வரலாற்றில் இன்று (03.03.2024 )

வரலாறு என்பது இறந்த காலத்தில் நிகழ்ந்த விஷயத்தை பற்றி நாம் தெரிந்து கொள்ளும் ஒன்றாகும். குறிப்பாக வரலாற்றில் ஒருவர் செய்த சாதனைகள், தியாகங்கள், சிறப்புகள் இதுபோன்ற பலவகையான முக்கிய விஷயங்கள் பற்றி அனைவருக்கும் தெரியப்படுத்தும் விஷயமாகும். தெளிவாக சொல்ல வேண்டும் என்றால் தங்கள் வாழும் காலத்தின் பின்னணியில் கடந்த காலத்தின் நிகழ்வுகளை விளக்கி வரலாறாக எழுதுகின்றனர். சரி இந்த பதிவில் நாம் நமது வாழ்வில் கடந்து செல்லும் ஒவ்வொரு நாட்களிலும் ஏதாவது ஒரு விஷயம் நிகழ்ந்திருக்கலாம் அந்த  வகையில் வரலாற்றில் இன்று என்ன நாள்? என்பதை பற்றி நாம் நமது மின்கைத்தடியின் இந்த தொகுப்பில் படித்து தெரிந்து கொள்வோம் வாங்க..

வரலாற்றில் இன்று | Today History in Tamil

மார்ச் 3 கிரிகோரியன் ஆண்டின் 62 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 63 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 303 நாட்கள் உள்ளன.

நிகழ்வுகள்

473 – கிளிசேரியசு மேற்கு உரோமைப் பேரரசராக நியமிக்கப்பட்டார்.
724 – யப்பானியப் பேரரசி கென்சோ முடிதுறந்தார். ஷோமு புதிய பேரரசராகப் பதவியேற்றார்.
1284 – வேல்சு இங்கிலாந்துடன் இணைக்கப்பட்டது.
1575 – இந்தியாவின் முகலாயப் பேரரசர் அக்பர் வங்காளப் படைகளைத் தோற்கடித்தார்.
1585 – அந்திரேயா பலாடியோ வடிவமைத்த ஒலிம்பிக் நாடக அரங்கு விசென்சா நகரில் திறக்கப்பட்டது.
1833 – அகிலத்திரட்டு அம்மானையின்படி, நாராயணனின் அவதாரமாக அய்யா வைகுண்டர் திருச்செந்தூரில் பிறந்தார்.
1845 – புளோரிடா அமெரிக்காவின் 27வது மாநிலமாக அறிவிக்கப்பட்டது.
1857 – இரண்டாவது அபினிப் போர்: பிரான்சும் ஐக்கிய இராச்சியமும் சீனா மீது போரை அறிவித்தன.
1859 – ஐக்கிய அமெரிக்காவில் மாபெரும் இரண்டு-நாள் அடிமை ஏலம் நிறைவடைந்தது.
1861 – உருசியாவின் இரண்டாம் அலெக்சாந்தர் பண்ணையடிமைகளை விடுவித்தார்.
1873 – அஞ்சல் மூலம் “ஆபாசமான, அல்லது கவர்ச்சியான” நூல்களை அனுப்புவது அமெரிக்காவில் தடை செய்யப்பட்டது.
1878 – உதுமானியப் பேரரசிடம் இருந்து பல்கேரியா விடுதலை அடைந்தது. அடுத்த சில மாதங்களில் பெர்லினில் நடந்த ஆறு நாடுகளின் மாநாட்டில் இவ்வுரிமை மறுக்கப்பட்டு, பல்கேரியா உதுமானியப் பேரரசின் குத்தகை நாடு என அறிவிக்கப்பட்டது.
1904 – எடிசனின் போனோகிராமைக் கொண்டு முதன் முதலாக அரசியல் ஆவணம் ஒன்றின் ஒலிப்பதிவை இரண்டாம் வில்லியம் உருவாக்கினார்.
1905 – உருசியப் பேரரசர் இரண்டாம் நிக்கலாஸ் மக்கள் பிரதிநிதிகளைக் கொண்ட சபையை ஏற்படுத்த இணங்கினார்.
1913 – பெண்களுக்கான வாக்குரிமை கோரி அமெரிக்காவில், வாசிங்டன் நகரில் பெண்களின் மாபெரும் ஆர்ப்பாட்டப் பேரணி இடம்பெற்ரது.
1918 – முதலாம் உலகப் போரில் உருசியாவின் பங்களிப்பை முடிவுக்குக் கொண்டுவர செருமனி, ஆஸ்திரியா, உருசியா ஆகியன உடன்பாட்டிற்கு வந்தன.
1923 – டைம் இதழின் முதல் பதிப்பு வெளியிடப்பட்டது.
1924 – உதுமானியப் பேரரசின் கலிபா இரண்டாம் அப்துல்மெசித் பதவியில் இருந்து அகற்றப்பட்டதை அடுத்து 14-ஆம் நூற்றாண்டின் பழமை வாய்ந்த இசுலாமியக் கலீபகம் முடிவுக்கு வந்தது.
1931 – ஐக்கிய அமெரிக்கா த ஸ்டார்-ஸ்பாங்கிள்ட் பானர் என்ற பாடலை தனது நாட்டுப்பண்ணாக ஏற்றுக் கொண்டது.
1938 – சவூதி அரேபியாவில் எண்ணெய் கண்டுபிடிக்கப்பட்டது.
1939 – மும்பாயில் மகாத்மா காந்தி பிரித்தானியருக்கு எதிராக உண்ணாநோன்பை ஆரம்பித்தார்.
1940 – சுவீடனில் இடதுசாரி கம்யூனிஸ்டுக் கட்சியின் செய்திப்பத்திரிகை அலுவலகம் மீது தாக்குதல் நடத்தப்பட்டதில் ஐவர் கொல்லப்பட்டனர்.
1942 – இரண்டாம் உலகப் போர்: மேற்கு ஆஸ்திரேலியாவில் புரூம் என்ற நகரில் சப்பானின் பத்து போர் விமானங்கள் குண்டுத் தாக்குதலில் ஈடுபட்டதில் 100 பேருக்கு மேல் கொல்லப்பட்டனார்.
1943 – இரண்டாம் உலகப் போர்: லண்டனில் விமானக் குண்டுத்தாக்குதலின் போது சுரங்கத் தொடருந்து நிலையத்தில் ஒதுங்கிய 173 பேர் நெரிசலில் சிக்கி இறந்தனர்.
1945 – இரண்டாம் உலகப் போர்: அமெரிக்க, பிலிப்பீனியப் படையினர் மணிலாவை மீண்டும் கைப்பற்றினர்.
1945 – இரண்டாம் உலகப் போர்: பிரித்தானிய வான்படையினர் நெதர்லாந்தின் டென் ஹாக் நகர் மீது தவறுதலாகக் குண்டுகளை வீசியதில் 511 பேர் உயிரிழந்தனர்.
1953 – கனடிய பசிபிக் ஏர் லைன்சு விமானம் ஒன்று கராச்சியில் வீழ்ந்ததில் 11 பேர் உயிரிழந்தனர்.
1958 – ஈராக்கின் பிரதமராக நூரி-அல்-சயீது எட்டாவது தடவையாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
1969 – நாசாவின் அப்பலோ 9 விண்ணில் ஏவப்பட்டது.
1974 – பாரிசு அருகில் துருக்கிய விமானம் ஒன்று வீழ்ந்ததில் அதில் பயணம் செய்த அனைத்து 346 பேரும் உயிரிழந்தனர்.
1985 – சிலியில் வால்பரைசோ என்ற பகுதியில் 8.3 அளவு நிலநடுக்கம் ஏற்பட்டதில் 177 பேர் உயிரிழந்தனர்.
1986 – ஆத்திரேலியா ஐக்கிய இராச்சியத்தில் இருந்து முழுமையான விடுதலை பெற்றதற்கான “ஆத்திரேலியா சட்டம் 1986” நடைமுறைக்கு வந்தது.
1991 – சோவியத் ஒன்றியத்தில் இருந்து பிரிந்து செல்ல ஆதரவாக லாத்வியாவின் 74% மக்களும் எஸ்தோனியாவின் 83% மக்களும் வாக்களித்தனர்.
2005 – இசுட்டீவ் பொசெட் என்ற அமெரிக்கர் எரிபொருள் எதுவும் மீள நிரப்பாமல் தனியே விமானம் ஒன்றில் உலகைச் சுற்றி வலம் வந்து சாதனை படைத்தார்.
2013 – கராச்சியில் சியா முசுலிம்கள் வாழும் பகுதியில் குண்டு வெடித்ததில் 45 பேர் கொல்லப்பட்டனர், 180 பேர் காயமடைந்தனர்.

பிறப்புகள்

1790 – ஜான் ஆஸ்டின், ஆங்கிலேய சட்ட வல்லுநர், அரசியல் சிந்தனையாளர் (இ. 1859)
1839 – ஜம்சேத்ஜீ டாட்டா, இந்தியத் தொழிலதிபர் (இ. 1904)
1845 – கியார்கு கேன்ட்டர், உருசிய-செருமானியக் கணிதவியலாளர், மெய்யியலாளர் (இ. 1918)
1847 – அலெக்சாண்டர் கிரகாம் பெல், தொலைபேசியைக் கண்டுபிடித்த இசுக்கொட்டிய-அமெரிக்கப் பொறியியலாளர் (இ. 1922)
1882 – சார்லசு பொன்சி, இத்தாலியத் தொழிலதிபர் (இ. 1949)
1906 – யெவ்கேனி கிரினோவ், சோவியத்-உருசிய வானியலாளர், புவியியலாளர் (இ. 1984)
1924 – சி. சிவஞானசுந்தரம், ஈழத்து இதழியலாளர், எழுத்தாளர் (இ. 1996)
1931 – குலாம் முஸ்தபா கான், இந்திய இசையமைப்பாளர்
1943 – சங்கர் கணேஷ், தென்னிந்தியத் திரைப்பட இசையமைப்பாளர்கள்
1944 – ஜெயச்சந்திரன், தென்னிந்தியத் திரைப்படப் பின்னணிப் பாடகர்
1950 – திக்குவல்லை கமால், இலங்கை எழுத்தாளர்.
1955 – கணபதி கணேசன், தமிழ் இதழியலாளர் (இ. 2002)
1955 – தோர்ச்யீ காண்டு, இந்திய அரசியல்வாதி (இ. 2011)
1955 – ஜஸ்பால் பட்டி, இந்தியத் திரைப்பட நடிகர் (இ. 2012)
1958 – லதா ரஜினிகாந்த், இந்தியத் திரைப்படத் தயாரிப்பாளர், பின்னணிப் பாடகி
1970 – இன்சமாம் உல் ஹக், பாக்கித்தான் துடுப்பாட்ட வீரர்
1982 – ஜெசிக்கா பைல், அமெரிக்க நடிகை, பாடகி
1985 – வரலட்சுமி சரத்குமார், தமிழ்த் திரைப்பட நடிகை

இறப்புகள்

1644 – குரு அர்கோவிந்த், ஆறாவது சீக்கிய குரு (பி. 1595)
1703 – ராபர்ட் ஹூக், ஆங்கிலேய கட்டிடக் கலைஞர், மெய்யியலாளர் (பி. 1635)
1707 – ஔரங்கசீப், முகலாயப் பேரரசர் (பி. 1618)
1900 – பிரெட்ரிக் வில்லியம் ஸ்டீவென்ஸ், பிரித்தானியக் கட்டிடக்கலைஞர் (பி. 1847)
1940 – கடம்பி மீனாட்சி, இந்திய வரலாற்றாய்வாளர் (பி. 1905)
1944 – குமாரதுங்க முனிதாச, சிங்களக் கவிஞர், பத்திரிகையாளர் (பி. 1887)
1985 – யோசிப் சுக்லோசுகி, சோவியத்-உக்கிரைனிய வானியலாளர் (பி. 1916)
1996 – சி. சிவஞானசுந்தரம், ஈழத்து இதழியலாளர், எழுத்தாளர் (பி. 1924)
2010 – குருவிக்கரம்பை வேலு, சுயமரியாதை இயக்கத் தலைவர் (பி. 1930)
2011 – வெ. இராதாகிருட்டிணன், விண்வெளி அறிவியலாளர் (பி. 1929)
2016 – பெர்த்தா காசிரீஸ், ஒந்துராசு சூழலியலாளர் (பி. 1973)
2016 – மார்ட்டின் குரோவ், நியூசிலாந்து துடுப்பாளர் (பி. 1962)
2018 – ரோஜர் பேனிஸ்டர், ஆங்கிலேய தடகள வீரர் (பி. 1929)

சிறப்பு நாள்

மாவீரர் நாள் (மலாவி)
உலகக் காட்டுயிர் நாள்
விடுதலை நாள் (பல்கேரியா)
அன்னையர் நாள் (ஜார்ஜியா)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Follow by Email
Instagram
Telegram
WhatsApp
FbMessenger
URL has been copied successfully!