வரலாற்றில் இன்று ( 28.05.2024)

 வரலாற்றில் இன்று ( 28.05.2024)

வரலாறு என்பது இறந்த காலத்தில் நிகழ்ந்த விஷயத்தை பற்றி நாம் தெரிந்து கொள்ளும் ஒன்றாகும். குறிப்பாக வரலாற்றில் ஒருவர் செய்த சாதனைகள், தியாகங்கள், சிறப்புகள் இதுபோன்ற பலவகையான முக்கிய விஷயங்கள் பற்றி அனைவருக்கும் தெரியப்படுத்தும் விஷயமாகும். தெளிவாக சொல்ல வேண்டும் என்றால் தங்கள் வாழும் காலத்தின் பின்னணியில் கடந்த காலத்தின் நிகழ்வுகளை விளக்கி வரலாறாக எழுதுகின்றனர். சரி இந்த பதிவில் நாம் நமது வாழ்வில் கடந்து செல்லும் ஒவ்வொரு நாட்களிலும் ஏதாவது ஒரு விஷயம் நிகழ்ந்திருக்கலாம் அந்த  வகையில் வரலாற்றில் இன்று என்ன நாள்? என்பதை பற்றி நாம் நமது மின்கைத்தடியின் இந்த தொகுப்பில் படித்து தெரிந்து கொள்வோம் வாங்க..

வரலாற்றில் இன்று | Today History in Tamil

மே 28 கிரிகோரியன் ஆண்டின் 148 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 149 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 217 நாட்கள் உள்ளன.

நிகழ்வுகள்

1503 – இசுக்கொட்லாந்துக்கும் இங்கிலாந்துக்கும் இடையில் அமைதி உடன்பாடு எட்டப்பட்டது. இது 10 ஆண்டுகளில் முறிந்தது.
1533 – கான்டர்பரி ஆயர் தாமஸ் கிரான்மர் இங்கிலாந்து மன்னர் எட்டாம் என்றி-ஆன் பொலின் திருமணத்தை உறுதி செய்தார்.
1588 – எசுப்பானிய பெரும் கடற்படையெடுப்பு: 30,000 பேர்களுடன் 130 எசுப்பானியக் கப்பல்கள், பிரித்தானியக் கடற்படையினருடன் மோதும் பொருட்டு ஆங்கிலக் கால்வாயை நோக்கிய பயணத்தை லிஸ்பனில் இருந்து ஆரம்பித்தன.
1644 – இங்கிலாந்து உள்நாட்டுப் போர்: இங்கிலாந்து, போல்ட்டன் நகரில் யேம்சு இசுடான்லி தலைமையில் அரசுப் படைகள் 1,600 வரையான கிளர்ச்சியாளர்களைப் படுகொலை செய்தனர்.
1737 – வீனஸ் கோள் மேர்க்குரி கோளின் முன்னால் கடந்ததை ஜோன் பேவிஸ் என்ற வானியலாளர் அவதானித்தார்.
1802 – குவாதலூப்பில், 400 அடிமைக் கிளர்ச்சியாளர்கள் லூயி டெல்கிரே தலைமையில் நெப்போலியனின் படைகளிடம் சரணடைவதைத் தவிர்க்கும் பொருட்டு, தம்மைத் தாமே மாய்த்தனர்.
1830 – அமெரிக்க அரசுத்தலைவர் ஆன்ட்ரூ ஜாக்சன் அமெரிக்கப் பழங்குடிகளை அகற்றும் சட்டத்திற்கு ஒப்புதல் அளித்தார்.
1905 – உருசிய-சப்பானியப் போர்: சூசிமா என்ற இடத்தில் இடம்பெற்ற சமரில் உருசியக் கடற்படையின் பால்ட்டிக் பிரிவு சப்பானியர்களால் அழிக்கப்பட்டது.
1915 – சிங்கள-முஸ்லிம் கலவரம், 1915: இலங்கையின் கண்டியில் சிங்களவர்களுக்கும் முஸ்லிம்களுக்கும் இடையில் கலவரம் ஆரம்பித்து சூன் 5 இல் முடிவுக்கு வந்தது.
1918 – அசர்பைஜான் சனநாயகக் குடியரசு முதலாவது ஆர்மீனியக் குடியரசு ஆகியன விடுதலையை அறிவித்தன.
1926 – போர்த்துகலில் வன்முறையை அடக்க அங்கு தேசிய சர்வாதிகார ஆட்சி ஏற்படுத்தப்பட்டது.
1937 – போல்க்ஸ்வேகன், செருமானிய தானுந்து நிறுவனம் ஆரம்பிக்கப்பட்டது.
1940 – இரண்டாம் உலகப் போர்: பெல்ஜியம் செருமனியிடம் சரணடைந்தது. பெல்ஜியம் சண்டை முடிவுக்கு வந்தது.
1940 – இரண்டாம் உலகப் போர்: நோர்வே, பிரான்சு, போலந்து, பிரித்தானியப் படைகள் நோர்வேயின் நார்விக் நகரைக் கைப்பற்றின.
1942 – இரண்டாம் உலகப் போர்: நாட்சிகள் தமது சகாவான ரைன்ஹார்ட் ஐட்ரிக் படுகொலை செய்யபட்டமைக்குப் பதிலடியாக செக்கோசிலவாக்கியாவில் 1,800 பேரைக் கொன்று குவித்தனர்.
1948 – தென்னாப்பிரிக்காவின் பிரதமராக தானியேல் பிரான்சுவா மலான் தெரிவு செய்யப்பட்டார். இவர் பின்னர் இனவொதுக்கலை அமுல்படுத்தினார்.
1956 – பிரான்சுடன் இந்தியா கையொப்பமிட்ட ஆயநிலை அளிப்பு உடன்பாட்டின்படி, புதுச்சேரி ஒன்றியத்தில் பிரெஞ்சு மொழி சட்டப்படி ஆட்சிமொழியாகத் தொடர்ந்தது.
1958 – இலங்கை இனக் கலவரம், 1958: கல்கிசையில் தமிழருக்கு எதிராக வன்முறையில் ஈடுபட்ட ஆயிரத்திற்கும் அதிகமானோர் இராணுவத்தினரால் கலைக்கப்பட்டனர். தமிழர் ஒருவர் உயிருடன் எரிக்கப்பட்டார்.[1]
1974 – வட அயர்லாந்தில் அதிகாரப் பரவலாக்கம் குறித்த சன்னிங்டேல் உடன்பாடு முறிவடைந்தது.
1975 – 15 மேற்கு ஆப்பிரிக்க நாடுகள் இணைந்து மேற்காப்பிரிக்க நாடுகளின் பொருளாதார சமூகம் என்ற அமைப்பை ஏற்படுத்தினர்.
1977 – அமெரிக்காவின் கென்டக்கி, சவுத்கேட் என்ற இடத்தில் உணவு விடுதி ஒன்று தீப்பிடித்ததில் 165 பேர் உயிரிழந்தனர்.
1987 – மேற்கு செருமனியைச் சேர்ந்த 19-வயது மத்தாயஸ் றஸ்ட் என்பவர் சிறிய ரக விமானம் ஒன்றில் மொஸ்கோவில் செஞ்சதுக்கத்தில் தரையிறங்கினார். உடனடியாகக் கைது செய்யப்பட்ட இவர் 1988 ஆகத்து 13 இல் விடுவிக்கப்பட்டார்.
1991 – எதியோப்பியாவின் தலைநகர் அடிஸ் அபாபாவை எதியோப்பிய மக்கள் புரட்சி சனநாயக முன்னணியினர் கைப்பற்றினர். எத்தியோப்பிய உள்நாட்டுப் போர் முடிவுக்கு வந்தது.
1995 – உருசியாவின் நெஃப்டிகோர்ஸ்க் நகரில் இடம்பெற்ற 7.0 ரிக்டர் அளவு நிலநடுக்கத்தில் 1,989 பேர் உயிரிழந்தனர், 750 பேர் காயமடைந்தனர்.
1998 – பாக்கித்தான் ஐந்து அணுகுண்டு சோதனைகளை நிகழ்த்தியது. அமெரிக்கா, சப்பான் மற்றும் சில நாடுகள் பாக்கித்தானுக்கெதிராக பொருளாதாரத் தடைகளை அறிவித்தன.
1999 – இத்தாலி, மிலன் நகரில், லியொனார்டோ டா வின்சியின் புகழ் பெற்ற இரவு இராவுணவு என்ற புகழ்பெற்ற ஓவியம் 22 ஆண்டுகள் புனரமைப்பின் பின்னர் மீண்டும் காட்சிப்படுத்தப்பட்டது.
2007 – கொழும்பு இரத்மலானையில் இடம்பெற்ற குண்டுவெடிப்பில் குறைந்தது 7 பேர் கொல்லப்பட்டனர், 7 இராணுவத்தினர் உட்படப் பலர் காயமடைந்தனர்.[2]
2008 – 240-ஆண்டுகள் மன்னராட்சியின் பின்னர், நேபாளம் குடியரசாக அறிவிக்கப்பட்டது.
2010 – பாக்கித்தான், லாகூர் நகரில் இரண்டு மசூதிகளில் வெள்ளிக்கிழமை ஆராதனையின் போது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்களில் 94 பேர் கொல்லப்பட்டனர்.
2010 – மேற்கு வங்கத்தில், ஞானேசுவரி விரைவுத் தொடர்வண்டி தடம் புரண்டதில் 148 பயணிகள் உயிரிழந்தனர்.
2011 – மால்ட்டாவில் இடம்பெற்ற பொது வாக்கெடுப்பில், மணமுறிவுக்கு ஆதரவாக 53% மக்கள் வாக்களித்தனர்.

பிறப்புகள்

1736 – வில்லெம் யாக்கோப் வான் டி கிராஃப், ஒல்லாந்தர் கால இலங்கையின் 35வது ஆளுநர் (இ. 1804)
1807 – அகாசி லுயி, சுவிட்சர்லாந்து-அமெரிக்கத் தொல்லுயிரியலாளர், நிலவியலாளர் (இ. 1873)
1865 – மைசூர் வாசுதேவாச்சாரியார், கருநாடக இசைப் பாடகர் (இ. 1961)
1883 – வினாயக் தாமோதர் சாவர்க்கர், இந்தியக் கவிஞர், அரசியல்வாதி (இ. 1966)
1895 – உருடோல்ப் மின்கோவ்சுகி, செருமானிய-அமெரிக்க வானியலாளர் (இ. 1976)
1908 – இயான் பிளெமிங், ஆங்கிலேய ஊடகவியலாளர், எழுத்தாளர், ஜேம்சு பாண்டை உருவாக்கியவர் (இ. 1964)
1912 – உரூபி பேய்னி சுக்காட், ஆத்திரிய இயற்பியலாளர், வானியலாளர் (இ. 1981)
1914 – குடந்தை ப. சுந்தரேசனார், தமிழகத் தமிழறிஞர், இசை ஆய்வாளர் (இ. 1981)
1923 – என். டி. ராமராவ், தென்னிந்திய நடிகர், இயக்குநர், ஆந்திராவின் 10வது முதலமைச்சர் (இ. 1996)
1923 – டி. எம். தியாகராஜன், தமிழக கருநாடக இசைக் கலைஞர் (இ: 2007)
1925 – பிராங்க் பெ. மெக்டொனால்டு, அமெரிக்க வானியற்பியல் அறிஞர் (இ. 2012)
1930 – பிராங்க் டிரேக், அமெரிக்க வானியலாளர்
1946 – சச்சிதானந்தம், இந்தியக் கவிஞர்
1969 – ராப் ஃபோர்ட், கனடிய அரசியல்வாதி (இ. 2016)
1986 – செத் ராலின்சு, அமெரிக்க மற்போர் வல்லுனர், நடிகர்

இறப்புகள்

1843 – நோவா வெப்ஸ்டர், அமெரிக்க சொற்களஞ்சியத் தொகுப்பாளர் (பி. 1758)
1884 – சாமுவேல் ஃபிஸ்க் கிறீன், தமிழ் மருத்துவ முன்னோடி, அமெரிக்கக் கிறித்தவ ஊழியர் (பி. 1822)
1912 – பவுல் எமில் புவபோதிரான், பிரான்சிய வேதியியலாளர் (பி. 1838)
1937 – ஆல்பிரெட் ஆட்லர், ஆத்திரிய-இசுக்காட்டிய மருத்துவர், உளவியலாளர் (பி. 1870)
1950 – பாக்கியசோதி சரவணமுத்து, இலங்கை அரசியல்வாதி (பி. 1892)
1969 – சி. பஞ்சரத்தினம், இந்திய இயற்பியலாளர் (பி. 1934)
1973 – ஆ. பூவராகம் பிள்ளை, தமிழகத் தமிழறிஞர் (பி. 1899)
1998 – இராஜ அரியரத்தினம், ஈழத்துப் பத்திரிகையாளர், எழுத்தாளர் (பி. 1916)
1999 – பி. விட்டலாச்சாரியா, இந்தியத் திரைப்பட இயக்குநர், தயாரிப்பாளர் (பி. 1920)
2001 – உலிமிரி இராமலிங்கசுவாமி, இந்திய மருத்துவ அறிஞர் (பி. 1921)
2010 – கேரி கோல்மன், அமெரிக்க நடிகர் (பி. 1968)
2012 – மனசை ப. கீரன், தமிழக எழுத்தாளர் (பி. 1938)
2014 – மாயா ஏஞ்சலோ, அமெரிக்கக் கவிஞர் (பி. 1928)
2017 – அ. விநாயகமூர்த்தி, இலங்கை அரசியல்வாதி (பி. 1933)

சிறப்பு நாள்

மாதவிடாய் சுகாதார நாள்
குடியரசு நாள் (நேபாளம்)
குடியரசு நாள் (அசர்பைஜான், ஆர்மீனியா)

சதீஸ்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...