மனித அந்தஸ்து பெற்ற ஒராங்குட்டான்
மனித அந்தஸ்து பெற்ற ஒராங்குட்டான்… அத்தனை உரிமைகளையும் அளித்து நீதிமன்றம் உத்தரவு…!சாண்ட்ரா ஒராங்குட்டான்
அர்ஜென்டினாவைச் சேர்ந்த ஒராங்குட்டான் ஒன்றுக்கு மனிதர்களுக்குக் கிடைக்கும் அத்தனை உரிமைகளும் சலுகைகளும் வழங்கப்பட வேண்டும் என அர்ஜென்டினா நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
33 வயதான சாண்ட்ரா என்னும் இந்தா ஒராங்குட்டான் கடந்த 25 ஆண்டுகளுக்கும் மேலாக அர்ஜென்டினாவில் உள்ள புயனெஸ் ஏர்ஸ் வனவிலங்குப் பூங்காவில் வாழ்ந்து வந்தது. ஜெர்மனியில் பிறந்திருந்தாலும் தனது வாழ்வின் பெரும்பான்மையான நாட்களை அர்ஜென்டினாவிலேயே கழித்துள்ளது
வந்தது. ஜெர்மனியில் பிறந்திருந்தாலும் தனது வாழ்வின் பெரும்பான்மையான நாட்களை அர்ஜென்டினாவிலேயே கழித்துள்ளது.
இந்நிலையில், வயோதிகத்தை நெருங்கி வரும் சாண்ட்ரா இனி சட்டப்பூர்வமாக ஒரு மிருகம் இல்லை என அர்ஜென்டினா நீதிமன்றம் கடந்த 2015-ம் ஆண்டு அறிவித்தது. உருவத்தால் மனிதன் இல்லை என்றாலும் மனித அந்தஸ்து சாண்ட்ராவுக்கு வழங்கப்பட்டுள்ளது.
இதனால் தனக்கான இல்லத்தில் தற்போதுதான் குடியேறியுள்ளது சாண்ட்ரா. இந்த இல்லம் அமெரிக்காவின் ஃப்ளோரிடா மாகாணத்தில் உள்ளது. வனவிலங்கு பூங்கா, சர்கஸ், நிகழ்ச்சி, பார்வையாளர்களுக்கான கண்காட்சிப் பொருளாக இல்லாமல் தனது வாழ்க்கையை ஓய்வாகக் கழிக்க உள்ளது சாண்ட்ரா.