வரலாற்றில் இன்று (20.01.2024 )

வரலாறு என்பது இறந்த காலத்தில் நிகழ்ந்த விஷயத்தை பற்றி நாம் தெரிந்து கொள்ளும் ஒன்றாகும். குறிப்பாக வரலாற்றில் ஒருவர் செய்த சாதனைகள், தியாகங்கள், சிறப்புகள் இதுபோன்ற பலவகையான முக்கிய விஷயங்கள் பற்றி அனைவருக்கும் தெரியப்படுத்தும் விஷயமாகும். தெளிவாக சொல்ல வேண்டும் என்றால் தங்கள் வாழும் காலத்தின் பின்னணியில் கடந்த காலத்தின் நிகழ்வுகளை விளக்கி வரலாறாக எழுதுகின்றனர். சரி இந்த பதிவில் நாம் நமது வாழ்வில் கடந்து செல்லும் ஒவ்வொரு நாட்களிலும் ஏதாவது ஒரு விஷயம் நிகழ்ந்திருக்கலாம் அந்த  வகையில் வரலாற்றில் இன்று என்ன நாள்? என்பதை பற்றி நாம் நமது மின்கைத்தடியின் இந்த தொகுப்பில் படித்து தெரிந்து கொள்வோம் வாங்க..

வரலாற்றில் இன்று | Today History in Tamil

ஜனவரி 20 கிரிகோரியன் ஆண்டின் 20 ஆம் நாளாகும். ஆண்டு முடிவிற்கு மேலும் 345 (நெட்டாண்டுகளில் 346) நாட்கள் உள்ளன.

நிகழ்வுகள்

1265 – இங்கிலாந்து நாடாளுமன்றம் தனது முதலாவது கூட்டத்தை வெஸ்ட்மின்ஸ்டர் அரண்மனையில் நடத்தியது.
1523 – இரண்டாம் கிறிஸ்டியான் டென்மார்க், நோர்வேயின் மன்னர் பதவியில் இருந்து அகற்றப்பட்டான்.
1649 – இங்கிலாந்தின் முதலாம் சார்ல்ஸ் மன்னனுக்கெதிராக தேசத்துரோகக் குற்றச்சாட்டுகளுக்காக விசாரணைகள் ஆரம்பமாயின.
1783 – பெரிய பிரித்தானியா, பிரான்ஸ் மற்றும் ஸ்பெயின் ஆகியன புரட்சிப் போரை முடிவுக்குக் கொண்டு வரும் பொருட்டு அமைதி உடன்பாட்டில் கைச்சாத்திட்டன.
1788 – இங்கிலாந்தில் இருந்து கைதிகளை ஏற்றிக்கொண்டு வந்த முதல் தொகுதி கப்பல்களின் மூன்றாவது கப்பல் நியூ சவுத் வேல்சின் பொட்டனி விரிகுடாவை அடைந்தன.
1795 – பிரெஞ்சுப் படைகள் ஆம்ஸ்டர்டாமைக் கைப்பற்றின.
1839 – யூங்கே என்ற இடத்தில் பெரு மற்றும் பொலீவியா கூட்டுப் படைகளுடன் இடம்பெற்ற சமரில் சிலி வெற்றி பெற்றது.
1841 – ஹாங்காங் தீவு பிரித்தானியாவினால் கைப்பற்றப்பட்டது.
1887 – பேர்ள் துறைமுகத்தை கடற்படைத்தளமாகப் பாவிப்பதற்கு அமெரிக்க செனட் அனுமதியளித்தது.
1892 – முதலாவது அதிகாரபூர்வமான கூடைப்பந்தாட்ட விளையாட்டு மசாசுசெட்சில் இடம்பெற்றது.
1906 – வாரன்ஸ் சர்க்கஸ் (Warren’s Circus) யாழ்ப்பாணம் வந்திறங்கியது. இதுவே யாழ்ப்பாணம் கண்ட முதலாவது சர்க்கஸ் ஆகும்.
1913 – யாழ்ப்பாணம், உடுவிலில் இராமநாதன் பெண்கள் கல்லூரி ஆரம்பிக்கப்பட்டது.
1936 – எட்டாம் எட்வேர்ட் ஐக்கிய இராச்சிய மன்னனாக முடிசூடினார்.
1929 – வெளிப்புறக் காட்சிகளைக் கொண்ட முதலாவது முழு-நீளத் திரைப்படம் In Old Arizona திரையிடப்பட்டது.
1944 – இரண்டாம் உலகப் போர்: பிரித்தானியாவின் ரோயல் வான்படையினர் பேர்லின் மீது 2,300 தொன் குண்டுகளை வீசினர்.
1945 – ஹங்கேரி இரண்டாம் உலகப் போரில் தனது பங்கை முடித்துக் கொள்வதாக அறிவித்தது.
1947 – கொலை முயற்சி ஒன்றிலிருந்து மகாத்மா காந்தி உயிர் தப்பினார்.
1969 – முதலாவது துடிமீன் கிராப் விண்மீன் தொகுதியில் கண்டுபிடிக்கப்பட்டது.
1981 – ரொனால்ட் ரேகன் ஐக்கிய அமெரிக்கக் குடியரசுத் தலைவராகி 20 நிமிடங்களில் ஈரான் தான் 444 நாட்களாகப் பிடித்து வைத்திருந்த 52 அமெரிக்க பணயக் கைதிகளையும் விடுவித்தது.
1990 – அசர்பைஜானிய விடுதலைக்கு ஆதரவான போராட்டம் சோவியத் இராணுவத்தினரால் நசுக்கப்பட்டது.
1991 – சூடான் அரசு நாடெங்கும் இஸ்லாமியச் சட்டத்தை அறிமுகப்படுத்தியதில் நாட்டின் வடக்குப் பகுதி முஸ்லிம்களுக்கும் தெற்கில் வாழும் கிறிஸ்தவர்களுக்கும் இடையில் உள்நாட்டுப் போர் மேலும் தீவிரமடைந்தது.
1992 – பிரான்சில் பயணிகள் விமானம் ஒன்று வீழ்ந்து நொருங்கியதில் 85 பேர் கொல்லப்பட்டனர்.
2001 – பிலிப்பீன்சில் இடம்பெற்ற புரட்சியில் தலைவர் ஜோசப் எஸ்ட்ராடா பதவியகற்றப்பட்டு குளோரியா மக்கபாகல்-அறாயோ தலைவரானார்.

பிறப்புகள்

1873 – ஜொஹன்னஸ் வில்ஹெம் ஜென்சென், இலக்கியத்துக்கான நோபல் பரிசு பெற்றவர் (இ. 1950)
1920 – பெடெரிக்கோ ஃபெலினி, இத்தாலியத் திரைப்பட இயக்குனர் (இ. 1993)
1930 – எட்வின் ஆல்ட்ரின், அமெரிக்க விண்வெளி வீரர்
1931 – டேவிட் லீ, நோபல் பரிசு பெற்ற அமெரிக்க இயற்பியலாளர்
1956 – பில் மேகர், அமெரிக்க மேடைச் சிரிப்புரையாளர்

இறப்புகள்

1838 – ஒசியோலா, அமெரிக்க தொல்குடி போர்த் தலைவன் (பி. 1804)
1936 – ஐந்தாம் ஜார்ஜ், இங்கிலாந்தின் மன்னன் (பி. 1865)
1987 – பெரியசாமி தூரன், கருநாடக இசை வல்லுனர் (பி. 1908)

சிறப்பு நாள்

மெரிக்க அதிபர்கள் பதவியேற்கும் நாள் (1937 இலிருந்து)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Follow by Email
Instagram
Telegram
WhatsApp
FbMessenger
URL has been copied successfully!