடத்தில் இடம்பெற்ற இனக்கலவரங்களின் போது 39 கறுப்பினத்தவர் கொல்லப்பட்டனர்.
1935 – பாக்கித்தானின் குவெட்டா நகரில் 7.7 அளவு நிலநடுக்கம் ஏற்பட்டதில் 40,000 பேர் உயிரிழந்தனர்.
1941 – ஆங்கில-ஈராக்கியப் போர்: ஐக்கிய இராச்சியம் ஈராக்கை மீளக் கைப்பற்றியது.
1942 – இரண்டாம் உலகப் போர்: சப்பானியக் கடற்படையின் நீர்மூழ்கிக் கப்பல்கள் ஆத்திரேலியாவின் சிட்னி நகரைத் தாக்கின.
1961 – தென்னாபிரிக்கா பொதுநலவாய அமைப்பில் இருந்து விலகியது. தென்னாபிரிக்கக் குடியரசு அமைக்கப்பட்டது.
1962 – மேற்கிந்தியத் தீவுகளின் கூட்டமைப்பு கலைக்கப்பட்டது.
1970 – பெருவில் இடம்பெற்ற 7.9 அளவு நிலநடுக்கத்தில் யூங்கே என்ற நகர் முழுமையாகப் புதையுண்டதில் 70,000 பேர் வரையில் உயிரிழந்தனர். 50,000 பேர் காயமடைந்தனர்.
1973 – கெமர் ரூச் மீதான குண்டுத் தாக்குதல்களுக்கான அமெரிக்க நிதியுதவிகளைக் குறைக்க அமெரிக்க மேலவை வாக்களித்தது.
1973 – சென்னையில் இருந்து புறப்பட்ட இந்தியன் ஏர்லைன்சு விமானம் 440 பாலம் விமான நிலையத்தை அண்மித்த போது தீப்பற்றி எரிந்ததில் அதில் பயணம் செய்த 65 பேரில் 48 பேர் உயிரிழந்தனர்.
1981 – யாழ் நகரின் பல கட்டடங்கள், வாகனங்கள் நள்ளிரவில் இலங்கைக் காவல்துறையினரால் எரித்து அழிக்கப்பட்டன. யாழ் பொது நூலகம் அடுத்த நாள் தென்னிலங்கைக் குண்டர்களால் தீக்கிரையாக்கப்பட்டது.
1985 – வட அமெரிக்காவில் ஒகையோ, பென்சில்வேனியா, நியூயார்க், ஒன்றாரியோ ஆகிய இடங்களில் வீசிய சுழற்காற்றினால் 76 பேர் உயிரிழந்தனர்.
1991 – அங்கோலாவில் பல-கட்சி மக்களாட்சி முறைக்கான உடன்பாடு ஐநாவின் ஆதரவில் எட்டப்பட்டது.
1997 – கனடாவில் நியூ பிரன்ஸ்விக்கையும் பிரின்ஸ் எட்வர்ட் தீவையும் இணைக்கும் கூட்டமைப்புப் பாலம் திறக்கப்பட்டது.
2004 – ஈழப்போர்: ஈழத்துப் பத்திரிகையாளர் ஐயாத்துரை நடேசன் மட்டக்களப்பில் சுட்டுக்கொல்லப்பட்டார்.
2005 – ஈழப்போர்: இலங்கையின் புலனாய்வுத்துறை உயர் அதிகாரி மேஐர் நிசாம் முத்தாலிப் கொழும்பில் சுட்டுக்கொல்லப்பட்டார்.
2013 – சிறுகோள் “1998 கியூ.ஈ.2” அடுத்த இரண்டு நூற்றாண்டுகளுக்கு [[பூமி]க்கு மிகக் கிட்டவாக வந்தது.
2017 – காபூல் நகரில் மேற்கொள்ளப்பட்ட வாகனக் குண்டுத் தாக்குதலில் 90 பேர் கொல்லப்பட்டனர், 463 பேர் காயமடைந்தனர்.

பிறப்புகள்

1725 – அகில்யாபாய் ஓல்கர், மராட்டியப் பேரரசின் கீழிருந்த மல்வா இராச்சியத்தின் அரசி (இ. 1795)
1819 – வால்ட் விட்மன், அமெரிக்கக் கவிஞர், ஊடகவியலாளர் (இ. 1892)
1852 – ஜூலியஸ் ரிச்சர்டு பெட்ரி, செருமானிய நுண்ணுயிரியலாளர் (இ. 1921)
1912 – சியான்-ஷீங் வு, சீன-அமெரிக்க இயற்பியலாளர் (இ. 1997)
1912 – மார்ட்டின் சுவார்சுசைல்டு, செருமானிய-அமெரிக்க வானியற்பியலாளர் (இ. 1997)
1919 – எம். ஐ. எம். அப்துல் மஜீத், இலங்கை அரசியல்வாதி (இ. 1970)
1930 – கிளின்ட் ஈஸ்ட்வுட், அமெரிக்க நடிகர், இயக்குநர்
1931 – நீலாவணன், ஈழத்துக் கவிஞர் (இ. 1975)
1941 – வில்லியம் நோர்டவுசு, நோபல் பரிசு பெற்ற அமெரிக்கப் பொருளியலாளர்
1945 – லோரண்ட் பாக்போ, ஐவரி கோஸ்ட்டின் 4வது அரசுத்தலைவர்
1948 – சிவெத்லானா அலெக்சியேவிச், நோபல் பரிசு பெற்ற பெலருசிய எழுத்தாளர்
1966 – ரொசான் மகாநாம, இலங்கைத் துடுப்பாளர்
1976 – கோலின் பார்ரெல், ஐரிய நடிகர்

இறப்புகள்

1809 – ஜோசப் ஹேடன், ஆத்திரிய இசையமைப்பாளர் (பி. 1732)
1832 – எவரிஸ்ட் கால்வா, பிரான்சியக் கணிதவியலாளர் (பி. 1811)
1910 – எலிசபெத் பிளாக்வெல், ஆங்கிலேய-அமெரிக்க மருத்துவர் (பி. 1821)
1960 – டி. பி. ஜாயா, இலங்கை அரசியல்வாதி, கல்வியாளர் (பி. 1890)
1964 – பி. ஆர். மாணிக்கம், தமிழகக் கட்டிடக் கலைஞர் (பி. 1909)
1973 – மோகன் குமாரமங்கலம், இந்திய அரசியல்வாதி (பி. 1916)
1976 – ஜாக்குவஸ் மோனாட், நோபல் பரிசு பெற்ற பிரான்சிய உயிரியலாளர் (பி. 1910)
1981 – பார்பரா வார்ட், ஆங்கிலேயப் பொருளியலாலர், ஊடகவியலாளர் (பி. 1914)
1987 – ஜான் ஆபிரகாம், இந்தியத் திரைப்பட இயக்குநர் (பி. 1937)
2000 – அ. ஜெ. வில்சன், இலங்கை வரலாற்றாளர், எழுத்தாளர் (பி. 1928)
2004 – ஐயாத்துரை நடேசன், இலங்கை ஊடகவியலாளர் (பி. 1954)
2007 – எசு. எம். கமால், தமிழக வரலாற்று ஆய்வாளர், நூலாசிரியர், பதிப்பாளர் (பி. 1928)
2009 – கமலா தாஸ், மலையாள எழுத்தாளர் (பி. 1934)

சிறப்பு நாள்

உலக புகையிலை எதிர்ப்பு நாள்

சதீஸ்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...