நடிகை பி. சாந்தகுமாரி நினைவு நாளின்று![]()
பி. சாந்தகுமாரி – ) தெலுங்கு, தமிழ், இந்தி மொழித் திரைப்படங்களில் றத்தாழ 50 ஆண்டு காலத்திற்கு நடித்தார்.
தெலுங்கு, தமிழ்த் திரைப்பட இயக்குனரான பி. புல்லையா சாந்தகுமாரியின் கணவராவார்.
சுப்பம்மா எனும் இயற்பெயரைக் கொண்ட சாந்தகுமாரி, கடப்பா எனும் மாவட்டத்தில் பிறந்தவர். பேராசிரியர் சாம்பமூர்த்தியிடம் மாணவியாகச் சேர்ந்து வாய்ப்பாட்டும் வயலின் வாசிப்பும் கற்றார். அப்போது சக மாணவியாக இருந்தவர் டி. கே. பட்டம்மாள் ஆவார். தனது 13ஆவது வயதில் கர்நாடக இசையில் வாய்ப்பாட்டு, வயலின் வாசிப்பில் தேர்ச்சி பெற்றார். தனது 15ஆவது வயதில், தென்னிந்தியா முழுவதும் இசைக் கச்சேரிகளை செய்ய ஆரம்பித்தார். பள்ளியொன்றில் இசையாசிரியராகவும் பணியாற்றி வந்தார். கச்சேரி ஒன்றில் சாந்தகுமாரியை சந்தித்த பி. வி. தாஸ் எனும் இயக்குநர், மாயா பஜார் (1936) திரைப்படத்தில் நடிக்க வைத்தார்.
திரைப்படங்களில் தாய் வேடமேற்று நடிப்பதில் புகழ் பெற்றிருந்தார். தெலுங்கு, தமிழ்ப் படங்களில் அப்போதைய முன்னணி நடிகர்களான சிவாஜி கணேசன், ஜெமினி கணேசன், முத்துராமன், கல்யாண்குமார், சிவகுமார், நாகேஸ்வர ராவ், என்.டி. ராமாராவ், ஜக்கையா என அனைவருக்கும் அன்னையாக நடித்தவர்.
திரைக்கு வெளியிலும் கூட அந்த ‘செல்லுலாய்ட் மகன்கள்’ இவரை ‘மம்மி’ என்றே அன்பு பொங்க அழைத்து மகிழ்ந்தனர். அதேபோல அவரது கணவரும் இயக்குநருமான பி.புல்லையா ‘டாடி’ என்று அழைக்கப்பட்டார். ஒட்டுமொத்தத் திரையுலகும் இவர்களை டாடியும் மம்மியுமாக நினைத்து அழைத்து மகிழ்ந்தது, 1936ல் துவங்கிய இவரது திரைப்பயணம் 1979 வரை நீண்டது.
சாந்தகுமாரி மொத்தமாக 250 திரைப்படங்களில் நடித்தார். அவற்றுள் 60 தமிழ்த் திரைப்படங்கள் அடங்கும்.
