வரலாற்றில் இன்று ( 22.05.2024)

வரலாறு என்பது இறந்த காலத்தில் நிகழ்ந்த விஷயத்தை பற்றி நாம் தெரிந்து கொள்ளும் ஒன்றாகும். குறிப்பாக வரலாற்றில் ஒருவர் செய்த சாதனைகள், தியாகங்கள், சிறப்புகள் இதுபோன்ற பலவகையான முக்கிய விஷயங்கள் பற்றி அனைவருக்கும் தெரியப்படுத்தும் விஷயமாகும். தெளிவாக சொல்ல வேண்டும் என்றால் தங்கள் வாழும் காலத்தின் பின்னணியில் கடந்த காலத்தின் நிகழ்வுகளை விளக்கி வரலாறாக எழுதுகின்றனர். சரி இந்த பதிவில் நாம் நமது வாழ்வில் கடந்து செல்லும் ஒவ்வொரு நாட்களிலும் ஏதாவது ஒரு விஷயம் நிகழ்ந்திருக்கலாம் அந்த  வகையில் வரலாற்றில் இன்று என்ன நாள்? என்பதை பற்றி நாம் நமது மின்கைத்தடியின் இந்த தொகுப்பில் படித்து தெரிந்து கொள்வோம் வாங்க..

வரலாற்றில் இன்று | Today History in Tamil

மே 22 கிரிகோரியன் ஆண்டின் 142 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 143 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 223 நாட்கள் உள்ளன.

நிகழ்வுகள்

760 – ஏலியின் வால்வெள்ளி சூரியனுக்கு அருகாக சென்றமை 14-வது தடவையாக அவதானிக்கப்பட்டது.
1200 – இங்கிலாந்தின் ஜான் மன்னரும், பிரான்சின் இரண்டாம் பிலிப்பு மன்னரும் நார்மாண்டி போரை முடிவுக்குக் கொண்டு வரும் பொருட்டு உடன்படிக்கையில் கையெழுத்திட்டனர்.
1254 – பண்டைய செர்பிய இராச்சியத்தின் மன்னர் முதலாம் ஸ்டெஃபான் உரோசு வெனிசு குடியரசுடன் அமைதி ஒப்பந்தத்தை ஏற்படுத்திக் கொண்டார்.
1370 – பிரசெல்சு நகரில் பெருந்தொகையான யூதர்கள் படுகொலை செய்யப்பட்டதை அடுத்து யூத சமூகம் அங்கிருந்து வெளியேறியது.
1455 – ரோசாப்பூப் போர்கள் ஆரம்பம்: சென் அல்பான்சில் இடம்பெற்ற முதல் சமரில், யோர்க் கோமகன் ரிச்சார்டு இங்கிலாந்து மன்னர் ஆறாம் என்றியைக் கைது செய்தார்.
1629 – முப்பதாண்டுப் போரில் டென்மார்க்கின் தலையீட்டைத் தவிர்க்க, புனித உரோமைப் பேரரசர் இரண்டாம் பெர்டினான்டுக்கும், டென்மார்க் மன்னர் நான்காம் கிறித்தியானுக்கும் இடையில் ஒப்பந்தம் எட்டப்பட்டது.
1809 – வியென்னாவுக்கு அருகில் நெப்போலியன் பொனபார்ட்டின் படைகள் முதற்தடவையாக தோற்கடிக்கப்பட்டன.
1816 – இங்கிலாந்து, லிட்டில்போர்ட் என்ற இடத்தில், அதிக வேலையின்மை, மற்றும் தானிய விலை ஏற்றம் ஆகியவற்றுக்கு எதிராகக் கிளர்ச்சி இடம்பெற்றது.
1834 – இலங்கை சட்டவாக்கப் பேரவையின் முதலாவது கூட்டம் கொழும்பில் ஆரம்பமானது.[1]
1840 – நியூ சவுத் வேல்சுக்கு (இன்றைய ஆத்திரேலியாவின் மாநிலம்) பிரித்தானியக் குற்றவாளிகளை நாடுகடத்துதல் நிறுத்தப்பட்டது.
1848 – மர்தீனிக்கில் அடிமை முறை ஒழிக்கப்பட்டது.
1856 – தென் கரொலைனாவின் அமெரிக்கக் காங்கிரசு உறுப்பினர் பிரெஸ்டன் புரூக்சு மாசச்சூசெட்ஸ் மாநில செனட்டர் சார்ல்சு சம்னரை அமெரிக்காவில் அடிமைத்தொழில் பற்றி உரையாற்றியமைக்காக மேலவை மண்டபத்தில் வைத்து பிரம்பால் கடுமையாக அடித்தார்.
1863 – அமெரிக்க உள்நாட்டுப் போர்: அமெரிக்க ஒன்றியப் படைகள் ஆட்சன் துறைமுகம் மீதான தமது 48-நாள் முற்றுகையை ஆரம்பித்தன.
1900 – அசோசியேட்டட் பிரெசு நிறுவனம் நியூயார்க்கில் ஆரம்பிக்கப்பட்டது.
1906 – ரைட் சகோதரர்கள் தமது பறக்கும் கருவிக்கான காப்புரிமத்தைப் பெற்றனர்.
1915 – இசுக்கொட்லாந்தில் மூன்று தொடருந்துகள் ஒன்றோடொன்று மோதியதில் 227 பேர் உயிரிழந்தனர். 246 பேர் காயமடைந்தனர்.
1926 – குவோமின்டாங் சீனாவில் சங் கை செக் பொதுவுடைமைவாதிகளை பதவியில் இருந்து அகற்றினார்.
1927 – சீனாவில் சினிங் அருகே 8.3 நிலநடுக்கம் ஏற்பட்டதில் 200,000 பேர் வரை உயிரிழந்தனர்.
1939 – இரண்டாம் உலகப் போர்: செருமனி, இத்தாலி இரும்பு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன.
1941 – ஆங்கில-ஈராக்கியப் போர்: பிரித்தானியப் படைகள் பலூஜா நகரைக் கைப்பற்றின.
1942 – இரண்டாம் உலகப் போர்: மெக்சிக்கோ நேச நாடுகள் தரப்பில் போரில் குதித்தது.
1943 – ஜோசப் ஸ்டாலின் பொதுவுடைமை அனைத்துலகத்தைக் கலைத்தார்.
1957 – பல்கலைக்கழகங்களில் இனவொதுக்கலை தென்னாப்பிரிக்க அரசு அங்கீகரித்தது.
1958 – இலங்கை இனக் கலவரம், 1958: இலங்கையில் ஏற்பட்ட இனக்கலவரங்களில் 300 இலங்கைத் தமிழர்கள் சிங்களவர்களால் படுகொலை செய்யப்பட்டனர்.
1960 – தெற்கு சிலியில் நிகழ்ந்த 9.5 அளவு நிலநடுக்கம் மற்றும் ஆழிப்பேரலையினால் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்தனர்.
1962 – அமெரிக்காவின் போயிங் 707 விமானம் மிசூரியில் குண்டுவெடிப்பில் வீழ்ந்ததில் அதில் பயணம் செய்த அனைத்து 45 பேரும் உயிரிழந்தனர்.
1967 – எகிப்து டிரான் நீரிணையை இசுரேலியக் கப்பல்கள் செல்லத் தடை விதித்தது.
1967 – பெல்ஜியம் தலைநகர் பிரசல்சில் கடைத் தொகுதி ஒன்று தீப்பிடித்ததில் 323 பேர் உயிரிழந்து, 150 பேர் காயமடைந்தனர்.
1968 – அமெரிக்க அணு-ஆற்றல் நீர்மூழ்கிக் கப்பல் ஸ்கோர்ப்பியன் மூழ்கியதில் 99 பேர் உயிரிழந்தனர்.
1972 – இலங்கையில் புதிய அரசியலமைப்புச் சட்டம் அமுலுக்கு வந்து குடியரசு ஆகியது. சிலோன், ஸ்ரீலங்கா எனப் பெயர் மாற்றம் பெற்று, பொதுநலவாய நாடுகள் அமைப்பில் அங்கத்துவம் பெற்றது.
1987 – உத்தரப் பிரதேசம், மீரட் நகரில் 42 முசுலிம் இளைஞர்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
1987 – முதலாவது இரக்பி உலகக்கிண்ணப் போட்டிகள் நியூசிலாந்து, ஓக்லாந்து நகரில் நடைபெற்றது.
1990 – வடக்கு யேமன் மற்றும் தெற்கு யேமன் ஆகியன இணைந்து யேமன் குடியரசு ஆகியது.
1990 – விண்டோஸ் 3.0 வெளியிடப்பட்டது.
1992 – பொசுனியா எர்செகோவினா, குரோவாசியா, சுலோவீனியா ஆகிய நாடுகள் ஐநாவில் இணைந்தன.
2010 – ஏர் இந்தியா எக்சுபிரசு போயிங் 737 மங்களூரில் வீழ்ந்ததில் 166 பேரில் 158 பேர் உயிரிழந்தனர்.
2011 – அமெரிக்காவின் மிசூரி மாநிலத்தில் இடம்பெற்ற சூறாவளியில் 162 பேர் உயிரிழந்தனர்.
2015 – அயர்லாந்து குடியரசு உலகின் முதலாவது நாடாக ஒருபால் திருமணத்தை சட்டபூர்வமாக்கியது.
2017 – மான்செஸ்டர் குண்டுவெடிப்பு 2017: அரியானா கிராண்டி இசை நிகழ்ச்சியில் குண்டு வெடித்ததில் 22 பேர் கொல்லப்பட்டனர்.
2018தூத்துக்குடி படுகொலைகள்: தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராகப் போராடிய மக்கள் மீது தமிழ்நாடு காவல்துறையும் துணை பாதுகாப்புப் படையும் நடத்திய தாக்குதலில் 13 பேர் கொல்லப்பட்டனர்.

பிறப்புகள்

1408 – அன்னமாச்சாரியார், இந்து சமயப் பெரியார், கருநாடக இசை அறிஞர் (இ. 1503)
1772 – இராசாராம் மோகன் ராய், இந்திய மெய்யியலாளர் (இ. 1833)
1783 – வில்லியம் ஸ்டர்ஜியன், ஆங்கிலேய இயற்பியலாளர், கண்டுபிடிப்பாளர் (இ. 1850)
1813 – ரிச்சார்ட் வாக்னர், செருமானிய இசையமைப்பாளர் (இ. 1883)
1844 – மேரி கசாட், அமெரிக்க ஓவியர் (இ. 1926)
1859 – ஆர்தர் கொனன் டொயில், பிரித்தானிய எழுத்தாளர் (இ. 1930)
1867 – உமையாள்புரம் சுவாமிநாத ஐயர், தமிழக கருநாடக இசைக் கலைஞர் (இ. 1946)
1900 – தேவதாஸ் காந்தி, இந்திய விடுதலைச் செயற்பாட்டாளர், காந்தியவாதி (இ. 1957)
1913 – தோப்பூர் சேதுபதி சதாசிவன், இந்திய தாவர நோயியல் நிபுணர் (இ. 2001)
1917 – சுனிதி சௌத்ரி, இந்திய தேசியவாதி (இ. 1988)
1926 – தமிழ்வாணன், தமிழக எழுத்தாளர், இதழாசிரியர் (இ. 1977)
1933 – ஊரன் அடிகள், தமிழக நூலாசிரியர், உரையாசிரியர், பத்திரிகையாசிரியர்
1935 – சி. வி. சந்திரசேகர், தமிழக பரதநாட்டியக் கலைஞர், நடன அமைப்பாளர்
1936 – எக்கார்ட் விம்மர், அமெரிக்கத் தீநுண்ம ஆய்வாளர்
1940 – வை. சச்சிதானந்தசிவம், ஈழத்து ஓவியர், எழுத்தாளர் (இ. 2006)
1940 – பி. விருத்தாசலம், தமிழகத் தமிழறிஞர், பேராசிரியர் (இ. 2010)
1944 – வைகோ, தமிழக அரசியல்வாதி
1946 – இலியூத்மிலா வாசில்யெவ்னா சுரவ்லோவா, உருசிய-உக்ரைனிய வானியலாளர்
1948 – நெடுமுடி வேணு, இந்திய நடிகர்
1954 – சுச்சி நாக்காமுரா, நோபல் பரிசு பெற்ற சப்பானிய-அமெரிக்க இயற்பியலாளர்
1957 – சீமா, தென்னிந்தியத் திரைப்பட நடிகை
1959 – மெகபூபா முப்தி, இந்திய அரசியல்வாதி
1984 – டஸ்டின் மாஸ்கோவிட்ஸ், முகநூலை ஆரம்பித்த அமெரிக்கத் தொழிலதிபர்
1987 – நோவாக் ஜோக்கொவிச், செர்பிய டென்னிசு வீரர்

இறப்புகள்

337 – முதலாம் கான்ஸ்டன்டைன், உரோமைப் பேரரசர் (பி. 272
1457 – ரீட்டா, இத்தாலியப் புனிதர் (பி. 1381)
1545 – சேர் சா சூரி, இந்திய அரசர் (பி. 1486)
1885 – விக்டர் ஹியூகோ, பிரான்சிய புதின எழுத்தாளர், கவிஞர் (பி. 1802)
1932 – அகஸ்டா, லேடி கிரிகோரி, ஆங்கிலேய-அயர்லாந்து செயற்பாட்டாளர், நாடகாசிரியர் (பி. 1852)
1948 – நெடுமுடி வேணு, மலையாளத் திரைப்பட நடிகர்
1967 – லாங்ஸ்ரன் ஹியூஸ், அமெரிக்கக் கவிஞர், எழுத்தாளர் (பி. 1902)
1991 – எஸ். ஏ. டாங்கே, இந்திய அரசியல்வாதி (பி. 1899)
1997 – டி. ஆர். ராமண்ணா, தென்னிந்தியத் திரைப்பட இயக்குநர் (பி. 1923)
2011 – சின்னக்குத்தூசி, தமிழ்நாட்டின் பத்திரிகையாளர் (பி. 1934)

சிறப்பு நாள்

அடிமை ஒழிப்பு நாள் (மர்தினிக்கு)
குடியரசு நாள் (இலங்கை)
ஒற்றுமை நாள் (யெமன், 1990)
பன்னாட்டு பல்லுயிர் பெருக்க நாள்
தேசிய இறைமை நாள் (எயிட்டி)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Follow by Email
Instagram
Telegram
WhatsApp
FbMessenger
URL has been copied successfully!