வாய்ப்புண்களை உடனே போக்க இத ட்ரை பண்ணுங்க!
வாய்ப்புண்களை உடனே போக்க இத ட்ரை பண்ணுங்க!
வாயில் உண்டாகும் அல்சரை குணப்படுத்த இயற்கையான வழிகள்.
வாயில் அல்சர் என்பது வேறொன்றுமல்ல சற்று தீவிரமாக அதிகரித்த வாய்ப்புண் தான். கன்னக்கதுப்புகளிலும் உதட்டு ஓரங்களிலும் நாக்கிலும் சிறு கொப்புளங்கள், சிவந்து போதல், வெடிப்பு, இரத்தக்கசிவு ஆகியவை வாய் அல்சர் இருப்பதற்கான அறிகுறிகள். வாய்ப்புண் உடையவர்கள் தொடர்ந்து வாய்ப்புண்ணால் அவதிப்படுவதை காண முடியும். எந்த உணவை சாப்பிட்டாலும் காரமாக இருப்பது போன்ற உணர்வு தோன்றும். அதிக இனிப்பையும் புளிப்பு சுவையையும் கூட இவர்களால் சுவைக்க முடியாது. வாய்ப்புண் வர பல்வேறு காரணங்கள் உண்டு. அவற்றில் முதன்மையான சிலவற்றை கீழே பார்க்கலாம்.
வாய்ப்புண் ஏற்பட காரணங்கள்:
வாய்ப்புண்ணிற்கு முதன்மையான காரணம் வயிற்றிலும் அல்சர் இருப்பதே ஆகும். இரைப்பையில் உணவுக் குடல் வால்களில் சுரக்கும் அதிகப்படியான அமிலம் அல்லது நேரந்தவறிய உணவு முறைகளால் வயிற்றில் அல்சர் ஏற்படுகிறது. இது வாயிலும் வெளிப்படுகிறது.
ஊட்டச்சத்துக்கள் குறைபாடு, இரத்தசோகை மற்றும் வைட்டமின் பி-காம்ப்ளக்ஸ் குறைபாடும் வாய்ப்புண்ணுக்கு மற்றொரு காரணமாக அமைகிறது.சிலருக்கு பற்களின் அமைப்பு இயற்கையிலேயே மிகவும் கூர்மையாக இருக்கும் அல்லது ஏதேனும் விபத்துகளால் பற்கள் வடிவம் மாறிவிடும்.
இத்தகையவர்களுக்கு தொடர்ந்து அவர்களுடைய கூர்மையான பற்கள் வாயில் நாக்கில் உராய்ந்து காயங்களை ஏற்படுத்தி புண்ணை ஏற்படுத்தும்.
சில சமயம் வேறு ஏதாவது உடல் உபாதைகளுக்காக எடுத்துக் கொள்ளும் வீரியமான மருந்துகள் வாய்ப்புண்ணையும் வயிற்றுப் புண்ணையும் உருவாக்கி விடுகின்றன. நீண்ட நாள் புகைப்பழக்கம், மது, பான், குட்கா, வெற்றிலை போன்ற பழக்கங்கள் கண்டிப்பாக வாய்ப்புண்ணுக்கு முக்கியமான மற்றொரு காரணமாகும்.வாய்ப்புண் இருப்பவர்கள் வீட்டில் இருக்கும் தேனை கொண்டே இயற்கையான வழியில் நிவாரணம் காணலாம்.தேன்:
தேனில் உள்ள புண்ணை ஆற்றக்கூடிய ஆன்டி செப்டிக் குணங்கள் வாய்ப்புண்ணை ஆற்றும். வாயில் புண் உள்ள இடங்களில் விரலால் தேனை எடுத்து தடவி விடவும். இதனால் நிச்சயம் குணம் தெரியும். தேனுடன் மஞ்சள் ஐ கலந்து வாய்ப்புண் இருக்கும் இடத்தில் தடவினாலும் விரைவில் குணமாகும்.