வரலாற்றில் இன்று (30.01.2024 )

 வரலாற்றில் இன்று (30.01.2024 )

வரலாறு என்பது இறந்த காலத்தில் நிகழ்ந்த விஷயத்தை பற்றி நாம் தெரிந்து கொள்ளும் ஒன்றாகும். குறிப்பாக வரலாற்றில் ஒருவர் செய்த சாதனைகள், தியாகங்கள், சிறப்புகள் இதுபோன்ற பலவகையான முக்கிய விஷயங்கள் பற்றி அனைவருக்கும் தெரியப்படுத்தும் விஷயமாகும். தெளிவாக சொல்ல வேண்டும் என்றால் தங்கள் வாழும் காலத்தின் பின்னணியில் கடந்த காலத்தின் நிகழ்வுகளை விளக்கி வரலாறாக எழுதுகின்றனர். சரி இந்த பதிவில் நாம் நமது வாழ்வில் கடந்து செல்லும் ஒவ்வொரு நாட்களிலும் ஏதாவது ஒரு விஷயம் நிகழ்ந்திருக்கலாம் அந்த  வகையில் வரலாற்றில் இன்று என்ன நாள்? என்பதை பற்றி நாம் நமது மின்கைத்தடியின் இந்த தொகுப்பில் படித்து தெரிந்து கொள்வோம் வாங்க..

வரலாற்றில் இன்று | Today History in Tamil

ஜனவரி 30 கிரிகோரியன் ஆண்டின் 30 ஆம் நாளாகும். ஆண்டு முடிவிற்கு மேலும் 335 (நெட்டாண்டுகளில் 336) நாட்கள் உள்ளன.

நிகழ்வுகள்

1648 – எண்பதாண்டுப் போர்: நெதர்லாந்துக்கும் ஸ்பெயினுக்கும் இடையில் போர் நிறுத்த ஒப்பந்தம் உடன்பாடாகியது.
1649 – முதலாம் சார்ல்ஸ் மன்னன் தூக்கிலிடப்பட்டான். அவனது மனைவி ஹென்றியேட்டா மரீயா பிரான்ஸ் சென்றாள்.
1649 – பொதுநலவாய இங்கிலாந்து என்ற குடியரசு அமைக்கப்பட்டது.
1649 – இளவரசர் சார்ல்ஸ் ஸ்டுவேர்ட் இரண்டாம் சார்ல்ஸ் தன்னை இங்கிலாந்து, ஸ்கொட்லாந்து, அயர்லாந்து ஆகியவற்றின் மன்னனாக அறிவித்தான். எனினும் எவரும் அவனை அங்கீகரிக்கவில்லை.
1820 – எட்வர்ட் பிரான்ஸ்ஃபீல்ட் அண்டார்டிக்காவில் தரையிறங்கினார்.
1835 – ஐக்கிய அமெரிக்கக் குடியரசுத் தலைவர் ஆண்ட்ரூ ஜாக்சன் கொலை முயற்சியில் இருந்து தப்பித்தார்.
1889 – ஆஸ்திரியாவின் இளவரசர் ருடோல்ஃப் தனது காதலியுடன் இறந்து கிடக்கக் காணப்பட்டார்.
1930 – உலகின் முதலாவது radiosonde சோவியத் ஒன்றியத்தில் உருவாக்கப்பட்டது.
1933 – அடொல்ஃப் ஹிட்லர் ஜெர்மனியின் அதிபராக (Chancellor) பதவியேற்றார்.
1943 – இரண்டாம் உலகப் போர்: உக்ரேனில் லேத்திச்சிவ் என்ற இடத்தில் யூதர்கள் ஆயிரக்கணக்கில் நாசிகளால் கொல்லப்பட்டனர்.
1945 – இரண்டாம் உலகப் போர்: பால்ட்டிக் கடலில் வில்ஹெல்ம் கூஸ்ட்லொஃப் என்ற பயணிகள் கப்பல் சோவியத் நீர்மூழ்கிக் கப்பலினால் தாக்கப்பட்டதில் அதில் பயணம் செய்த 9,000 பேர் கொல்லப்பட்டனர்.
1948 – இந்தியத் தலைவர் மகாத்மா காந்தி இந்துத் தீவிரவாதியான நாதுராம் கோட்சேயினால் படுகொலை செய்யப்பட்டார்.
1964 – ரேஞ்சர் 6 விண்கலம் ஏவப்பட்டது.
1964 – தென் வியட்நாமில் ஜெனரல் நியுவென் கான் (Nguyen Khanh) இராணுவப் புரட்சி மூலம் ஆட்சியைக் கைப்பற்றினார்.
1972 – வட அயர்லாந்தில் விடுதலைப் போராட்ட ஊர்வலத்தில் கலந்து கொண்ட 14 பேர் ஐக்கிய இராச்சிய துணை இரானுவத்தினரால் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
1972 – பாகிஸ்தான் பொதுநலவாய அமைப்பிலிருந்து விலகியது.
1976 – தமிழ்நாட்டில் மு. கருணாநிதியின் திமுக ஆட்சி கவிழ்க்கப்பட்டு குடியரசுத் தலைவர் ஆட்சி கொண்டுவரப்பட்டது.
1994 – பியோத்தர் லேக்கோ சதுரங்க ஆட்டத்தில் உலகின் முதலாவது வயதில் குறைந்த கிராண்ட் மாஸ்டர் ஆனார்.
2000 – கென்யாவின் விமானம் ஒன்று அட்லாண்டிக் கடலில் ஐவரி கோஸ்ட் கரையில் வீழ்ந்ததில் 169 பேர் கொல்லப்பட்டனர்.
2003 – பெல்ஜியம் சமப்பால் திருமணத்தைச் சட்டபூர்வமாக்கியது.
2006 – தமிழர் புனர்வாழ்வுக் கழகப் பணியாளர்கள் ஒரு பெண் உட்பட 7 இலங்கைத் தமிழர் மட்டக்களப்பு, வெலிக்கந்தையில் கடத்தப்பட்டனர். இவர்கள் இறந்து விட்டதாகப் பின்னர் அறிவிக்கப்பட்டது.

பிறப்புகள்

1882 – பிராங்கிளின் ரூஸ்வெல்ட், 32வது ஐக்கிய அமெரிக்கக் குடியரசுத் தலைவர் (இ. 1945)
1899 – மாக்ஸ் தெய்லர், நோபல் பரிசு பெற்றவர் (இ. 1972)
1910 – சி. சுப்பிரமணியம், இந்திய அரசியல்வாதி (இ. 2000)
1941 – டிக் சேனி, அமெரிக்காவின் 46வது துணைத் தலைவர்
1949 – பீட்டர் ஆகர், நோபல் பரிசு பெற்றவர்.
1974 – கிரிஸ்டியன் பேல், பிரித்தானிய திரைப்பட நடிகர்

இறப்புகள்

1832 – ஸ்ரீ விக்கிரம ராஜசிங்கன், கடைசிக் கண்டி அரசன்
1891 – சார்ல்ஸ் பிராட்லா, ஆங்கில அரசியல் கிளர்ச்சியாளர் (பி. 1833)
1928 – ஜொஹான்னஸ் ஃபிபிகர், நோபல் பரிசு பெற்றவர் (பி. 1867)
1948 – மகாத்மா காந்தி, (பி. 1869)
1948 – ஓர்வில் ரைட், ஐக்கிய அமெரிக்காவின் வானூர்தி நிபுணர் (பி. 1871]])
1969 – Georges Pire, நோபல் பரிசு பெற்றவர் (பி. 1910)
1981 – வில்லியம் கொபல்லாவ, இலங்கையின் முதலாவது சனாதிபதி (பி. 1897)
1991 – ஜோன் பார்டீன், நோபல் பரிசு பெற்றவர் (பி. 1908)
2007 – சிட்னி ஷெல்டன், அமெரிக்க எழுத்தாளர் (பி. 1917)
1874 – இராமலிங்க அடிகளார், ஆன்மிகவாதி (பி. 1823)

சிறப்பு நாள்

இந்தியா – தியாகிகள் நாள்
உலக தொழுநோய் ஒழிப்பு நாள்

சதீஸ்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...