லதா மங்கேஷ்கரோட நினைவு நாள்
!
இந்திய சினிமாவின் நைட்டிங்கேல்லதா மங்கேஷ்கரோட நினைவு நாள்.
இந்திய சினிமாவுல பாட்டுத் துறைல உச்சம் தொட்ட லதா மங்கேஷ்கர் மத்தியப்பிரதேச மாநிலம் இந்தூர்ல பிறந்தவங்க. வீட்டில் பிறந்த ஐந்து குழந்தைகள்ல லதா மங்கேஷ்கர்தான் மூத்த குழந்தை. இவருடைய அப்பா தீனாநாத் மங்கேஷ்கர், மராத்தியில புகழ்பெற்ற பாடகராவும், நாடக ஆசிரியராகவும் இருந்தாரு. சின்ன வயசுல இருந்தே பாடல்களில் ஆர்வமா இருந்த லதா, தன்னோட அப்பாக்கிட்ட இருந்தே பாடவும் கத்துக்கிட்டாங்க.
சுவாரஸ்யமான உண்மை என்னென்றால், லதா மங்கேஷ்கரோட உண்மையான பேர் ஹேமா. தன் அப்பாவோட ‘லத்திகா’ என்ற நாடகத்துல ‘லதா’ என்ற பாத்திரத்த தொடர்ந்து ஏற்று நடிச்சாங்க ஹேமா. அதை தொடர்ந்து, லதா மங்கேஷ்கராவே மாறிப்போனது அந்தப் பெயர்.
13 வயசுல இவருடைய அப்பா தீனாநாத் உயிரிழந்ததால, குடும்ப பொறுப்பு அத்தனையும் மூத்த மகளான லதா கிட்ட வந்தது. தொடக்க காலத்துல மும்பைக்கு போய் சில படங்கள்ல நடிச்சாலும், நடிப்ப விட நமக்கு பாட்டுதான் நல்லா வரும்னு பாட்டுத்துறையில களமிறங்கினாங்க லதா.
ஆமா, 1943ல கஜாபாத் அப்டின்ற மராத்தி படத்துல முதன்முதலா பாடத்தொடங்கினாங்க லதா மங்கேஷ்கர்.
அதுமுதல் 14 மொழிகள்ல 50,000க்கும் மேற்பட்ட பாடல்கள பாடி சாதனை படைச்சிருக்காங்க.
தமிழ் சினிமாவுக்காக இவங்க பாடின முதல் பாட்டு ஆனந்த் படத்துல வந்த ‘ஆராரோ ஆராரோ’ பாட்டுதான். அவங்கள தமிழ்ல முதன்முறையா பாடவச்சது இசைஞானி இளையராஜாதான்.
சத்யா படத்துல வர, “வளையோசை கலகலவென” அப்டின்ற பாடல் மூலமா தமிழ் சினிமா ரசிகர்கள முனுமுனுக்க வச்சாங்க லதா.
இத்தனை சாதனைகளை படைச்ச லதா, 3 தேசிய விருது, 4 ஃபிலிம் பேர் விருது, வாழ்நாள் சாதனையாளர் விருது, பாரத ரத்னா, தமிழ் சினிமாவோட உயரிய விருதான தாதாசாகேப் பால்கே விருது உள்ளிட்ட விருதுகள வாங்கியிருக்காங்க. 1948 முதல் 1987 வரை 30,000க்கும் அதிகமான பாடல்களை பாடி கின்னஸ் சாதனை படைச்சார் லதா மங்கேஷ்கர். ஆனால் ஒரு பேட்டியில் இது குறித்து லதா மங்கேஷ்கர் பேசும்போது, “நான் எத்தனை பாடல்களை பாடுகிறேன் என்று நான் கணக்கெடுப்பதில்லை. ஆனால் கின்னஸ் நிர்வாகத்தினர் அந்த தகவல்கள் எப்படி கிடைத்தன என்று தெரியவில்லை” அப்படீன்னு சொல்லியிருந்தார்.
இந்திய இசையின் வரலாற்றை லதா மங்கேஷ்கரை தவிர்த்து எழுதிவிட முடியாது. அந்த அளவுக்கு ஏறக்குறைய மொழிகளில் 36 பல்லாயிரக்கணக்கான பாடல்களை பாடியுள்ள அந்த மந்திரக் குரல் இசை ரசிகர்களின் மனதில் என்றென்றும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
1999 – 2005 ஆண்டு காலகட்டத்துல ராஜ்ய சபா உறுப்பினராகவும் இருந்திருக்காங்க. கொரோனா பாதிப்பு காரணமா 2022ம் ஆண்டு லதா உயிரிழந்தாலும், இந்தியாவோட இசைக்குயிலா கோடிக்கணக்கானவங்கள இன்னைக்கும் முனுமுனுக்க வச்சிட்டுதான் இருக்காங்க.
From The Desk of கட்டிங் கண்ணையா