world tea day

வேர்ல்ட் டீ டே☕ டு டே!♥

☕டீ குடிக்கலாம் என்று ஹோட்டல் சென்றால், “டீயா, காபியா’’ என்று கேட்ட காலம் போய், “கிரீன் டீயா, லெமன் டீயா வொயிட் டீயா” எனக் கேட்டு, கலர் கலராய் டீ விற்கத் தொடங்கிவிட்டார்கள். நாம் வழக்கமாகச் சாப்பிடும் டீ, ‘டஸ்ட் டீ’ வகையில் வரும். டீ வகைகளில் உடலுக்கு எந்த நலனையும் தராத டீ இது

கிமு 2737ல் இடம்பெற்றதாகக் கூறப்படும் ஒரு புகழ்பெற்ற சீனக் கதையொன்றின்படி, வேளாண்மையையும், சீன மருத்துவ முறையையும் கண்டுபிடித்ததாகக் கருதப்படும் ஷென்னொங் என்னும் சீனப் பேரரசன், ஒரு நாள் சுடுநீர் அருந்திக்கொண்டு இருந்தானாம். அப்போது, காற்று வீச அருகிலிருந்த மரமொன்றிலிருந்து சில இலைகள் அவன் அருந்திக்கொண்டு இருந்த நீருள் விழுந்தனவாம். அப்போது நீரின் நிறம் மாறுவதை அவன் கவனித்தான். புதிய விடயங்களை அறிந்துகொள்வதில் ஆர்வம் கொண்டிருந்த பேரரசன், அந்த நீரில் ஒரு மிடறு அருந்தி அதன் வாசனையையும், உற்சாகம் தரும் இயல்பையும் அறிந்து வியந்தானாம்.

இப்பேர்பட்ட தேநீரை தினமும் 3 கோப்பை குடித்தால் இதய நோய்கள் வருவதற்கான வாய்ப்பு குறைவு என்று பிரிட்டன் ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர். முக்கியமாக தேநீர் குடிப்பது மாரடைப்பு ஏற்படுவதை பெருமளவுக்கு தடுக்கிறது.இப்படி தேநீர் குடிப்பதால் ஏற்படும் நன்மைகள் குறித்து ஏற்கெனவே பல ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

தற்போது உலகில் தண்ணீருக்கு அடுத்த படியாக உலக மக்களால் அதிக அளவில் அருந்தப்படும் பானமாக தேநீர் என்ப்படும் டீ உள்ளது. தேயிலையை சர்வ நோய் நிவாரணி பானமாக உலக சுகாதார நிறுவனம் அறிவித்தமையினால் இன்று உலகின் அனைத்து நாடுகளும் தேநீரைப் பருகும்படி தம்நாட்டு மக்களை ஊக்குவித்து வருகின்றன. எனவே தேயிலை உற்பத்தியின் தேவை மக்கள்தொகை அதிகரிப்பிற்கேற்ப அதிகரித்துச் செல்ல வேண்டிய தேவை உள்ளது. எனவே, தேயிலை உற்பத்திற்கான சூழலைக் கொண்டுள்ள நாடுகள் தேயிலை உற்பத்தியில் ஈடுபட்டு வருகின்றன.

அறுபதுகளுக்கு முன்பதாக சீனா, இந்தியா மற்றும் இலங்கை உள்ளிட்ட சில நாடுகளே தேயி-லையை உற்பத்தி செய்து வந்தன. ஆனால் இன்று உலகின் 58 நாடுகள் தேயிலை உற்பத்தியில் ஈடுபட்டு வருகின்றன.

இந்த தேயிலை தினம் மே 21 என்று சொல்வோருமுண்டு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Follow by Email
Instagram
Telegram
WhatsApp
FbMessenger
URL has been copied successfully!