கான் அப்துல் கஃபார் கான் (எல்லைக் காந்தி)
கான் அப்துல் கஃபார் கான் (எல்லைக் காந்தி) நினைவு தினம்:
பிரிட்டிஷ் இந்தியாவின் முக்கிய தலைவர்களுள் ஒருவரும், எல்லைக் காந்தி என்றும் அழைக்கப்படும் கான் அப்துல் கஃபார் கான் 1890ஆம் ஆண்டு பிப்ரவரி 6ஆம் தேதி பிரிட்டிஷ் இந்தியாவின் பஞ்சாப் மாகாணம் உத்மான்ஜாய் என்ற கிராமத்தில் (தற்போது பாகிஸ்தானின் கைபர் பக்துன்க்வா பகுதியில் உள்ளது) பிறந்தார்.
காந்திஜியின் அகிம்சை கொள்கைகளாலும், போராட்ட முறைகளாலும் கவரப்பட்டு அரசியலில் நுழைந்தார். இவர் மகாத்மா காந்தியின் நெருங்கிய நண்பர். அஞ்சுமான் என்ற அமைப்பை உருவாக்கிய இவர் அதன்மூலம் தன் மக்களுக்கு கல்வி கற்பித்தல், அன்பு வழியை போதித்தல் போன்ற பணிகளில் ஈடுபட்டார்.
பின்பு தனது அமைப்பை காங்கிரஸஷுடன் இணைத்தார். 1929-ல் குதாய் கித்மத்கர் என்ற அமைதி இயக்கத்தை தொடங்கினார். சமூக சீர்திருத்தத்திற்கும், பிரிட்டிஷ் ஆட்சியை முடிவுக்கு கொண்டுவரவும் இந்த அமைப்பு உதவியாக இருந்தது.
இவருக்கு பாரத ரத்னா விருது 1987-ல் வழங்கப்பட்டது. இந்த விருதை பெற்ற முதல் வெளிநாட்டவர் இவர்தான்.
பாட்ஷா கான் என்று மக்களால் அன்போடு அழைக்கப்பட்ட கான் அப்துல் கஃபார் கான் தனது 97-வது வயதில் இதே ஜனவரி 20 (1988) மறைந்தார்.