ஆலம்பனா திரைப்படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு..! | நா.சதீஸ்குமார்

 ஆலம்பனா திரைப்படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு..! | நா.சதீஸ்குமார்

குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பிப் பார்க்கும் வகையில் ஒரு ஃபேமிலி எண்டர்டெயினராக உருவாகியுள்ள இப்படம் வரும் டிசம்பர் 15 ஆம் தேதி திரையரங்குக்கு வரவுள்ள நிலையில், இப்படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு படக்குழுவினர் கலந்துகொள்ள, பத்திரிக்கை, ஊடக, பண்பலை நண்பர்கள் முன்னிலையில் நடைபெற்றது.

திண்டுக்கல் லியோனி பேசியதாவது..,

முன்னதாக இரண்டு திரைப்படங்களில் நடித்திருக்கிறேன் ஆனால் அதைவிட ஆலம்பனா படத்தில் மிகப்பெரியதொரு பாத்திரத்தில் நடித்துள்ளேன். இப்படத்தில் எல்லோரையும் விட எனக்குத் தான் அதிக காஸ்ட்யூம், அந்தளவு பெரிய கேரக்டர். நிறைய நட்சத்திர பட்டாளம் இப்படத்தில் நடித்துள்ளனர். முனீஷ்காந்திற்கு ரசிகன் நான் அவரது காமெடியை சிரித்து ரசிப்பேன். காளி வெங்கட் அட்டகாசமாக நடிக்துள்ளார். எனது பேரனாக வைபவ் நடித்துள்ளார். மிக நல்ல மனிதர் எனக்கு பெரும் ஆதரவாக இருந்தார். இப்படத்தில் சாதாரணமாக வந்து போகும் கேரக்டர் இல்லை. டான்ஸர்களோடு டான்ஸ் ஆடும் தாத்தா கேரக்டர். படத்தில் என்னை டான்ஸ் ஆட வைக்க, அவ்வளவு கஷ்டப்பட்டார் இயக்குநர். படம் நன்றாக வந்துள்ளது குழந்தைகளோடு பார்க்ககூடிய அருமையான படம். ஆதரவு தாருங்கள். நன்றி.

இயக்குநர் பாரி K விஜய் பேசியதாவது..

இந்தக்கதையைத் தயாரிப்பாளரிடம் சொன்ன போது, தயாரிப்பாளர் இந்தக்கதை, நல்ல கதை, நன்றாக எடுத்தால் ஓடும் என்றார். அவர் நான் நினைத்ததை விட, கேட்டதை விட இப்படத்திற்காக அதிகம் செலவழித்தார். அவரால் தான் இத்திரைப்படம் நன்றாக வந்துள்ளது. எழுதியதை விட, எடுப்பது கஷ்டம் ஆனால் அதை மகிழ்ச்சியோடு உழைத்து எடுத்துள்ளோம். வைபவ், பார்வதி இருவரும் என்னைப் புரிந்து கொண்டு எனக்கு ஆதரவாக நடித்து தந்தார்கள். அதே போல் பூதம் என யோசித்த போதே முனீஷ் காந்த் தான் மனதில் இருந்தார். நன்றாக நடித்துள்ளார். ஆனந்த்ராஜ், பாண்டியராஜன், காளிவெங்கட் எல்லோரும் கடினமாக உழைத்துள்ளனர். படத்தில் தாத்தா கேரக்டர் என்ற போதே திண்டுக்கல் ஐ லியோனி தான் ஞாபத்திற்கு வந்தார். அவரும் சிறப்பாக செய்துள்ளார். ஹிப்ஹாப் ஆதி அட்டகாசமாக இசையமைத்துள்ளார். பீட்டர் ஹெய்ன் மாஸ்டர் ஆக்சனை குழந்தைகளும் ரசிக்கும் படி தந்துள்ளார். படத்தை மிகவும் கஷ்டப்பட்டு உருவாக்கினோம் தற்போது திரைக்கு வருகிறது. ஊடக மக்கள் இப்படத்தை அனைவரிடமும் கொண்டு போய் சேர்க்க வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன். நன்றி.

நடிகை பார்வதி பேசியதாவது..

என் ஃபேவரைட் ஜானர் , ஃபேண்டஸி காமெடி தான். எனக்கு அந்த ஜானரில் ஆலம்பனா படத்தின் வாய்ப்பு வந்தது மிக்க மகிழ்ச்சி. இந்தப்படத்தில் முனிஷ் காந்த், காளி வெங்கட், ஆனந்த்ராஜ் என மிக நல்ல மனிதர்களோடு வேலைபார்த்தது சந்தோஷமாக இருந்தது. வைபவ் எனக்கு மிகவும் ஆதரவாக இருந்தார். இந்தப்படம் சிறு வயது முதல் பெரியவர்கள் வரை, அனைவரும் ரசித்து சிரிக்கும் படமாக இருக்கும். இப்படத்திற்கு உங்கள் ஆதரவைத் தாருங்கள்.

நடிகர் வைபவ் பேசியதாவது…

இப்படத்தின் கதையை KJR லிருந்து சொன்ன போதே, சூப்பராக இருந்தது. யார் ஹீரோ என்றேன் நீ தான் என்றார் தயாரிப்பாளர். சந்தோஷமாக இருந்தது. எப்போதும் ஜெய், ப்ரேம்ஜி மாதிரி ஆட்களுடனேயே நடித்துவிட்டேன். இப்படத்தில் முனீஷ்காந்த், காளிவெங்கட் போன்ற சீனியர்களுடன் நடித்தது மிக மகிழ்ச்சியாக இருந்தது. இப்படத்தில் இசைக்காக ஹிப்ஹாப் ஆதியை தொடர்பு கொள்ள முடியவில்லை என்றபோது நான் பேசினேன். பூதம் கதை என்றவுடன் உங்களுக்கு பூதம் கேரக்டர் சூப்பராக இருக்கும் என அவரும் என்னைக் கலாய்த்து விட்டார். இந்தப்படத்திற்கு சிறப்பான இசையைத் தந்துள்ளார். படத்தில் உண்மையிலேயே சிரித்து மகிழும் அளவு காமெடி இருக்கும். இந்தப்படம் எனக்குப் புதுவிதமான ஃபேமிலி எண்டர்டெயினராக இருக்கும். உங்கள் அனைவருக்கும் பிடிக்கும் படமாக இருக்கும் நன்றி.

சதீஸ்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...