லிப்ட் கேட்ட யானை பதறிய டிரைவர்
தாய்லாந்து தலைநகர் பாங்காக்கில் உள்ளது கோவ் யாய் தேசிய உயிரியல் பூங்கா. தாய்லாந்து என்றாலே யானைகள் பிரசித்தம் என்பதால், இந்த பூங்காவிலும் அரிய வகை யானைகள் உள்ளன. இதனை காண்பதற்காக, பல்லாயிரக்கணக்கான மக்கள் தினமும் இந்த பூங்காவிற்கு வருகை தந்து கொண்டிருக்கின்றனர். கோடை மற்றும் குளிர் கால துவக்கம் மற்றும் முடிவு காலங்களில், பூங்காவில் உள்ளே அமைந்துள்ள சாலையில் அதிகளவிலான யானைகளை காணலாம். சுற்றுலாப்பயணிகள் ஆங்காங்கே தங்களது வாகனங்களை நிறுத்தி, யானைகளை போட்டோ எடுத்து மகிழ்வர்.
பூங்காவில் உள் சாலையில் காரில் சுற்றுலாப்பயணிகள் பயணித்துக்கொண்டிருந்தனர். அப்போது ஒரு பெரிய யானை சாலையை கடந்து கொண்டிருந்தது. டிரைவர் காரை, யானையின் அருகில் போய் காரை நிறுத்தியுள்ளார்.
காரின் மேற்பகுதியில் யானை அனசாயமாக உட்கார்ந்ததில், காரின் முன்பக்க கண்ணாடி, மேற்பகுதி, எரிபொருள் டேங்க் உள்ளிட்ட பகுதிகள் சேதமடைந்தன. அதிர்ஷ்டவசமாக, காரின் உள்ளே இருந்தவர்களுக்கு காயம் ஏதும் ஏற்படவில்லை. டிரைவர் உடனே சுதாரித்துக்கொண்டு காரை வேகமாக செலுத்தி அந்த இடத்தை விட்டு புறப்பட்டார். இந்த நிகழ்வை, மற்ற சுற்றுலாபயணிகள் வீடியோ எடுத்துள்ளனர். அந்த வீடியோ, சமூகவலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.