சிலி அரசுக்கு எதிரான போராட்டம் பலி எண்ணிக்கை 10

 சிலி அரசுக்கு எதிரான போராட்டம் பலி எண்ணிக்கை 10

சிலி அரசுக்கு எதிரான போராட்டம் பலி எண்ணிக்கை 10

லத்தீன் அமெரிக்க நாடான சிலியல் மெட்ரோ ரயில் கட்டணத்தை அந்நாட்டு அரசு உயர்த்தியது. எரிபொருள் விலையுயர்வு மற்றும் அந்நாட்டு நாணயமான பீசோவின் மதிப்பு குறைவு உள்ளிட்ட காரணங்களால் கட்டணம் உயர்த்தப்பட்டதாக அரசு விளக்கம் அளித்துள்ளது. ஆனால் இந்த கட்டண உயர்விற்கு பள்ளி மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் கண்டனம் தெரிவித்து போராட்டத்தில் குதித்தனர். கடந்த வெள்ளிககிழமை தலைநகர் சாண்டியாகோவில் நடைபெற்ற போராட்டத்தில் பெரும் வன்முறை வெடித்தது. 

அதனை தொடர்ந்து அங்கு அவசரகால நிலை பிறப்பிக்கப்பட்டது. கட்டண உயர்வு ரத்து செய்யப்படுவதாக அதிபர் செபாஸ்டியன் பினெரா அறிவித்த பின்னரும் அரசுக்கு எதிராக சாண்டியா மக்கள் திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். ரயில் சேவைகள் நிறுத்தப்பட்டன. சில பகுதிகளில் ரயில் மற்றும் பேருந்துகள் எரிக்கப்பட்டன. போலீசார் கண்ணீர் புகைகுண்டுகளை வீசியதோடு தடியடியும் நடத்தினர். இதனால் இருதரப்புக்கும் இடையே மோதல் வெடித்தது. 

போராட்டம் வெடித்து மார்க்கெட்டுக்குள் புகுந்து தீவைத்தனர். இதில் சூப்பர் மார்க்ெட் முழுவதும் தீ பரவி கொழுந்து விட்டு எரிந்தது. இந்த தீயில் சிக்கி 3பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இந்நிலையில் போராட்டத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 10 ஆக உயர்ந்துள்ளது. கடந்த 1990ம் ஆண்டு சிலி ஜனநாயக நாடாக மாறிய பிறகு முதன்முறையாக அங்கு அவசர நிலை பிறப்பிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...