வரலாற்றில் இன்று (16.03.2024 )

 வரலாற்றில் இன்று (16.03.2024 )

வரலாறு என்பது இறந்த காலத்தில் நிகழ்ந்த விஷயத்தை பற்றி நாம் தெரிந்து கொள்ளும் ஒன்றாகும். குறிப்பாக வரலாற்றில் ஒருவர் செய்த சாதனைகள், தியாகங்கள், சிறப்புகள் இதுபோன்ற பலவகையான முக்கிய விஷயங்கள் பற்றி அனைவருக்கும் தெரியப்படுத்தும் விஷயமாகும். தெளிவாக சொல்ல வேண்டும் என்றால் தங்கள் வாழும் காலத்தின் பின்னணியில் கடந்த காலத்தின் நிகழ்வுகளை விளக்கி வரலாறாக எழுதுகின்றனர். சரி இந்த பதிவில் நாம் நமது வாழ்வில் கடந்து செல்லும் ஒவ்வொரு நாட்களிலும் ஏதாவது ஒரு விஷயம் நிகழ்ந்திருக்கலாம் அந்த  வகையில் வரலாற்றில் இன்று என்ன நாள்? என்பதை பற்றி நாம் நமது மின்கைத்தடியின் இந்த தொகுப்பில் படித்து தெரிந்து கொள்வோம் வாங்க..

வரலாற்றில் இன்று | Today History in Tamil

மார்ச் 16 கிரிகோரியன் ஆண்டின் 75 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 76 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 290 நாட்கள் உள்ளன.

நிகழ்வுகள்

கிமு 597 – பபிலோனியா எருசலேமைக் கைப்பற்றியது. செடேக்கியா மன்னராக முடிசூடினார்.
455 – பேரரசர் மூன்றாம் வலந்தீனியன் உரோமில் விற்பயிற்சியில் ஈடுபட்டிருந்த போது படுகொலை செய்யப்பட்டார்.
1190 – சிலுவைப் படையினர் யார்க் நகரின் யூதர்களைப் படுகொலை செய்ய ஆரம்பித்தனர். பல யூதர்கள் தற்கொலை செய்து கொண்டனர்.
1521 – பெர்டினென்ட் மகலன் பிலிப்பீன்சில் ஒமோனொம் தீவை அடைந்தார்.
1660 – இங்கிலாந்தில் லோங் நாடாளுமன்றம் கலைக்கப்பட்டது.
1782 – அமெரிக்கப் புரட்சிப் போர்: எசுப்பானியப் படைகள் ரோட்டான் என்ற கரிபியன் தீவைக் கைப்பற்றின.
1792 – சுவீடன் மன்னர் மூன்றாம் குசுத்தாவ் சுடப்பட்டார். இவர் மார்ச் 29 இல் இறந்தார்.
1815 – இளவரசர் வில்லியம் நெதர்லாந்து இராச்சியத்தின் மன்னராகத் தன்னை அறிவித்தார்.
1865 – அமெரிக்க உள்நாட்டுப் போர்: அவராசுபரோ சமர் ஆரம்பமானது. இஒதில் அமெரிக்கக் கூட்டமைப்புப் படைகள் பெரும் இழப்பைச் சந்தித்தன.
1898 – மெல்பேர்ண் நகரில் ஐந்து குடியேற்ற நாடுகள் இணைந்து அரசியலமைப்பை உருவாக்கின. இதுவே ஆத்திரேலியாவின் உருவாக்கத்திற்கு முதலாவது காரணியாக அமைந்தது.[1]
1917 – முதலாம் உலகப் போர்: செருமனியின் போர்க்கப்பல் ஒன்று மூழ்கியது.
1925 – சீனாவின் யுன்னான் மாகாணத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டதில் 500 பேர் வரை உயிரிழந்தனர்.
1926 – முதலாவது திரவ-எரிபொருளினால் உந்தும் ஏவூர்தியை மசாசுசெட்சில் இராபர்ட் காடர்ட் என்பவர் செலுத்தினார்.
1935 – வெர்சாய் ஒப்பந்தத்தை மீறும் வகையில் எதிராக செருமனி மீண்டும் புதுப்படைக்கலன்கள் தயாரிப்பதில் ஈடுபட வேண்டும் என இட்லர் உத்தரவிட்டார்.
1939 – பிராக் அரண்மனையில் இருந்து இட்லர் பெகேமியா, மொராவியாவை செருமனியின் ஒரு பகுதியாக அறிவித்தார்.
1942 – முதலாவது வி-2 ஏவுகணை ஏவப்பட்டது (ஏவப்பட்ட உடனேயே வெடித்துச் சிதறியது).
1945 – இரண்டாம் உலகப் போர்: இவோ ஜீமா சண்டை முடிவுக்கு வந்தது.
1945 – இரண்டாம் உலகப் போர்: பிரித்தானியாவின் 20-நிமிடக் குண்டுவீச்சில் செருமனியின் வூர்சுபேர்க் நகரின் 90 விழுக்காடு அழிந்தது. 5,000 பேர் கொல்லப்பட்டனர்.
1962 – மேற்கு பசிபிக் பெருங்கடலில் அமெரிக்க விமானம் 107 பயணிகளுடன் காணாமல் போனது.
1963 – பாலியில் ஆகூங்க் மலை நெருப்பு கக்கி 11,000 பேர் வரை இறந்தனர்.
1966 – ஜெமினி 8, நாசாவின் 12வது மனிதரைக் கொண்டுசென்ற விண்கலம், ஏவப்பட்டது.
1968 – வியட்நாம் போர்: மை லாய் படுகொலைகள் இடம்பெற்றன. பெண்கள், குழந்தைகள் உட்பட 350 முதல் 500 வரையிலான வியட்நாமியர்கள் அமெரிக்கப் படையினரால் படுகொலை செய்யப்பட்டனர்.
1969 – வெனிசுவேலாவில் உள்ளூர் விமானம் ஒன்று விபத்துக்குள்ளாகியதில் 155 பேர் உயிரிழந்தனர்.
1978 – இத்தாலியின் முன்னாள் பிரதமர் அல்டோ மோரோ கடத்தப்பட்டு, பின்னர் கொல்லப்பட்டார்.
1979 – சீன-வியட்நாமியப் போர்: மக்கள் விடுதலை இராணுவம் எல்லையைக் கடந்து சீனாவினுள் நுழைந்ததை அடுத்து, போர் முடிவுக்கு வந்தது.
1985 – அசோசியேட்டட் பிரஸ் ஊடகவியலாளர் டெரி ஆன்டர்சன் பெய்ரூட் நகரில் கடத்தப்பட்டார். இவர் பின்னர் 1991 டிசம்பர் 4 இல் விடுதலை ஆனார்.
1988 – ஈராக்கில் குருதிய நகரான அலப்ஜாவில் நச்சு வாயுத் தாக்குதலில் 5,000 பேர் வரை கொல்லப்பட்டனர்.
1989 – எகிப்தில் 4,400-ஆண்டு பழமையான மம்மி கிசாவின் பெரிய பிரமிடு அருகே கண்டுபிடிக்கப்பட்டது.
1995 – மிசிசிப்பி அடிமை முறையை ஒழிப்பதற்கான சட்டமூலத்தை ஏற்றுக் கொண்ட கடைசி அமெரிக்க மாநிலமானது.
2001 – சீனாவின் சிஜியாசுவாங் நகரில், இடம்பெற்ற தொடர் குண்டுத் தாக்குதல்களில் 108 பேர் கொல்லப்பட்டனர், 38 பேர் காயமடைந்தனர்.
2005 – இசுரேல் எரிக்கோவை அதிகாரபூர்வமாக பாலத்தீனியர்களிடம் ஒப்படைந்தது.
2006 – மனித உரிமைகளுக்கான அமைப்பை உருவாக்குவதற்கு ஐநாவின் பொதுச்சபை ஆதரவாக வாக்களித்தது.
2014 – கிரிமியாவில் நடைபெற்ற சர்ச்சைக்குரிய பொது வாக்கெடுப்பில் உக்ரைனில் இருந்து பிரிந்து உருசியாவுடன் இணையப் பெருமான்மையானோர் வாக்களித்தனர்.

பிறப்புகள்

1693 – மல்கர் ராவ் ஓல்கர், மராட்டிய மன்னர் (இ. 1766)
1750 – கரோலின் எர்ழ்செல், செருமானிய-ஆங்கிலேய வானியலாளர் (இ. 1848)
1751 – ஜேம்ஸ் மாடிசன், ஐக்கிய அமெரிக்காவின் 4வது அரசுத்தலைவர் (இ. 1836)
1774 – மேத்தியூ பிலிண்டர்சு, ஆங்கிலேய நிலப்படவியலாளர் (இ. 1814)
1789 – ஜார்ஜ் ஓம், செருமானிய இயற்பியலாளர், கணிதவியலாளர் (இ. 1854)
1799 – அன்னா அட்கின்சு, ஆங்கிலேய தாவரவியலாளர், படப்பிடிப்பாளர் (இ. 1871)
1839 – சல்லி புருதோம், நோபல் பரிசு பெற்ற பிரான்சியக் கவிஞர் (இ. 1907)
1859 – அலெக்சாண்டர் பப்போவ், உருசிய இயற்பியலாளர் (இ. 1906)
1888 – எம். ஆர். சேதுரத்தினம், தமிழக அரசியல்வாதி
1901 – பொட்டி சிறீராமுலு, இந்திய விடுதலைப்போராட்ட செயற்பாட்டாளர் (இ. 1952)
1910 – இப்திகார் அலி கான் பட்டோடி, இந்திய-ஆங்கிலேய துடுப்பாளர், 8வது பட்டோடி நவாப் (இ. 1952)
1916 – சுடோமு யாமகுச்சி, சப்பானிய பொறியியலாளர், தொழிலதிபர் (இ. 2010)
1918 – எஸ். ஏ. நடராஜன், தமிழ்த் திரைப்பட, நாடக நடிகர்
1926 – ஜெர்ரி லுவிஸ், அமெரிக்க நடிகர்
1927 – விளாடிமிர் கொமரோவ், உருசிய விண்வெளி வீரர் (இ. 1967)
1929 – அ. கி. இராமானுசன், இந்திய எழுத்தாளர், மொழியியல் ஆய்வாளர், நாட்டுப்புறவியலாளர் (இ. 1993)
1929 – இரா. திருமுருகன், தமிழகத் தமிழறிஞர்
1940 – இராஜேஸ்வரி சண்முகம், இலங்கை வானொலி அறிவிப்பாளர், நாடகக் கலைஞர் (இ. 2012)
1953 – ரிச்சர்ட் ஸ்டால்மன், கட்டற்ற மென்பொருள் இயக்கம், க்னூ திட்டம் போன்றவற்றின் தோற்றுவிப்பாளர்.
1954 – அருண் விஜயராணி, ஈழத்து-ஆத்திரேலிய எழுத்தாளர் (இ. 2015)
1959 – இயென்சு சுடோல்ட்டென்பர்க், நோர்வேயின் 47வது பிரதமர்

இறப்புகள்

1940 – செல்மா லோவிசா லேகர்லாவ், நோபல் பரிசு பெற்ற சுவீடன் எழுத்தாளர் (பி. 1858)
1974 – கோ. சாரங்கபாணி, தமிழக ஊடகவியலாளர், எழுத்தாளர், வெளியீட்டாளர் (பி. 1903)
1978 – மணியம்மையார், திராவிடர் கழகத்தின் தலைவர், சொற்பொழிவாளர், பெரியாரின் 2வது மனைவி (பி. 1920)
1989 – அழ. வள்ளியப்பா, தமிழகக் குழந்தை இலக்கியக் கவிஞர் (பி. 1922)
2003 – இரேச்சல் கோரீ, அமெரிக்க செயற்பாட்டாளர் (பி. 1979)
2008 – அனுரா பண்டாரநாயக்கா, இலங்கை அரசியல்வாதி (பி. 1949)
2014 – அமலெந்து டே, இந்திய வரலாற்றாசிரியர் (பி. 1929)
2016 – அலி அகமது உசேன் கான், இந்திய செனாய் இசைக்கலைஞர் (பி. 1939)

சிறப்பு நாள்

*****

சதீஸ்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...