பரிசோதனையின் போது விழுந்த மாற்றுத்திறனாளியின் வலி
நேற்று மாற்றுத் திறனாளிகளுக்கான பேருந்து அரசாங்கம் அமைத்திருக்கிறது முயற்சி நல்லதாக இருந்தாலும் சோதனை என்ற பெயரில் அந்த பெண்மணிக்க மேலும் அவஸ்தைதான். வலிகளைப் பொறுத்துக் கொண்டுதான் அவர்கள் வாழ்ந்து வருகிறார்கள். அதிலும் ஒருமாற்றுத்திறனாளி பேருந்தில் ஏறும் போது நடத்துனரோ அல்லது சக பயணியோ உதவுவதைப் பார்த்திருக்கிறோம் ஆனால் வெகு அழகாக நடைமுறைச் சிக்கல்களை சொல்லிக்கொண்டு இருந்த அந்த மாற்றுத்திறனாளியான ஸ்வேதாவிற்கு பின்னால் யாராவது நின்று கொண்டு இருந்திருக்கலாம். சோதனை என்னும் போதே அதற்குண்டான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்வதன் அவசியத்தை ஏன் உணரவில்லை. இதனால் அவர்கள் தம்பட்டம் அடித்துக் கொள்வது என்னவென்று தெரியவில்லை, மேலும் இம்மாதிரி பேருந்தை வடிவமைக்கும் முன்னரே சில மாற்றுத் திறனாளிகளை அழைத்து கருத்துக்களை கேட்டு இருந்தால் இந்த சகோதரி அடிபட்டு இருக்கமாட்டார். 75 பேருந்துகளுக்கான ஆர்டர் வந்திருக்கும் போது எல்லாமே இப்படித்தான் இருக்குமோ. நீங்கள் நல்லது செய்வதை நடைமுறையில் சிக்கல்கள் ஆபத்துகள் வராமல் செய்யுங்கள் இல்லையேல் மற்ற விஷயங்களைப் போல கைகட்டி அமைதி காப்பதே சிறந்தது. அவர்கள் பாட்டை அவர்களே பார்த்துக் கொள்வார்கள்.
என்னதான் அடிபட்டவருக்கு மருத்துவ செலவை ஏற்றாலும், அந்த நேரத்தில் அத்தனை மீடியாக்களுக்கு முன் அவர் தவறியதும் அவரை நோக்கி எழுப்பபடும் உச்சு கொட்டுதலும், அடிபட்ட வலியும் இன்னும் அந்த பெண்ணை சுருங்கச் செய்து விடுமோ என்ற பயம் நமக்குள் எழாமல் இல்லை.