நாட்டு சேதியும்!!!!! நம்ம சேதியும் !!!!!
இந்தியாவில் பொருளாதார தேக்க நிலை ஏற்படவில்லை.பொருளாதார வளர்ச்சி வேகம் தான் குறைவாக உள்ளது._ நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் .
அதாவது இந்தியாவோட பொருளாதார நிலம மயக்கம் போட்டு விழல… தூங்கிகிட்டு தான் இருக்கு, தானா எந்திரிச்சு நிக்கும், நாமலா தண்ணி தெளிச்சு எழுப்ப அவசியம் இல்லன்னு சொல்றீங்க…..
***************************
ரஜினி முன்பே வந்திருந்தால் அரசியலில் வென்று இருப்பார். இப்போது அஜித்துக்கு அரசியலில் வாய்ப்பு இருக்கிறது .அவர் அரசியலுக்கு வந்தால் முன்னோடியாக விளங்க வாய்ப்புள்ளது._ பால்வளத் துறை அமைச்சர் கே டி ராஜேந்திர பாலாஜி.
அடக்கொடுமையே !!!! அந்த மனுசனையும் விட்டு வைக்கிற யோசன இல்ல போல…. தேரை இழுத்து தெருவுல விடுறதே உங்க வேலையா போச்சு…..
*************************
கேரள மாணவி தற்கொலை விவகாரத்தில்தொடர்புடைய 3 ஐஐடி பேராசிரியர்களிடம் கூடுதல் கமிஷனர் ரகசிய இடத்தில் வைத்து தீவிர விசாரணை.
எதுக்குங்க இந்த பூச்சாண்டி எல்லாம் காட்டுறிங்க?! எப்படியும் கடைசியில் என்ன நடக்கும்னு எல்லாருக்குமே தெரியுமே???!!! பொள்ளாச்சி மாதிரி எத்தன வழக்க பாத்துட்டோம்….
************************
கரூர் கொசுவலை நிறுவனத்தில் நான்கு நாளாக நடைபெற்று வந்த வருமானவரித்துறை சோதனை முடிவுக்கு வந்தது .10 கிலோ தங்கமும் முக்கிய ஆவணங்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன .
ம்ம் ம்ம் கொசுவால வந்த வாழ்க்கைய பாருங்கய்யா!!!
**************************
உயர்மின் கோபுர விவகாரம்- அரசியல் காழ்ப்புணர்ச்சியின் காரணமாக விவசாயிகள் திட்டமிட்டு போராட்டம் நடத்துகின்றனர்.உயர் மின்னழுத்த கோபுரம் தொடர்பாக புதிய அரசாணை வெளியிடப்பட்டு இழப்பீட்டுத் தொகை வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அதற்காக உண்மையான விவசாயிகள் இன்று முதல்அமைச்சரை நேரில் சந்தித்து நன்றி தெரிவிக்கின்றனர் –அமைச்சர் தங்கமணி.
அடக்கொடுமையே நீங்க எல்லாம் எங்க இருந்துயா கிளம்பி வர்றீங்க .மதிய சாப்பாட்டுக்கு என்ன? அரைக்கிலோ வயறு காக்கிலோ காசா ?? அய்யா நமக்கு சோறு முக்கியம் ….சோறு போடுற விவசாயம் முக்கியம்….. அதனால் உங்களுக்கு எப்ப தான் புரிய போகுதோ ?!?!
*****************************
சபரிமலையில் தரிசனம் செய்யச் சென்ற பெண்கள் நிலகல்லில் தடுத்து நிறுத்தம்.
அய்யோ!!! அய்யோ!!! இது என்ன சின்ன புள்ள விளையாட்டா போச்சு.. நீதிமன்றம் போகலாம்னு சொல்றதும் கோயில் நிர்வாகம் போகக்கூடாதுன்னு தடுப்பதும்….. ஒரு முடிவுக்கு வாங்கப்பா……
*********************************
போராட்டத்தில் ஈடுபட்ட டாக்டர்களை தமிழக அரசு பழி வாங்கக் கூடாது ._சென்னை உயர்நீதிமன்றம் கருத்து.
அவங்க சொல்றத நீங்க கேட்க போறதில்ல… நீங்க சொல்றத அவங்க கேட்க போறது இல்ல ….அப்புறம் எதுக்கு இந்த கருத்து சொல்ற வேலையெல்லாம்…….
****************************
நாடாளுமன்ற குளிர்கால தொடர் துவக்கம். முதல் நாளிலேயே எதிர்க்கட்சிகள் பல பிரச்சினைகளை எழுப்பி அமளி.
நடத்துங்க நடத்துங்க அத மட்டும்தான் நடத்த முடியும் உங்களால……
*******************************