திருவள்ளுவர் தினம்
திருவள்ளுவர் தினம் – வரலாறும் சிறப்புகளும்
நாடு கடந்து வாழும் தமிழர்களால் ஆண்டுதோறும் தை மாதத்தின் முதல் நாள் பொங்கல் விழாவாக கொண்டாடப்பட்டுவருகிறது. பொங்கல் கொண்டாட்டம் என்பது எப்போதும் ஒரு நாளில் முடிவு அடைவதில்லை. தை 1ம் தேதி பொங்கல் விழாவும், தை 2-ம் தேதி மாட்டுப் பொங்கலாகவும், திருவள்ளுவர் தினமாகவும் கடைபிடிக்கப்பட்டுவருகிறது.
1333 திருக்குறள்கள் மூலம் வாழ்க்கையின் அனைத்து நெறிகளையும் கற்பித்துச் சென்றவர் திருவள்ளுவர். பிரதமர் மோடி உள்பட தலைவர்கள் பலரும் தங்களுடைய உரைகளின்போது இன்றளவும் திருக்குறளை மேற்கொள் காட்டுவதை வழக்கமாக வைத்துள்ளனர். திருவள்ளுவரை பெருமைப்படுத்தும் விதமாக ஆண்டுதோறும் திருவள்ளுவர் தினம் அனுசரிக்கப்படுகிறது.
மறைமலை அடிகள் தலைமையில் 500க்கும் மேற்பட்ட தமிழறிஞர்கள் 1921ஆம் ஆண்டு சென்னை-பச்சையப்பன் கல்லூரியில் கூடி தமிழர்களுக்கென ஒரு தனி ஆண்டு’ தேவை என்று கருதி, திருவள்ளுவர் பெயரில் தொடர் ஆண்டு ஒன்றைப் பின்பற்றுவது என்றும், அதையே “தமிழ் ஆண்டு’ எனக் கொள்வதென்றும், திருவள்ளுவர் பிறந்த ஆண்டு கி.மு. 31 என்றும் முடிவெடுத்தார். அதனைக் கணக்கிட்டு திருவள்ளுவர் ஆண்டு அனுசரிக்கப்படுகிறது. எனினும் திருவள்ளுவர் பிறந்த வருடத்திற்கான சான்றுகள் எதுவும் கிடைக்கவில்லை. அவரை சமணர் என்றும் சைவர் என்றும் சிலர் கூறி வருகிறார்கள். வள்ளுவர் பிறந்த மாதம் வைகாசி எனக் கூறப்பட்டு விழா எடுக்கப்பட்டு வந்த நிலையில், 1971ஆம் ஆண்டு முதல் தை 2ஆம் தேதி திருவள்ளுவர் தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. திருவள்ளுவர் தினத்தை முன்னிட்டு சென்னை காமராஜர் சாலையில் உள்ள திருவள்ளுவர் சிலைக்கு தமிழ்நாடு அரசின் சார்பில் மரியாதை செலுத்தப்படும்.
இன்று டாஸ்மாக் கடைகளுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.