ஏரி உடைந்ததால் வெள்ளக்காடான பெங்களூரு

 ஏரி உடைந்ததால் வெள்ளக்காடான பெங்களூரு

ஏரி உடைந்ததால் வெள்ளக்காடான பெங்களூரு!

          பெங்களூரு : பெங்களூருவின் ஹூமாவு பகுதியில் ஏரி கரையின் ஒரு பகுதி இடிந்ததால், குடியிருப்பு பகுதிகளுக்குள் வெள்ளம் நுழைந்தது. திடீரென ஏற்பட்ட வெள்ளத்தால் 250 குடும்பங்கள் வீடுகளை விட்டு வெளியேற முடியாத நிலை ஏற்பட்டது.

        இச்சம்பவம் குறித்து மேயர் கவுதம் குமார் கூறுகையில், அப்பகுதியில் உள்ள சிலர் போர்வெல் போடுபவர்களின் துணையுடன் ஏரி கரையில் குடிநீர் குழாய் இணைப்பை சரி செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது எதிர்பாராத விதமாக ஏரி கரையின் ஒரு பகுதியில் உடைப்பு ஏற்பட்டுள்ளது.

இதனால் ஏரி நீர் முழுவதும் குடியிருப்பு பகுதிகளுக்கள் சென்றது. ஏராளமான கார்கள், இரு சக்கர வாகனங்கள் நீரில் மிதக்கின்றன. வெள்ளத்தில் சிக்கி உள்ள 250 குடும்பங்களை சேர்ந்தவர்களை மீட்கும் பணி நடந்து வருகிறது என்றார்.

       250 குடும்பங்களை சேர்ந்தவர்களை பாதுகாப்பான இடத்திற்கு மாற்றும் வரை அவர்களுக்கு தேவையான உணவுகள், அவசர கால அடிப்படையில் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஏரி கரையின் உடைப்பை சரி செய்யும் பணியில் பணியாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர். அத்துடன் ஏரி உடைப்பிற்கு காரணமானவர்கள் குறித்தும் மாநகராட்சி அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.


admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...