தமிழ்நாட்டில் ஜிஎஸ்டி வசூல் அதிகரிப்பு!
தமிழ்நாட்டில் ஜிஎஸ்டி வசூல் அதிகரிப்பு!
நாட்டில் பொருளாதார மந்தநிலை நிலவினாலும், தமிழ்நாட்டில் நடப்பாண்டின் முதல் அரையாண்டில் ஜிஎஸ்டி வசூல் 4.64 சதவிகிதம் என்ற சீரான வளர்ச்சி கண்டுள்ளது.
நடப்பு நிதியாண்டின் ஏப்ரல் முதல் செப்டம்பர் வரையிலான 6 மாதங்களில் சரக்கு மற்றும் சேவை வரி திட்டத்தின் கீழ் வரி வசூல் 42 ஆயிரத்து 765 கோடி ரூபாய் என மதிப்பிடப்பட்டுள்ளது. இதுவே முந்தைய நிதியாண்டின் முதல் அரையாண்டில் ஜிஎஸ்டி வசூல் 40 ஆயிரத்து 867 கோடியாக இருந்தது.
ஜிஎஸ்டி வரியின் வருவாய் தொடர்பான அறிக்கை அண்மையில் வெளியானது. அதன்படி செப்டம்பர் மாதத்திற்கான ஜிஎஸ்டி வருவாய் 91,916 கோடியாக வந்துள்ளது. இது கடந்த 19 மாதங்களில் மிகவும் குறைந்த ஜிஎஸ்டி வரி வருவாய் ஆகும். இது கடந்த ஆண்டு செப்டமபர் மாதம் வசூலான வருவாய் தொகையைவிட 2.67 சதவிகிதம் குறைந்தது குறிப்பிடத்தக்கது. இருப்பினும், தமிழ்நாட்டில் நடப்பாண்டின் முதல் அரையாண்டில் ஜிஎஸ்டி வசூல் 4.64 சதவிகிதம் என்ற சீரான வளர்ச்சி கண்டுள்ளது.