வரலாற்றில் இன்று (30.12.2023 )

வரலாறு என்பது இறந்த காலத்தில் நிகழ்ந்த விஷயத்தை பற்றி நாம் தெரிந்து கொள்ளும் ஒன்றாகும். குறிப்பாக வரலாற்றில் ஒருவர் செய்த சாதனைகள், தியாகங்கள், சிறப்புகள் இதுபோன்ற பலவகையான முக்கிய விஷயங்கள் பற்றி அனைவருக்கும் தெரியப்படுத்தும் விஷயமாகும். தெளிவாக சொல்ல வேண்டும் என்றால் தங்கள் வாழும் காலத்தின் பின்னணியில் கடந்த காலத்தின் நிகழ்வுகளை விளக்கி வரலாறாக எழுதுகின்றனர். சரி இந்த பதிவில் நாம் நமது வாழ்வில் கடந்து செல்லும் ஒவ்வொரு நாட்களிலும் ஏதாவது ஒரு விஷயம் நிகழ்ந்திருக்கலாம் அந்த  வகையில் வரலாற்றில் இன்று என்ன நாள்? என்பதை பற்றி நாம் நமது மின்கைத்தடியின் இந்த தொகுப்பில் படித்து தெரிந்து கொள்வோம் வாங்க..

வரலாற்றில் இன்று | Today History in Tamil

திசம்பர் 30 (December 30) கிரிகோரியன் ஆண்டின் 364 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 365 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் ஒரு நாள் உள்ளது

நிகழ்வுகள்

1066 – எசுப்பானியாவின் கிரனாதாவில் அரச மாளிகையைத் தாக்கிய முசுலிம் கும்பல் ஒன்று யோசப் இப்னு நக்ரேலா என்ற யூதத் தலைவரை சிலுவையில் அறைந்து கொலை செய்து, நகரில் உள்ள பெரும்பாலான யூத மக்களைக் கொன்றனர்.
1460 – ரோசாப்பூப் போர்கள்: இங்கிலாந்தில் யோர்க்கின் 3வது இளவரசர் ரிச்சார்டை லங்காசயர் மக்கள் கொலை செய்தனர்.
1813 – பிரித்தானிய அமெரிக்கப் போர், 1812: பிரித்தானியப் படையினர் நியூ யார்க்கின் பஃபலோ நகரை தீயிட்டு அழித்தனர்.
1853 – ஐக்கிய அமெரிக்கா தொடருந்து போக்குவரத்துப் பாதை அமைப்பதற்காக மெக்சிக்கோவிடம் இருந்து 76,770 சதுரகிமீ பரப்பளவு கொண்ட காட்சென் என்ற இடத்தை 10 மில்லியன் அமெரிக்க டாலர்களுக்கு வாங்கியது.
1896 – பிலிப்பீன்சின் தேசியவாதி ஒசே ரிசால் மணிலாவில் எசுப்பானிய ஆதிக்கவாதிகளால் மரணதண்டனைக்குட்படுத்தப்பட்டு சுட்டுக் கொல்லப்பட்டார். இந்நாள் பிலிப்பீன்சில் ரிசால் நாள் என்ற பெயரில் விடுமுறை நாளாகும்.
1897 – பிரித்தானியக் குடியேற்ற நாடான நட்டால் சூலிலாந்தை இணைத்துக் கொண்டது.
1903 – சிக்காகோவில் நாடக அரங்கு ஒன்றின் இடம்பெற்ற தீயினால் குறைந்தது 605 பேர் இறந்தனர்.
1906 – அகில இந்திய முசுலிம் லீக் கட்சி டாக்காவில் ஆரம்பிக்கப்பட்டது.
1916 – உருசிய மந்திரவாதியும் உருசியப் பேரரசரின் ஆலோசகருமான கிரிகோரி ரஸ்புடின் இளவரசர் பெலிக்சு யுசுப்போவின் ஆதரவுப் படைகளினால் கொல்லப்பட்டார். இவரது உடல் மூன்று நாட்களின் பின்னர் மாஸ்கோ ஆறொன்றில் இருந்து கண்டெடுக்கப்பட்டது.
1916 – அங்கேரியின் கடைசி மன்னராக முதலாம் சார்லசு முடிசூடினார்.
1922 – சோவியத் சோசலிசக் குடியரசுகளின் ஒன்றியம் உருவாக்கப்பட்டது.
1924 – யாழ்ப்பாணம் இளைஞர் காங்கிரஸ் மாநாட்டில் சாதி ஒழிப்புத் தீர்மானம் கொண்டுவரப்பட்டது.
1924 – நாள்மீன்பேரடைகள் பலவற்றின் இருப்பு பற்றி எட்வின் ஹபிள் அறிவித்தார்.
1941 – மகாத்மா காந்தி இந்திய தேசிய காங்கிரசு தலைமைப் பதவியிலிருந்து விலகினார்.
1943 – சுபாஷ் சந்திர போஸ் அந்தமான் தீவுகளின் போர்ட் பிளையர் நகரில் இந்திய விடுதலைக் கொடியை ஏற்றினார்.
1947 – பனிப்போர்: உருமேனியாவின் மன்னர் முதலாம் மைக்கேல் சோவியத் ஆதரவு கம்யூனிச அரசால் பதவியில் இருந்து அகற்றப்பட்டார்.
1949 – இந்தியா சீனாவை அங்கீகரித்தது.
1965 – பேர்டினண்ட் மார்க்கொஸ் பிலிப்பீன்சின் அரசுத்தலைவராகத் தெரிவு செய்யப்பட்டார்.
1972 – வியட்நாம் போர்: ஐக்கிய அமெரிக்கா வடக்கு வியட்நாம் மீதான குண்டுத் தாக்குதல்களை இடைநிறுத்தியது.
1993 – இசுரேலும் வத்திக்கானும் தூதரக உறவுகளை ஏற்படுத்தின.
1996 – அசாம் மாநிலத்தில் பயணிகள் தொடருந்து ஒன்றில் போடோ போராளிகளால் வைக்கப்பட்ட குண்டு வெடித்ததில் 26 பேர் கொல்லப்பட்டனர்.
1997 – அல்ஜீரியாவில் நான்கு ஊர்களில் இடம்பெற்ற வன்முறைகளில் மொத்தம் 400 பேர் கொல்லப்பட்டனர்.
2000 – பிலிப்பீன்சின் தலைநகர் மணிலாவில் இடம்பெற்ற பல தொடர் குண்டுவெடிப்புகளில் 22 பேர் கொல்லப்பட்டு நூற்றுக்கணக்கானோர் படுகாயமடைந்தனர்.
2004 – அர்கெந்தீனாவின் புவனெசு ஐரிசு நகரில் இரவு விடுதி ஒன்றில் இடம்பெற்ற தீயினால் 194 பேர் உயிரிழந்தனர்.
2006 – எசுப்பானியாவில் மத்ரித்-பராஹாஸ் விமான நிலையம் மீது எட்டா போராளிகள் குண்டுத்தாக்குதல் நடத்தியதில் இருவர் கொல்லப்பட்டு 50 பேருக்கு மேல் காயமடைந்தனர்.
2006 – முன்னாள் ஈராக் அரசுத்தலைவர் சதாம் உசேன் தூக்கிலிடப்பட்டார்.
2006 – நடுக்கடலில் ஏற்பட்ட புயலில் 850 பயணிகளுடன் சென்ற செனாபதி நுசந்தாரா என்ற இந்தோனீசியக் கப்பல் கடலில் மூழ்கியது. 400 பேர் வரை உயிரிழந்தனர்.
2006 – முல்லைத்தீவு மாவட்ட கத்தோலிக்க ஆலயத்தால், கடல்கோளால் பாதிக்கப்பட்டவர்களை பராமரிக்கும் ஆண், பெண் விடுதிகள் மீதும் பொதுமக்கள் வீடுகள் மீதும் விமானத் தாக்குதல் நடைபெற்றதில் ஐந்து சிறுவர்கள் படுகாயமடைந்தனர்.
2013 – காங்கோ தலைநகர் கின்சாசாவில் அரசு-எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்றை அடுத்து 100 பேர் வரை கொல்லப்பட்டனர்.

பிறப்புகள்

39 – டைட்டசு, உரோமைப் பேரரசர் (இ. 81)
1865 – இரட்யார்ட் கிப்ளிங், நோபல் பரிசு பெற்ற ஆங்கிலேய எழுத்தாளர் (இ. 1936)
1879 – இரமண மகரிசி, இந்திய மதகுரு, மெய்யியலாளர் (இ. 1950)
1887 – கே. எம். முன்ஷி, இந்திய விடுதலைப் போராட்ட வீரர், அரசியல்வாதி (இ. 1971)
1895 – எஸ். இராமநாதன், தமிழக அரசியல்வாதி (இ. 1970)
1917 – பாய் மோகன் சிங், இந்திய மருந்தியல் தொழில் முன்னோடி
1923 – பிரகாஷ் வீர் சாஸ்திரி, இந்திய அரசியல்வாதி, சமக்கிருத அறிஞர் (இ. 1977)
1930 – தூ யூயூ, நோபல் பரிசு பெற்ற சீன மருத்துவர்
1950 – பியார்னே இசுற்றூத்திரப்பு, தென்மார்க்கு கணினி அறிவியலாளர்
1975 – டைகர் வுட்ஸ், அமெரிக்க குழிப்பந்தாட்ட வீரர்

இறப்புகள்

274 – முதலாம் ஃபெலிக்ஸ் (திருத்தந்தை)
1896 – ஒசே ரிசால், பிலிப்பீனிய ஊடகவியலாளர் (பி. 1861)
1916 – கிரிகோரி ரஸ்புடின், உருசிய மந்திரவாதி (பி. 1869)
1944 – ரோமைன் ரோலண்ட், நோபல் பரிசு பெற்ற பிரான்சிய எழுத்தாளர் (பி. 1866)
1947 – ஆல்பிரட் நார்த் வொய்ட்ஹெட், ஆங்கிலேய-அமெரிக்க கணிதவியலாளர், மெய்யியலாளர் (பி. 1861)
1968 – திறிகுவே இலீ, நோர்வே அரசியல்வாதி, ஐநாவின் 1வது பொதுச் செயலர் (பி. 1896)
1971 – விக்கிரம் சாராபாய், இந்திய இயற்பியலாளர் (பி. 1919)
1973 – வி. நாகையா, தென்னிந்தியத் திரைப்பட நடிகர், பாடகர் (பி. 1904)
1988 – இசாமு நொகுச்சி, அமெரிக்க சிற்பி (பி. 1904)
1997 – ப. சிங்காரம், தமிழக எழுத்தாளர் (பி. 1920)
2006 – சதாம் உசேன், ஈராக்கின் 5வது அரசுத்தலைவர் (பி. 1937)
2006 – சந்திரலேகா, பரத நாட்டியக் கலைஞர் (பி. 1928)
2009 – விஷ்ணுவர்தன், கன்னடத் திரைப்பட நடிகர் (பி. 1949)
2010 – பொபி ஃபாரெல், பொனி எம் பாப் இசைக் குழு உறுப்பினர் (பி. 1949)
2012 – ரீட்டா லெவி மோண்டால்சினி, நோபல் பரிசு பெற்ற இத்தாலிய மருத்துவர் (பி. 1909)
2013 – கோ. நம்மாழ்வார், தமிழ்நாட்டு இயற்கை ஆர்வலர் (பி. 1938)
2014 – இராசமனோகரி புலேந்திரன், இலங்கைத் தமிழ் அரசியல்வாதி (பி. 1949)
2014 – பீ. ஜீ. வர்கீஸ், இந்திய இதழியலாளர், எழுத்தாளர் (பி. 1927)

சிறப்பு நாள்

ரிசால் நாள் (பிலிப்பீன்சு)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Follow by Email
Instagram
Telegram
WhatsApp
FbMessenger
URL has been copied successfully!