வரலாற்றில் இன்று (25.01.2024 )

வரலாறு என்பது இறந்த காலத்தில் நிகழ்ந்த விஷயத்தை பற்றி நாம் தெரிந்து கொள்ளும் ஒன்றாகும். குறிப்பாக வரலாற்றில் ஒருவர் செய்த சாதனைகள், தியாகங்கள், சிறப்புகள் இதுபோன்ற பலவகையான முக்கிய விஷயங்கள் பற்றி அனைவருக்கும் தெரியப்படுத்தும் விஷயமாகும். தெளிவாக சொல்ல வேண்டும் என்றால் தங்கள் வாழும் காலத்தின் பின்னணியில் கடந்த காலத்தின் நிகழ்வுகளை விளக்கி வரலாறாக எழுதுகின்றனர். சரி இந்த பதிவில் நாம் நமது வாழ்வில் கடந்து செல்லும் ஒவ்வொரு நாட்களிலும் ஏதாவது ஒரு விஷயம் நிகழ்ந்திருக்கலாம் அந்த  வகையில் வரலாற்றில் இன்று என்ன நாள்? என்பதை பற்றி நாம் நமது மின்கைத்தடியின் இந்த தொகுப்பில் படித்து தெரிந்து கொள்வோம் வாங்க..

வரலாற்றில் இன்று | Today History in Tamil

ஜனவரி 25 கிரிகோரியன் ஆண்டின் 25 ஆம் நாளாகும். ஆண்டு முடிவிற்கு மேலும் 340 (நெட்டாண்டுகளில் 341) நாட்கள் உள்ளன.

நிகழ்வுகள்

1327 – 14 வயது மூன்றாம் எட்வர்ட் இங்கிலாந்தின் மன்னனாக முடி சூடினான்.
1494 – இரண்டாம் அல்பொன்சோ நேப்பில்ஸ் மன்னனாக முடிசூடினான்.
1498 – போர்த்துக்கீச நாடுகாண்பயணி வாஸ்கோ ட காமா தென்கிழக்கு ஆபிரிக்காவை அடைந்தார்.
1755 – மாஸ்கோ பல்கலைக்கழகம் ஆரம்பிக்கப்பட்டது.
1881 – தாமஸ் ஆல்வா எடிசன், அலெக்சாண்டர் கிரஹாம் பெல் ஆகியோர் இணைந்து ஓரியண்டல் டெலிபோன் கம்பெனி என்ற நிறுவனத்தை ஆரம்பித்தனர்.
1882 – வேல்ஸ் இளவரசர்கள் அல்பேர்ட் விக்டர், ஜோர்ஜ் ஆகியோர் கொழும்பு வந்து சேர்ந்தனர்.
1890 – நெல்லி பிளை தனது 72 நாள் உலகம் சுற்றும் பயணத்தை வெற்றிகரமாக முடித்துக் கொண்டார்.
1917 – டானிஷ் மேற்கிந்தியத் தீவுகள் ஐக்கிய அமெரிக்காவுக்கு $25 மில்லியன்களுக்கு விற்கப்பட்டது.
1918 – உக்ரேன் மக்கள் போல்ஷெவிக் ரஷ்யாவிடம் இருந்து விடுதலையை அறிவித்தனர்.
1919 – நாடுகளின் அணி நிறுவப்பட்டது.
1924 – முதலாவது குளிர்கால ஒலிம்பிக் விளையாட்டுக்கள் பிரான்சில் ஷாமனீ என்ற இடத்தில் ஆரம்பமானது.
1942 – இரண்டாம் உலகப் போர்: தாய்லாந்து ஐக்கிய அமெரிக்கா மீதும் ஐக்கிய இராச்சியம் மீதும் போரை அறிவித்தது.
1949 – சீனக் கம்யூனிஸ்டுகளின் படைகள் பீக்கிங்கினுள் நுழைந்தன.
1949 – இஸ்ரேலில் இடம்பெற்ற முதலாவது பொதுத் தேர்தலில் டேவிட் பென்-கூரியன் பிரதமரானார்.
1955 – சோவியத் ஒன்றியம் ஜேர்மனி மீது அதிகாரபூர்வமாக போரை நிறுத்தியது.
1971 – உகண்டாவில் இடம்பெற்ற இராணுவப் புரட்சியில் மில்ட்டன் ஓபோட் அதிபர் பதவியில் இருந்து அகற்றப்பட்டு இடி அமீன் தலைவரானார்.
1971 – இந்தியாவின் 18வது மாநிலமாக இமாசலப் பிரதேசம் ஏற்றுக்கொள்ளப்பட்டது.
1981 – மா சே துங்கின் மனைவி ஜியாங் கிங் இற்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது. இது பின்னர் ஆயுள் தண்டனையாகக் குறைக்கப்பட்டது.
1986 – தேசிய எதிர்ப்பு இயக்கத்தினரால் உகாண்டா அரசு கவிழ்க்கப்பட்டது.
1993 – கொட்டியாரக் குடாக் கடலில் மூதூர்-திருகோணமலை நகரங்களுக்கு இடையிலான சேவையில் ஈடுபட்டு வந்த பயணிகள் படகு ஒன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் நூற்றுக்கும் அதிகமானோர் மூழ்கி இறந்தனர்.
1994 – நாசாவின் கிளமென்டைன் விண்கலம் சந்திரனை நோக்கி ஏவப்பட்டது.
1995 – யோசப் வாஸ் அடிகளார் பாப்பரசர் இரண்டாம் அருளப்பர் சின்னப்பரால் முத்திப்பேறு பெற்றவராக அறிவிக்கப்பட்டார்.
1998 – கண்டியின் தலதா மாளிகையில் இடம்பெற்ற தற்கொலைத் தாக்குதலில் 8 பேர் கொல்லப்பட்டு 25 பேர் படுகாயமடைந்தனர்.
1999 – மேற்கு கொலம்பியாவில் இடம்பெற்ற 6.0 ரிக்டர் அளவு நிலநடுக்கத்தில் 1000 பேர் வரையில் கொல்லப்பட்டனர்.
2002 – விக்கிப்பீடியா மீடியாவிக்கி மென்பொருளுக்கு மாறியது.
2004 – ஒப்போர்ச்சுனிட்டி தளவுளவி (MER-B) செவ்வாயில் தரையிறங்கியது.
2005 – இந்தியாவின் மகாராஷ்டிரா மாநிலத்தில் மந்திராதேவி என்ற இடத்தில் கோயில் ஒன்றில் சனநெரிசலில் சிக்கி பெண்கள், குழந்தைகள் உட்பட 258 பேர் கொல்லப்பட்டனர்.
2006 – சூரியக் குடும்பத்திற்கு வெளியே பால் வழியின் நடுவிற்குக் கிட்டவாக பூமியில் இருந்து 21,500 ± 3,300 ஒளியாண்டுகள் தூரத்தில் OGLE-2005-BLG-390Lb என்ற கோள் கண்டுபிடிக்கப்பட்டது.
2009 – முல்லைத்தீவில் ராமநாதபுரம் பகுதியில் உள்ள கல்மடு குளத்தின் அணை விடுதலைப் புலிகளால் உடைக்கப்பட்டது.

பிறப்புகள்

1736 – ஜோசப் லூயி லாக்ராஞ்சி, இத்தாலிய-பிரெஞ்சு கணிதவியலர் (இ. 1813)
1783 – வில்லியம் கோல்கேட், ஆங்கிலேய தொழிலதிபர் (இ. 1857)
1872 – பி. ஆர். ராஜமய்யர், எழுத்தாளர், பத்திரிகையாசிரியர் (இ. 1898)
1882 – வெர்ஜீனியா வூல்ஃப், ஆங்கிலேய எழுத்தாளர் (இ. 1941)
1920 – பித்துக்குளி முருகதாஸ், பக்திப் பாடகர் (இ. 2015)
1928 – எடுவார்ட் ஷெவார்டுநாட்சே, ஜோர்ஜியாவின் முன்னாள் குடியரசுத் தலைவர் (இ. 2014)
1933 – கொரசோன் அக்கினோ, பிலிப்பைன்ஸ் முன்னாள் குடியரசுத் தலைவர் (இ. 2009)
1938 – எட்டா ஜேம்சு, அமெரிக்க பாடகர் (இ. 2012)
1938 – விளாடிமிர் விசொட்சுக்கி, உருசியப் பாடகர், நடிகர் (இ. 1980)
1941 – செங்கை ஆழியான், ஈழத்து எழுத்தாளர்
1942 – எய்சேபியோ, மொசாம்பிக்-போர்த்துக்கீச காற்பந்து வீரர் (இ. 2014)
1958 – கவிதா கிருஷ்ணமூர்த்தி, இந்தியப் பாடகி
1980 – சேவியர் எர்னாண்டசு, எசுப்பானியக் காற்பந்து வீரர்
1981 – அலீசியா கீசு, அமெரிக்கப் பாடகி, நடிகை

இறப்புகள்

389 – நசியான் கிரகோரி, பைசாந்திய பேராயர், இறையியலாளர் (பி. 329)
844 – நான்காம் கிரகோரி (திருத்தந்தை) (பி. 827)
1947 – அல் கபோன், அமெரிக்கக் கடத்தல்காரர் (பி. 1899)
2005 – பிலிப் ஜான்சன், அமெரிக்கக் கட்டிடக் கலைஞர் (பி. 1906)
2006 – நெல்லை கிருஷ்ணமூர்த்தி, கருநாடக இசைக் கலைஞர்

சிறப்பு நாள்

ரஷ்யா:- மாணவர் நாள் (தத்தியானா நாள்)
இந்தியா:- தேசிய வாக்காளர் தினம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Follow by Email
Instagram
Telegram
WhatsApp
FbMessenger
URL has been copied successfully!