8ஆயிரம் ஆண்டு பழமையான முத்து அபுதாபியில் கண்டுபிடிப்பு

 8ஆயிரம் ஆண்டு பழமையான முத்து அபுதாபியில் கண்டுபிடிப்பு
8ஆயிரம் ஆண்டு பழமையான முத்து அபுதாபியில் கண்டுபிடிப்பு
ஐக்கிய அரபு அமீரக தலைநகரான அபுதாபியில், 8ஆயிரம் ஆண்டுகள் அபுதாபியில் உலகில் பழமையான முத்து ஒன்று தொல்லியல் ஆய்வாளர்கள் கண்டுபித்து உள்ளனர். மறவா தீவில் பல ஆண்டுகளாக தொல்பொருள் ஆய்வுகள் நடைபெற்று வந்தது. இதில் கற்காலத்தை சேர்த்த கற்சிற்ப்பங்கள் பீங்கான் பொருட்கள், ஓடு மற்றும் கற்களால் செய்யப்பட்ட மணிகள் என ஏராளமான பழங்கால பொருட்கள் கிடைத்து வருகின்றன. இதில் மிகப்பெரிய பொக்கிஷமாக, பழையமான முத்து ஒன்றும் சமீபத்தில் கிடைத்துள்ளது. 
குறிப்பாக 5800 முதல் 5600 வரையிலான ஆண்டுகளுக்கு இடைப்பட்டதாக இருக்கும என கண்டறியப்பட்டு உள்ளது. அதாவது கற்காலத்தின் கடைசி பகுதியை சேர்ந்தது என ஆய்வாளர்கள் தெரிவித்தனர். இந்த முத்து கண்டுபிடிக்கப்பட்டதால் அமீரக தொல்பொருள் ஆய்வாளர்களிடம் மிகுந்த மகிழ்ச்சி ஏற்பட்டு உள்ளது. அபுதாபி முத்து என பெயரிடப்பட்டு உள்ள இந்த முத்து, அபுதாபியில் உள்ள லூவர் அருங்காட்சியகத்தில் 30-ம் தேதி முதல் பொதுமக்களின் பார்வைக்கு வைக்கப்பட்டுகிறது.

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...