வரலாற்றில் இன்று ( 29.04.2024 )

வரலாறு என்பது இறந்த காலத்தில் நிகழ்ந்த விஷயத்தை பற்றி நாம் தெரிந்து கொள்ளும் ஒன்றாகும். குறிப்பாக வரலாற்றில் ஒருவர் செய்த சாதனைகள், தியாகங்கள், சிறப்புகள் இதுபோன்ற பலவகையான முக்கிய விஷயங்கள் பற்றி அனைவருக்கும் தெரியப்படுத்தும் விஷயமாகும். தெளிவாக சொல்ல வேண்டும் என்றால் தங்கள் வாழும் காலத்தின் பின்னணியில் கடந்த காலத்தின் நிகழ்வுகளை விளக்கி வரலாறாக எழுதுகின்றனர். சரி இந்த பதிவில் நாம் நமது வாழ்வில் கடந்து செல்லும் ஒவ்வொரு நாட்களிலும் ஏதாவது ஒரு விஷயம் நிகழ்ந்திருக்கலாம் அந்த  வகையில் வரலாற்றில் இன்று என்ன நாள்? என்பதை பற்றி நாம் நமது மின்கைத்தடியின் இந்த தொகுப்பில் படித்து தெரிந்து கொள்வோம் வாங்க..

வரலாற்றில் இன்று | Today History in Tamil

ஏப்ரல் 29 கிரிகோரியன் ஆண்டின் 119 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 120 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 246 நாட்கள் உள்ளன.

நிகழ்வுகள்

1386 – சிமோலியென்சுக் அரசு லித்துவேனியாவினால் தோற்கடிக்கப்பட்டு அதன் அடிமை நாடானது.
1672 – பிரான்சின் பதினான்காம் லூயி மன்னன் நெதர்லாந்தை முற்றுகையிட்டார்.
1770 – கேப்டன் ஜேம்ஸ் குக் ஆத்திரேலியாவின் இன்றைய சிட்னியை அடைந்து தான் சென்ற இடத்துக்கு பொட்டனி விரிகுடா எனப் பெயரிட்டார்.
1781 – அமெரிக்கப் புரட்சிப் போர்: பிரித்தானிய, பிரெஞ்சுக் கப்பல்கள் மர்தீனிக் கரையோரப் பகுதியில்ல் சமரில் ஈduபட்டன.
1862 – அமெரிக்க உள்நாட்டுப் போர்: நியூ ஓர்லென்ஸ் நகரம் கூட்டணிப் படையிடம் வீழ்ந்தது.
1903 – கனடாவின் அல்பர்ட்டா மாவட்டத்தில் 30 மில். கன மீட்டர் நிலச்சரிவு ஏற்பட்டதில் 70 பேர் உயிரிழந்தனர்.
1910 – பிரித்தானியப் பொதுமக்களுக்கு வளங்களைப் பகிர்ந்தளிக்கும் திட்டத்துடனான வரவு செலவுத் திட்டத்தை ஐக்கிய இராச்சியத்தின் நாடாளுமன்றம் அங்கீகரித்தது.
1916 – முதலாம் உலகப் போர்: பிரித்தானியாவின் 6-வது இந்தியப் படைப் பிரிவு உதுமானியப் படைகளிடம் ஈராக்கின் கூட் என்ற இடத்தில் சரணடைந்தது.
1916 – ஆறு நாட்கள் சமரின் பின்னர் அயர்லாந்துக் கிளர்ச்சித் தலைவர்கள் பிரித்தானியப் படைகளிடம் டப்லின் நகரில் சரணடைந்தனர்.
1945 – இரண்டாம் உலகப் போர்: இத்தாலியில் நிலை கொண்டிருந்த நாட்சி செருமானிய இராணுவம் நேச அணிகளிடம் நிபந்தனையின்றி சரணடைந்தது.
1945 – இரண்டாம் உலகப் போர்: நெதர்லாந்தின் பல பகுதிகளிலும் உணவுப்பொதிகளை விமானத்தில் இருந்து வீசும் நடவடிக்கையை ஐக்கிய இராச்சிய வான்படையினர் ஆரம்பித்தனர்.
1945 – இரண்டாம் உலகப் போர்: இட்லர் இவா பிரான் என்ற தனது நீண்ட நாளைய காதலியை தனது பெர்லின் சுரங்க அறையில் வைத்துத் திருமணம் புரிந்தார். இருவரும் அடுத்த நாள் தற்கொலை புரிந்து கொண்டனர்.
1945 – இரண்டாம் உலகப் போர்: செருமனியில் டாக்கவ் என்ற இடத்தில் இருந்த டேச்சு அரசியல் கைதிகள் முகாம் அமெரிக்கப் படைகளினால் விடுவிக்கப்பட்டது.
1946 – சப்பானின் முன்னாள் பிரதமர் இடெக்கி டோஜோ மற்றும் 28 முன்னாள் தலைவர்கள் போர்க் குற்றங்களுக்காகக் கைது செய்யப்பட்டனர்.
1951 – சீன அரச மன்றத்துக்கான திபெத்தியப் பிரதிநிதிகள் பெய்ஜிங் நகரை வந்தடைந்து, திபெத்திய சுயாட்சிக்கும், சீன இறையாண்மைக்குமான 17-அம்சத் திட்டம் ஒன்றை வரைந்தனர்.
1953 – ஐக்கிய அமெரிக்காவின் முதலாவது முப்பரிமாணத் தொலைக்காட்சி சோதனை ஒளிபரப்பு காட்சிப்படுத்தப்பட்டது.
1967 – வியட்நாம் போர்: அமெரிக்க இராணுவத்தில் சேர மறுத்த காரணத்தினால், முகம்மது அலியின் குத்துச்சண்டைப் பதக்கங்கள் திரும்பப் பெற்றுக் கொள்ளப்பட்டன.
1970 – வியட்நாம் போர்: அமெரிக்க மற்றும் தென் வியட்நாம் படைகள் வியட்கொங் போராளிகளைத் தேடி கம்போடியாவை முற்றுகையிட்டன.
1975 – வியட்நாம் போர்: அமெரிக்க குடிமக்கள் சாய்கோன் நகரில் இருந்து தமது குடிமக்களை வெளியேற்றும் பணியை அமெரிக்கா ஆரம்பித்தது. வியட்நாமில் அமெரிக்கப் பங்களிப்பு முடிவுக்கு வந்தது
1986 – லாஸ் ஏஞ்சலஸ் நகர பொது நூலகம் தீப்பிடித்ததில் 400,000 நூல்கள் அழிந்தன.
1991 – வங்காளதேசத்தில், சிட்டகொங்கில் இடம்பெற்ற 155 கிமீ/மணி வேக சூறாவளியில் 138,000 பேர் வரையில் உயிரிழந்தனர். 10 மில்லியன் பேர் வீடுகளை இழந்தனர்.
1991 – சியார்சியாவில் 7.0 ரிக்டர் அளவு நிலநடுக்கம் தாக்கியதில் 270 பேர் உயிரிழந்தனர்.
1995 – நவக்கிரி என்ற இடத்தில் இலங்கை இராணுவத்தினரின் அவ்ரோ விமானம் 50 படையினருடன் விடுதலைப் புலிகளால் சுட்டு வீழ்த்தப்பட்டது.
1997 – 1993 வேதி ஆயுத உடன்படிக்கை அமுலுக்கு வந்தது. வேதி ஆயுதங்கள் தயாரிப்பு தடை செய்யப்பட்டது.
2005 – 29 ஆண்டு கால முற்றுகையின் பின்னர் லெபனானில் இருந்து சிரியா முற்றாக வெளியேறியது.
2007 – வான்புலிகளின் இரண்டு வான்கலங்கள் கொழும்புக்கு வடக்கே 3 மைல் தொலைவில் உள்ள கொலன்னாவை எண்ணெய்க் குதங்களையும் 10 மைல் தொலைவில் உள்ள கெரவலப்பிட்டி எண்ணெய் குதங்களையும் குண்டு வீசித் தாக்கின.
2011 – இலவரசர் வில்லியம், கேத்தரீன் ஆகியோரின் திருமணம் இலண்டன் வெசுட்மினிஸ்டர்] மடத்தில் நடைபெற்றது.

பிறப்புகள்

1769 – ஆர்தர் வெல்லஸ்லி, முதலாம் வெல்லிங்டன் பிரபு (இ. 1852)
1818 – உருசியாவின் இரண்டாம் அலெக்சாந்தர் (இ. 1881)
1848 – ரவி வர்மா, இந்திய ஓவியர் (இ. 1906)
1864 – குருதத்த வித்யார்த்தி, இந்திய சமூக சேவகர், ஆரியசமாசத்தின் தலைவர் (இ. 1890)
1872 – பாரெசுட்டு இரே மவுள்டன், அமெரிக்க வானியலாளர் (இ. 1952)
1891 – பாரதிதாசன், தமிழகக் கவிஞர், விடுதலைப் போராட்ட செயற்பாட்டாளர் (இ. 1964)
1893 – அரால்டு இயூரீ, நோபல் பரிசு பெற்ற அமெரிக்க வேதியியலாளர் (இ. 1981)
1901 – இறோகித்தோ, சப்பானியப் பேரரசர் (இ. 1989)
1919 – அல்லா ரக்கா, இந்திய தபேலா கலைஞர் (இ. 2000)
1936 – சூபின் மேத்தா, இந்திய மேற்கத்திய, கீழை செவ்வியல் இசை அமைப்பாளர்
1950 – பிலிப் நோய்ஸ், ஆத்திரேலிய இயக்குநர், தயாரிப்பாளர்
1968 – கொலிண்டா கிராபர் கிட்டாரோவிக், குரொவாசியாவின் 4வது அரசுத்தலைவர்
1970 – அன்ட்ரே அகாசி, அமெரிக்க டென்னிசு வீரர்
1973 – சுவர்ணலதா, தென்னிந்தியத் திரைப்படப் பின்னணிப் பாடகி (இ. 2010)
1978 – பாப் பிரையன், அமெரிக்க டென்னிசு வீரர்
1978 – மைக் பிரையன், அமெரிக்க டென்னிசு வீரர்
1991 – ஓவியா, தென்னிந்திய நடிகை

இறப்புகள்

1380 – சியன்னா நகர கத்ரீன், இத்தாலிய மெய்யியலாளர், புனிதர் (பி. 1347)
1676 – மைக்கெல் டி ருய்ட்டர், இடச்சு இராணுவத் தளபதி (பி. 1607)
1793 – ஜான் மிச்சல், ஆங்கிலேய நிலவியலாளர், வானியலாளர் (பி. 1724)
1933 – அனகாரிக தர்மபால, இலங்கை பௌத்த துறவி, சிங்கள-பௌத்த தேசியவாதி (பி. 1864)
1951 – லுட்விக் விட்கென்ஸ்டைன், ஆத்திரிய-ஆங்கிலேய மெய்யியலாளர் (பி. 1889)
1971 – நிக்கொலாய் பரபாசொவ், சோவியத் வானியலாளர் (பி. 1894)
1980 – ஆல்பிரட் ஹிட்ச்காக், ஆங்கிலேய-அமெரிக்க இயக்குநர், தயாரிப்பாளர் (பி. 1899)
2008 – ஆல்பர்ட் ஹாப்மன், சுவிட்சர்லாந்து வேதியியலாளர் (பி. 1906)
2015 – கோபுலு, தமிழக ஓவியர் (பி. 1924)
2020 – இர்பான் கான், இந்திய நடிகர் (பி. 1967)

சிறப்பு நாள்

வேதிப் போரில் பாதிக்கப்பட்டோருக்கான நினைவு நாள் (ஐநா)
பன்னாட்டு நடன நாள் (யுனெசுக்கோ)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Follow by Email
Instagram
Telegram
WhatsApp
FbMessenger
URL has been copied successfully!