வரலாற்றில் இன்று ( 11.12.2023 )

வரலாறு என்பது இறந்த காலத்தில் நிகழ்ந்த விஷயத்தை பற்றி நாம் தெரிந்து கொள்ளும் ஒன்றாகும். குறிப்பாக வரலாற்றில் ஒருவர் செய்த சாதனைகள், தியாகங்கள், சிறப்புகள் இதுபோன்ற பலவகையான முக்கிய விஷயங்கள் பற்றி அனைவருக்கும் தெரியப்படுத்தும் விஷயமாகும். தெளிவாக சொல்ல வேண்டும் என்றால் தங்கள் வாழும் காலத்தின் பின்னணியில் கடந்த காலத்தின் நிகழ்வுகளை விளக்கி வரலாறாக எழுதுகின்றனர். சரி இந்த பதிவில் நாம் நமது வாழ்வில் கடந்து செல்லும் ஒவ்வொரு நாட்களிலும் ஏதாவது ஒரு விஷயம் நிகழ்ந்திருக்கலாம் அந்த  வகையில் வரலாற்றில் இன்று என்ன நாள்? என்பதை பற்றி நாம் நமது மின்கைத்தடியின் இந்த தொகுப்பில் படித்து தெரிந்து கொள்வோம் வாங்க..

வரலாற்றில் இன்று | Today History in Tamil

திசம்பர் 11 (December 11) கிரிகோரியன் ஆண்டின் 345 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 346 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 20 நாட்கள் உள்ளன.

நிகழ்வுகள்

361 – யூலியன் உரோமையின் தனிப்பெரும் பேரரசராக கான்ஸ்டண்டினோபில் நகர் வந்தார்.
630 – 10,000 போர்வீரர்களுடன் முகம்மது நபி மக்கா நோக்கிச் சென்றார்.
861 – அப்பாசியாவின் கலீபா அல்-முத்தவாக்கி துருக்கியப் படையினரால் படுகொலை செய்யப்பட்டார்.
969 – பைசாந்தியப் பேரரசர் இரண்டாம் நிக்கபோரசு அவரது மனைவி தியோபானோவினாலும், அவளது காதலனாலும் (பின்னாள் பேரரசர் முதலாம் ஜான்) படுகொலை செய்யப்பட்டார்.
1282 – வேல்சின் கடைசிப் பழங்குடி இளவரசர் கடைசி லெவெலின் கொல்லப்பட்டார்.
1688 – மாண்புமிகு புரட்சி: இங்கிலாந்தின் இரண்டாம் யேம்சு, பிரான்சுக்குத் தப்பியோட முயன்ற போது, இங்கிலாந்துப் பேரரசின் இலச்சினையை தேம்சு ஆற்றில் எறிந்து விட்டுச் சென்றார்.
1789 – ஐக்கிய அமெரிக்காவின் மிகப் பழமையான பொதுப் பல்கலைக்கழகம் வட கரொலைனா பல்கலைக்கழகம் (சாப்பல் ஹில்) அமைக்கப்படட்து.
1792 – பிரெஞ்சுப் புரட்சி: பிரான்சின் பதினாறாம் லூயி தேசத்துரோகக் குற்றச்சாட்டுகளுக்காக விசாரணைக்குட்படுத்தப்பட்டார்.
1816 – இந்தியானா அமெரிக்காவின் 19வது மாநிலமாக இணைக்கப்பட்டது.
1868 – பிரேசில் இராணுவம் ஏவாய் சமரில் பரகுவை இராணுவத்தைத் தோற்கடித்தது.
1905 – உக்ரைன் கீவ் (அன்றைய உருசியப் பேரரசின் ஒரு பகுதி) நகரில் தொழிலாளர்களின் கிளர்ச்சி ஆரம்பமானது. சூலியாவ்க்கா குடியரசு உருவானது.
1907 – நியூசிலாந்தின் நாடாளுமன்றக் கட்டடம் முற்றாகத் தீக்கிரையானது.
1917 – முதலாம் உலகப் போர்: பிரித்தானியத் தளபதி எட்மண்ட் அலென்பி எருசலேம் நகரை நடந்து சென்றடைந்து அங்கு இராணுவச் சட்டத்தைப் பிறப்பித்தார்.
1925 – கத்தோலிக்க திருச்சபை கிறிஸ்து அரசர் பெருவிழாவை அறிமுகப்படுத்தியது.
1927 – கம்யூனிச செம்படையினர் சீனாவின் குவாங்சௌவில் கிளர்ச்சியை ஏற்படுத்தி, நகரின் பெரும் பகுதியைக் கைப்பற்றி குவாங்சௌ சோவியத்தை அறிவித்தார்கள்.
1931 – ஆத்திரேலியா, கனடா, அயர்லாந்து, நியூசிலாந்து, தென்னாபிரிக்கா ஆகிய மேலாட்சி அரசுகளுக்குத் தமது முழுமையான அரசியலமைப்புகளைப் பேணும் சட்டமூலம் வெஸ்ட்மின்ஸ்டர் சட்டம் 1931 பிரித்தானிய நாடாளுமன்றத்தில் ஏற்றுக்கொள்ளப்பட்டது.
1936 – ஐக்கிய இராச்சியத்தின் மன்னர் எட்டாம் எட்வர்டு முடிதுறந்தார்.
1937 – இரண்டாம் இத்தாலிய-எத்தியோப்பியப் போர்: இத்தாலி உலக நாடுகள் சங்கத்தில் இருந்து வெளியேறியது.
1937 – எஸ்தோனியாத் தலைவர் ஜான் ஆன்வெல்ட் ஸ்டாலின் ஆட்சியாளர்களால் கைது செய்யப்பட்டுக் கொலை செய்யப்பட்டார்.
1941 – இரண்டாம் உலகப் போர்: அமெரிக்கா சப்பானியப் பேரரசு மீது போரை அறிவித்ததை அடுத்து, செருமனி, இத்தாலி ஆகியன அமெரிக்கா மீது போரை அறிவித்தன.
1941 – இரண்டாம் உலகப் போர்: போலந்து சப்பானியப் பேரரசு மீது போரை அறிவித்தது.
1941 – இரண்டாம் உலகப் போர்: சப்பானியக் கடற்படை வேக் தீவு சமரில் முதலாவது தோல்வியைச் சந்தித்தது.
1946 – ஐக்கிய நாடுகளின் சிறுவர் நிதியம் அமைக்கப்பட்டது.
1958 – மேல் வோல்ட்டா பிரான்சிடம் இருந்து விடுதலை பெற்றது.
1962 – கனடாவில் கடைசி மரண தண்டனை நிறைவேற்றபட்டது.
1964 – சே குவேரா ஐக்கிய நாடுகள் பொதுச் சபையில் உரையாற்றினார். இவர் உரையாற்றிக் கொண்டிருந்தபோது ஐநா கட்டடத்தின் மீது குண்டுத் தாக்குதல் இடம்பெற்றது.
1972 – அப்பல்லோ 17 நிலாவில் இறங்கியது. இதுவே நிலாவில் இறங்கிய ஆறாவதும், கடைசியுமான அப்பல்லோ திட்டம் ஆகும்.
1981 – எல் சல்வடோரில் இராணுவத்தினர் உள்நாட்டுப் போரின் ஒரு கட்டமாக கிட்டத்தட்ட 900 பொதுமக்களை கொன்றனர்.
1990 – அல்பேனியாவில் மாணவர்கள், தொழிலாளர்களின் போராட்டங்கள் ஆரம்பமானது. இதுவே காலப்போக்கில் அல்பேனியாவில் பொதுவுடைமை வீழ்ச்சிக்குக் காரணமாக அமைந்தது.
1993 – மலேசியாவின் தலைநகர் கோலாலம்பூரில் உயர்மாடிக் கட்டடம் ஒன்று வீழ்ந்ததில் 48 பேர் உயிரிழந்தனர்.
1994 – டோக்கியோ நோக்கிச் சென்ற பிலிப்பீனிய விமானம் ஒன்றில் குண்டு ஒன்று வெடித்ததில் ஒருவர் கொல்லப்பட்டார். விமானம் பாதுகாப்பாகத் தரையிறங்கியது.
1994 – உருசியப் படைகள் செச்சினியாவில் ஊடுருவ உருசிய அரசுத்தலைவர் போரிஸ் யெல்ட்சின் ஆணையிட்டார்.
1998 – தாய்லாந்தைச் சேர்ந்த விமானம் வீழ்ந்ததில் 101 பேர் உயிரிழந்தனர்.
2001 – சீனா உலக வணிக அமைப்பில் இணைந்தது.
2005 – ஆத்திரேலியா, சிட்னியில் குரொனல்லா என்ற இடத்தில் வெள்ளை இன ஆத்திரேலியர்களுக்கும் லெபனானிய ஆத்திரேலியர்களுக்கும் இடையே கலவரம் மூண்டது.

பிறப்புகள்

1781 – டேவிட் புரூஸ்டர், இசுக்கொட்டிய இயற்பியலாளர், கணிதவியலாளர், வானியலாளர் (இ. 1868)
1789 – மிரோன் வின்சுலோ, அமெரிக்க மதப்பரப்புனர் (இ. 1864)
1803 – ஹெக்டர் பேர்லியோஸ், பிரான்சிய புனைவிய இசையமைப்பாளர் (இ. 1869)
1843 – ராபர்ட் கோக், நோபல் பரிசு பெற்ற செருமானிய மருத்துவர் (இ. 1910)
1863 – ஆன்னி ஜம்ப் கெனான், அமெரிக்க வானியலாளர் (இ. 1941)
1882 – சுப்பிரமணிய பாரதி, தமிழகக் கவிஞர், ஊடகவியலாளர் (இ. 1921)
1882 – மாக்ஸ் போர்ன், நோபல் பரிசு பெற்ற செருமானிய இயற்பியலாளர் (இ. 1970)
1890 – மார்க் டோபே, அமெரிக்க-சுவிசு ஓவியர் (இ. 1976)
1911 – நகிப் மஹ்ஃபூஸ், நோபல் பரிசு பெற்ற எகிப்திய எழுத்தாளர் (இ. 2006)
1918 – அலெக்சாண்டர் சோல்செனிட்சின், நோபல் பரிசு பெற்ற உருசிய எழுத்தாளர் (இ. 2008)
1922 – திலிப் குமார், பாக்கித்தானிய-இந்திய நடிகர்
1931 – ஓஷோ, இந்திய மெய்யியலாளர் (இ. 1990)
1935 – பிரணப் முகர்ஜி, 13வது இந்தியக் குடியரசுத் தலைவர் (இ. 2020)
1937 – எம். சந்திரசேகரன், தமிழக வயலின், வாய்ப்பாட்டுக் கலைஞர்
1943 – ஜான் கெர்ரி, அமெரிக்க அரசியல்வாதி
1949 – கத்ரி கோபால்நாத், தென்னிந்திய சாக்சபோன் இசைக் கலைஞர் (இ. 2019)
1951 – மழிலான் ஆத்மன், மலேசிய வானியலாளர்
1951 – பீட்டர் டி. டேனியல்ஸ், ஆங்கிலேய மொழியியலாளர்
1954 – பிரசந்தா, நேபாளப் பிரதமர்
1958 – ரகுவரன், தமிழக நடிகர் (இ. 2008)
1966 – பெனடிக்டா பொக்கொலி, இத்தாலிய நாடக, திரைப்பட நடிகர்
1969 – விசுவநாதன் ஆனந்த், இந்திய சதுரங்க வீரர்
1969 – மாக்ஸ் மார்டினி, அமெரிக்க நடிகர், இயக்குநர்
1980 – ஆர்யா, தமிழ்த் திரைப்பட நடிகர்
1987 – பீட்டர் ஷோல்ஸ், செருமனியக் கணிதவியலாளர்
1996 – ஹைலி ஸ்டெயின்பீல்ட், அமெரிக்க நடிகை

இறப்புகள்

384 – முதலாம் தாமசுஸ் (திருத்தந்தை) (பி. 305)
1241 – ஒகோடி கான், மங்கோலியப் பேரரசர் (பி. 1186)
1784 – ஆண்டர்சு இலெக்செல், பின்னிய-சுவீடிய வானியலாளர், கணிதவியலாளர், இயற்பியலாளர் (பி. 1740)
1937 – ஜான் ஆன்வெல்ட், எசுத்தோனிய அரசியல்வாதி (பி. 1884)
1945 – சார்லசு பாப்ரி, பிரான்சிய இயற்பியலாளர் (பி. 1867)
1977 – ஹன்டி பேரின்பநாயகம், இலங்கைத் தமிழ்க் கல்விமான், சமூக சேவையாளர், அரசியல்வாதி (பி. 1899)
2002 – நானி பல்கிவாலா, இந்திய அரசியல்சட்ட நிபுணர், பொருளியல் அறிஞர் (பி. 1920)
2004 – எம். எஸ். சுப்புலட்சுமி, கருநாடக இசைப் பாடகி (பி. 1916)
2011 – மரியோ மிராண்டா, இந்திய-கோவா ஓவியர் (பி. 1926)
2012 – ரவி சங்கர், இந்திய சித்தார் இசைக்கலைஞர் (பி. 1920)

சிறப்பு நாள்

பன்னாட்டு மலை நாள்
குடியரசு நாள் (புர்க்கினா பாசோ, 1958)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Follow by Email
Instagram
Telegram
WhatsApp
FbMessenger
URL has been copied successfully!