பெங்களூர், மைசூரில் தீவிரவாதிகள் பதுங்கியிருக்கலாம்
பெங்களூர், மைசூரில் தீவிரவாதிகள் பதுங்கியிருக்கலாம்: கர்நாடக உள்துறை அமைச்சர் பசவராஜ் பொம்மை.
பெங்களூருவில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தீவிரவாதிகளின் ஸ்லீப்பர் செல் எனப்படும் ஒரு பிரிவினர் மைசூரிலும் பெங்களூரிலும் இருப்பதாகவும், கடலோர மாவட்டங்கள் மற்றும் சில முக்கிய நகரங்களில் தீவிரவாதிகளின் நடமாட்டம் இருப்பதாக என்.ஐ.ஏ. அதிகாரிகள் சந்தேகிப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஜமால் உல் முஜாயிதீன் பங்களாதேஷி என்ற இயக்கம் கர்நாடகத்தின் கடலோர மாவட்டங்கள் மட்டுமின்றி அரபிக் கடலோரத்திலும், வங்கக்கடலோரத்திலும் பல்வேறு இடங்களில் ஊடுருவியிருக்கலாம் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.
கர்நாடக காவல்துறை முழு விழிப்புடன் கண்காணித்து வருவதாகவும் தெரிவித்த, பசவராஜ் பொம்மை மக்கள் கூடும் இடங்களில் சந்தேகத்திற்குரிய நபர்களைப் பிடித்து விசாரித்து வருவதாகவும் தெரிவித்தார்.
தமிழகத்தின் கிருஷ்ணகிரி மலைப்பகுதிகளில் தீவிரவாதிகள் பயிற்சி பெற்று வருவதாகவும் என்.ஐ.ஏ, அதிகாரிகள் நடத்திய விசாரணையில் தெரிய வந்துள்ளது. கடந்த ஆண்டு சில தீவிரவாதிகள் சிக்கியதையடுத்து, பெங்களூரில் நவம்பர் ஒன்றாம் தேதி முதல் தீவிரவாதத் தடுப்பு பிரிவு செயல்பட உள்ளது.