இன்றைய ராசி பலன்கள் – 26.11.2019 செவ்வாய்க்கிழமை – ஜோதிடர் அ.மோகன்ராஜ்

இன்றைய ராசி பலன்கள் – 26.11.2019 செவ்வாய்க்கிழமை – ஜோதிடர் அ.மோகன்ராஜ்
மேஷம் :
குடும்பத்தில் பெரியவர்களிடம் அனுசரித்து செல்லவும் நெருக்கமானவர்களிடம் நிதானத்துடன் செயல்படவும். வியாபாரத்தில் அலைச்சல்கள் ஏற்படலாம். உத்தியோகத்தில் பொறுப்புகள் உயரும். செய்யும் செயல்களில் கவனத்துடன் இருக்கவும். திறமைகள் வெளிப்படுவதற்கான வாய்ப்புகள் அமையும்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிவப்பு
அஸ்வினி : அனுசரித்து செல்லவும்.
பரணி : நிதானத்துடன் செயல்படவும்.
கிருத்திகை : பொறுப்புகள் உயரும்.
————————————-
ரிஷபம் :
மனதில் நினைத்த எண்ணங்கள் நிறைவேறுவதற்கான சூழல் உண்டாகும். வெளியூரிலிருந்து புதிய வேலைவாய்ப்புகள் கிடைக்கும். உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். வர்த்தகம் தொடர்பான முதலீடுகளில் கவனம் வேண்டும். திருமண முயற்சிகளில் அலைச்சலுக்கு பின் அனுகூலமான பலன்கள் உண்டாகும்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : சந்தன வெள்ளை நிறம்
கிருத்திகை : எண்ணங்கள் நிறைவேறும்.
ரோகிணி : வாய்ப்புகள் கிடைக்கும்.
மிருகசீரிஷம் : அனுகூலமான நாள்.
————————————-
மிதுனம் :
உழைப்பிற்கேற்ற உயர்வு கிடைப்பதில் காலதாமதம் ஏற்படும். தொழில் சார்ந்த பயணங்கள் கைகூடும். உணவு விஷயத்தில் கவனம் வேண்டும். சுயதொழிலில் அபிவிருத்திக்கான சூழல் உண்டாகும். தலைமை அதிகாரிகளிடம் நிதானத்துடன் இருக்கவும். புதுவிதமான இலக்குகளை நிர்ணயம் செய்வீர்கள்.
அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்
மிருகசீரிஷம் : காலதாமதம் ஏற்படும்.
திருவாதிரை : பயணங்கள் கைகூடும்.
புனர்பூசம் : அபிவிருத்தி உண்டாகும்.
————————————-
கடகம் :
எடுக்கும் முயற்சிகளுக்கு பெரிய மனிதர்களின் அன்பும், ஆதரவும் கிடைக்கும். வேலை விஷயமாக வெளியூர் பயணங்கள் செல்ல நேரிடும். உறவினர்களின் வருகையால் குடும்பத்தில் கலகலப்பான சூழல் ஏற்படும். வியாபாரத்தில் நிலுவையில் இருந்துவந்த பழைய பாக்கிகள் வசூலாகும். ஆரோக்கியதில் கவனம் வேண்டும்.
அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : ஊதா நிறம்
புனர்பூசம் : ஆதரவு கிடைக்கும்.
பூசம் : கலகலப்பான நாள்.
ஆயில்யம் : பாக்கிகள் வசூலாகும்.
————————————-
சிம்மம் :
வழக்கு தொடர்பான செயல்களில் எண்ணிய ஆதரவுகள் கிடைக்கும். பிரபலமானவர்களின் அறிமுகம் சாதகமான பலனை அளிக்கும். வியாபாரத்தில் கூட்டாளிகளின் உதவியால் நல்ல முன்னேற்றம் ஏற்படும். வர்த்தகம் தொடர்பான செயல்பாடுகளில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். பயணங்களால் அனுகூலம் உண்டாகும்.
அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : சாம்பல் நிறம்
மகம் : ஆதரவுகள் கிடைக்கும்.
பூரம் : முன்னேற்றம் ஏற்படும்.
உத்திரம் : லாபம் கிடைக்கும்.
————————————-
கன்னி :
புத்திரர்களிடம் அனுசரித்து செல்லவும். விளையாட்டு வீரர்கள் போட்டியில் கவனத்துடன் செயல்படுவும். கடன்களை அடைப்பதற்கான முயற்சிகள் மேலோங்கும். உத்தியோகத்தில் எதிர்பார்த்த இடமாற்றம் சாதகமான பலனை அளிக்கும். அறக்காரியங்களில் ஈடுபட்டு மனமகிழ்ச்சி அடைவீர்கள்.
அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : பல வண்ண நிறங்கள்
உத்திரம் : அனுசரித்து செல்லவும்.
அஸ்தம் : முயற்சிகள் மேலோங்கும்.
சித்திரை : இடமாற்றம் உண்டாகும்.
————————————-
துலாம் :
சுபச்செய்திகள் கிடைக்கப்பெற்று மனமகிழ்ச்சி அடைவீர்கள். ஆடை, ஆபரணங்கள் வாங்குவதில் ஆர்வம் உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் ஏற்படும். வியாபார முன்னேற்றத்திற்காக எடுக்கும் முயற்சிகளில் சற்று சிந்தித்து செயல்படவும். குடும்பத்தில் உள்ளவர்களிடம் அனுசரித்து நடந்து கொள்ளவும்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிவப்பு
சித்திரை : மனமகிழ்ச்சியான நாள்.
சுவாதி : காரியசித்தி உண்டாகும்.
விசாகம் : சிந்தித்து செயல்படவும்.
————————————-
விருச்சிகம் :
வாகனப் பயணங்களால் அனுகூலமான பலன்கள் உண்டாகும். நண்பர்களின் மூலம் பொருளாதாரம் மேம்படும். வியாபாரத்தில் கொடுக்கல்-வாங்கல்கள் திருப்திகரமாக இருக்கும். வீட்டு மனை வாங்குவதற்கான எண்ணங்கள் மேம்படும். குடும்பத்தில் விட்டு கொடுத்து செல்வதன் மூலம் பிரச்சனைகளை தவிர்க்கலாம்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : அடர் மஞ்சள்
விசாகம் : பயணங்கள் உண்டாகும்.
அனுஷம் : பொருளாதாரம் மேம்படும்.
கேட்டை : திருப்திகரமான நாள்.
————————————-
தனுசு :
உடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றமான சூழல் உண்டாகும். திருமணப் பேச்சுவார்த்தைகளில் இருந்த தடைகள் நீங்கும். பழைய நினைவுகளால் சஞ்சலமான சூழல் உண்டாகும். விலை உயர்ந்த பொருட்களை வாங்குவதில் ஆர்வம் உண்டாகும். தொழில் சம்பந்தமான வெளிவட்டார தொடர்புகள் விரிவடையும்.
அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : இளம் பச்சை
மூலம் : முன்னேற்றமான நாள்.
பூராடம் : தடைகள் நீங்கும்.
உத்திராடம் : நட்பு வட்டம் விரிவடையும்.
————————————-
மகரம் :
குடும்ப உறுப்பினர்களிடம் இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். திருமணப் பேச்சுவார்த்தைகளில் இருந்த தடைகள் விலகி முன்னேற்றம் ஏற்படும். மற்றவர்களின் குணமறிந்து நடந்து கொள்வது மேன்மை அளிக்கும். திருத்தல பயணங்கள் மேற்கொள்வதற்கான வாய்ப்புகள் அமையும். குழப்பங்களில் இருந்து தெளிவு கிடைக்கும்.
அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்
உத்திராடம் : கருத்து வேறுபாடுகள் நீங்கும்.
திருவோணம் : முன்னேற்றம் உண்டாகும்.
அவிட்டம் : தெளிவு கிடைக்கும்.
————————————-
கும்பம் :
திட்டமிட்ட செயல்களை தைரியத்துடன் செயல்படுத்தவும். உத்தியோகத்தில் உழைப்பிற்கேற்ற ஊதிய உயர்வு கிடைப்பதற்கான வாய்ப்புகள் உருவாகும். உறவினர்களின் மூலம் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். மனதில் புதுவிதமான சிந்தனைகள் தோன்றும். பூமி விருத்திக்கான பணிகளை மேற்கொள்வீர்கள்.
அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : அடர் பச்சை
அவிட்டம் : தைரியத்துடன் செயல்படுவீர்கள்.
சதயம் : வாய்ப்புகள் உருவாகும்.
பூரட்டாதி : சிந்தனைகள் தோன்றும்.
————————————-
மீனம் :
எதிர்பாராத தனவரவு உண்டாகும். வீட்டில் பெரியவர்களின் ஆதரவும், ஆசியும் கிடைக்கும். உடல் ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றங்கள் ஏற்படும். தொழில், வியாபாரத்தில் புதிய கூட்டாளிகள் இணைவார்கள். உத்தியோகத்தில் இருந்துவந்த இன்னல்கள் குறையும். பொருளாதாரம் சிறப்பாக இருக்கும்.
அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்
பூரட்டாதி : தனவரவு உண்டாகும்.
உத்திரட்டாதி : ஆசிகள் கிடைக்கும்.
ரேவதி : இன்னல்கள் குறையும்.
————————————-
        – ஜோதிடர் அ.மோகன்ராஜ்.

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...