வரலாற்றில் இன்று ( 29.05.2024)

 வரலாற்றில் இன்று ( 29.05.2024)

வரலாறு என்பது இறந்த காலத்தில் நிகழ்ந்த விஷயத்தை பற்றி நாம் தெரிந்து கொள்ளும் ஒன்றாகும். குறிப்பாக வரலாற்றில் ஒருவர் செய்த சாதனைகள், தியாகங்கள், சிறப்புகள் இதுபோன்ற பலவகையான முக்கிய விஷயங்கள் பற்றி அனைவருக்கும் தெரியப்படுத்தும் விஷயமாகும். தெளிவாக சொல்ல வேண்டும் என்றால் தங்கள் வாழும் காலத்தின் பின்னணியில் கடந்த காலத்தின் நிகழ்வுகளை விளக்கி வரலாறாக எழுதுகின்றனர். சரி இந்த பதிவில் நாம் நமது வாழ்வில் கடந்து செல்லும் ஒவ்வொரு நாட்களிலும் ஏதாவது ஒரு விஷயம் நிகழ்ந்திருக்கலாம் அந்த  வகையில் வரலாற்றில் இன்று என்ன நாள்? என்பதை பற்றி நாம் நமது மின்கைத்தடியின் இந்த தொகுப்பில் படித்து தெரிந்து கொள்வோம் வாங்க..

வரலாற்றில் இன்று | Today History in Tamil

மே 29  கிரிகோரியன் ஆண்டின் 149 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 150 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 216 நாட்கள் உள்ளன.

நிகழ்வுகள்

363 – உரோமைப் பேரரசர் யூலியன் சசானியப் படைகளை சசானியத் தலைநகரில் தோற்கடித்தார், ஆனாலும் தலைநகரைக் கைப்பற்ற முடியவில்லை.
1328 – நான்காம் பிலிப்பு பிரான்சின் மன்னராக முடிசூடினார்.
1416 – கலிப்பொலி போர்: வெனிசியக் குடியரசு உதுமானிய கடற்படையை கலிப்பொலியில் தோற்கடித்தது.
1453 – கான்சுடன்டினோப்பிளின் வீழ்ச்சி: உதுமானிய இராணுவம் சுல்தான் இரண்டாம் முகமது தலைமையில் கான்ஸ்டண்டினோபிலை 53-நாள் முற்றுகையின் பின்னர் கைப்பற்றியது. பைசாந்தியப் பேரரசு முடிவுக்கு வந்தது.
1660 – இரண்டாம் சார்லசு பெரிய பிரித்தானியாவின் மன்னனாக மீண்டும் முடி சூடினான்.
1677 – வேர்ஜீனியாவில் குடியேறிகளுக்கும் உள்ளூர் பழங்குடிகளுக்கும் இடையில் அமைதி உடன்பாடு ஏற்பட்டது.
1780 – அமெரிக்கப் புரட்சிப் போர்: சரணடைந்த அமெரிக்கப் போர்வீரர்கள் 113 பேரை “பனஸ்ட்ரே டார்லெட்டன்” தலைமையிலான படைகள் கொன்றனர்.
1790 – ரோட் தீவு ஐக்கிய அமெரிக்காவின் 13வது மாநிலமாக ஏற்றுக்கொள்ளப்பட்டது.
1798 – 300 முதல் 500 வரையான ஐக்கிய அயர்லாந்து கிளர்ச்சிவாதிகள் பிரித்தானிய இராணுவத்தினரால் அயர்லாந்தில் கொல்லப்பட்டனர்.
1848 – விஸ்கொன்சின் ஐக்கிய அமெரிக்காவின் 30வது மாநிலமாக ஏற்றுக்கொள்ளப்பட்டது.
1864 – மெக்சிக்கோ பேரரசர் முதலாம் மாக்சிமிலியன் முதற்தடவையாக மெக்சிக்கோ வந்து சேர்ந்தார்.
1867 – ஆத்திரிய-அங்கேரிப் பேரரசு அமைக்கப்பட்டது.
1868 – செர்பியாவின் இளவரசர் மிகைலோ ஒப்ரெனோவிச் படுகொலை செய்யப்பட்டார்.
1869 – பிரித்தானியாவில் பகிரங்க மரணதண்டனை தடை செய்யப்பட்டது.
1886 – மருந்தியலாளர் ஜான் பெம்பர்ட்டன் முதற் தடவையாக கொக்கக் கோலாவுக்கான விளம்பரத்தை அட்லாண்டா ஜேர்னல் இதழில் வெளியிட்டார்.
1903 – செர்பியா மன்னர் முதலாம் அலெக்சாந்தர், அராசி திராகா இருவரும் பெல்கிறேட் நகரில் படுகொலை செய்யப்பட்டனர்.
1914 – புனித லாரன்சு வளைகுடாவில் எம்ப்ரெஸ் ஒஃப் அயர்லாந்து என்ற அயர்லாந்து ஆடம்பரக் கப்பல் மூழ்கியதில் 1,012 பேர் உயிரிழந்தனர்.
1919 – ஐன்சுடைனின் பொதுச் சார்புக் கோட்பாடு ஆர்த்தர் எடிங்டன் என்பவரால் சோதிக்கப்பட்டது. பின்னர் இது உறுதிப்படுத்தப்பட்டது.
1931 – பெனிட்டோ முசோலினியைக் கொலை செய்ய முயன்றதாக அமெரிக்கரான மிச்செல் சிரு என்பவரை இத்தாலிய இராணுவம் சுட்டுக் கொன்று மரணதண்டனைக்குட்படுத்தியது.
1950 – வட அமெரிக்காவைச் சுற்றி வந்த முதலாவது கப்பல் புனித ராக் கனடா, ஹாலிஃபாக்ஸ் நகரை வந்தடைந்தது.
1953 – எட்மண்ட் இல்லரி, செர்ப்பா டென்சிங் இருவரும் எவரெஸ்ட் சிகரத்தை முதன் முதலில் ஏறி சாதனை படைத்தனர்.
1964 – அரபு நாடுகள் கூட்டமைப்பு பாலத்தீனப் பிரச்சினை குறித்து விவாதிக்க கிழக்கு எருசலேமில் கூடியது. இது பலத்தீன விடுதலை இயக்கத்தை அமைக்க இது வழி கோலியது.
1972 – டெல் அவிவ் விமான நிலையத்தில் மூன்று சப்பானியர்கள் துப்பாக்கிச் சூடு மேற்கொண்டதில் 26 பேர் கொல்லப்பட்டனர்.
1982 – இலங்கை மட்டக்களப்பில் சுவாமி விபுலானந்த இசை நடனக் கல்லூரி ஆரம்பிக்கப்பட்டது.
1982 – போக்லாந்து போர்: பிரித்தானியப் படைகள் அர்கெந்தீனாவை கூஸ் கிறீன் சண்டையில் தோற்கடித்தது.
1985 – பெல்ஜியத்தில் ஐரோப்பிய கால்பந்தாட்டப் போட்டி ஒன்றில் இடம்பெற்ற கைகலப்பில் அரங்கின் ஒரு பகுதி இடிந்து வீழ்ந்ததில் 39 பேர் உயிரிழந்தனர். நூற்றுக்கணக்கானோர் காயமடைந்தனர்.
1988 – அமெரிக்க அரசுத்தலைவர் ரானல்ட் ரேகன் சோவியத் தலைவர் கொர்பச்சோவுடன் பேச்சுவார்த்தை நடத்தும் பொருட்டு மாஸ்கோ வந்து சேர்ந்தார்.
1990 – போரிஸ் யெல்ட்சின் சோவியத் உருசியாவின் அரசுத்தலைவராக நாடாளுமன்றத்தினால் தெரிவு செய்யப்பட்டார்.
1999 – டிஸ்கவரி விண்ணோடம் பன்னாட்டு விண்வெளி நிலையத்துடனான தனது முதலாவது இணைப்பை வெற்றிகரமாக முடித்தது.
1999 – 16 ஆண்டுகள் இராணுவ ஆட்சியின் பின்னர் நைஜீரியாவில் அரசுத்தலைவரை மக்கள் தெரிவு செய்தனர்.
2005 – ஐரோப்பிய ஒன்றியம் விடுதலைப் புலிகளைத் தீவிரவாத அமைப்பாக அறிவித்துத் தடை செய்தது.
2008 – ஐசுலாந்தில் 6.1 அளவு நிலநடுக்கம் தாக்கியதில் 30 பேர் காயமடைந்தனர்.
2012 – இத்தாலியின் வடக்கே 5.8-அளவு நிலநடுக்கம் ஏற்பட்டதில் 24 பேர் உயிரிழந்தனர்.

பிறப்புகள்

1630 – இங்கிலாந்தின் இரண்டாம் சார்லசு (இ. 1685)
1872 – சிவயோக சுவாமி, ஈழத்துச் சித்தர் (இ. 1964)
1874 – கில்பர்ட் கெயித் செஸ்டர்டன், ஆங்கிலேயக் கவிஞர், கட்டுரையாளர் (இ. 1936)
1880 – ஆசுவால்டு ஸ்பெங்கிலர், செருமானிய வரலாற்றாளர், மெய்யியலாளர் (இ. 1936)
1890 – மார்ட்டின் விக்கிரமசிங்க, சிங்கள எழுத்தாளர் (இ. 1976)
1914 – டென்சிங் நோர்கே, நேப்பால்-இந்திய மலையேறி (இ. 1986)
1917 – ஜான் எஃப். கென்னடி, அமெரிக்காவின் 35வது குடியரசுத் தலைவர் (இ. 1963)
1923 – தருமபுரம் ப. சுவாமிநாதன், தமிழிசைத் தேவாரப் பேரறிஞர் (இ. 2009)
1926 – அப்துலாயே வாடே, செனிகலின் 3வது அரசுத்தலைவர்
1929 – பீட்டர் ஹிக்ஸ், நோபல் பரிசு பெற்ற ஆங்கிலேய-இசுக்கொட்டிய இயற்பியலாளர்
1937 – மானா மக்கீன், ஈழத்து எழுத்தாளர், ஊடகவியலாளர்
1942 – மாதுலுவாவே சோபித்த தேரர், இலங்கைப் பௌத்த பிக்கு, மனித உரிமை செயற்பாட்டளர் (இ. 2015)
1957 – மோசன் மக்மால்பஃப், ஈரானியத் திரைப்பட இயக்குநர்
1964 – ஆறுமுகன் தொண்டமான், இலங்கை மலையக அரசியல்வாதி, தொழிற்சங்கத் தலைவர் (இ. 2020)

இறப்புகள்

1500 – பார்த்தலோமியோ டயஸ், போர்த்துக்கீச நாடுகாண் பயணி, மாலுமி (பி. 1451)
1829 – ஹம்பிரி டேவி, ஆங்கிலேய-சுவிட்சர்லாந்து வேதியியலாளர் (பி. 1778)
1892 – பகாவுல்லா, பகாய் சமயத்தைத் தோற்றுவித்த பாரசீகர் (பி. 1817)
1911 – டபிள்யூ. எஸ். கில்பர்ட், ஆங்கிலேயக் கவிஞர் (பி. 1836)
1958 – வான் ரமோன் ஹிமெனெஸ், நோபல் பரிசு பெற்ற எசுப்பானியக் கவிஞர் (பி. 1881)
1979 – மெரி பிக்ஃபோர்ட், கனடிய-அமெரிக்க நடிகை, தயாரிப்பாளர் (பி. 1892)
1984 – மார்க்கண்டு சுவாமிகள், ஈழத்து சித்தர் (பி. 1899)
1987 – சரண் சிங், இந்தியாவின் 5வது பிரதமர் (பி. 1902)
2005 – ஹாமில்டன் நாகி, தென்னாப்பிரிக்க மருத்துவர் (பி. 1926)
2008 – டி. பி. முத்துலட்சுமி, தென்னிந்தியத் திரைப்பட நடிகை
2009 – சோ. கிருஷ்ணராஜா, இலங்கை வரலாற்றாளர், மெய்யியல் பேராசிரியர் (பி. 1947)
2013 – ஜயலத் ஜயவர்தன, இலங்கை அரசியல்வாதி, மருத்துவர் (பி. 1953)
2018 – முக்தா சீனிவாசன், தமிழ்த் திரைப்பட இயக்குநர், (பி. 1929)

சிறப்பு நாள்

சனநாயக நாள் (நைஜீரியா)
ஐக்கிய நாடுகளின் அமைதி காப்போருக்கான சர்வதேச நாள்

சதீஸ்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...