ராஜாஜி பிறந்த தினம்

 ராஜாஜி பிறந்த தினம்

சுதந்திர இந்தியா🇮🇳வின் முதல் கவர்னர் ராஜாஜி பிறந்த தினம் – இன்று!💐

1971 -ல் பொதுத்தேர்தல் முடிவுகள் வந்துகொண்டிருந்தது. காமராஜுடன் சேர்ந்து ராஜாஜி அமைத்த கூட்டணி உடைந்து விழுந்து நொறுங்கிக் கொண்டிருக்கிறது. அச்சமயம் செய்திகளைக் கேட்க ஒரு சிறு ரேடியோ தேவைப்பட்டது. பேட்டரியால் இயங்கும் ‘டிரான்சிஸ்டர்’ ஒன்றை பக்கத்துவீட்டில் இருந்து வாங்கிக் கொண்டுவந்து ராஜாஜி அருகில் வைத்தார்கள். அப்படி ‘கடன் வாங்கிய டிரான்சிஸ்டரில் தேர்தல் செய்திகளை ராஜாஜி கேட்டார்’ என்று ராஜாஜி சரித்திரத்தை எழுதியவர்கள் குறிப்பிட்டுள்ளார்கள்.

அறுபது ஆண்டுகள் பொதுவாழ்வில் இருந்த பிறகு- கவர்னர் ஜெனரல் பதவியில் இருந்த பிறகு – கவர்னராகவும், மத்திய அமைச்சராகவும் இருந்த பிறகு, இரண்டு முறை முதல்வராக இருந்து ஓய்வு பெற்ற பிறகு- ‘சக்கரவர்த்தி’ என்ற பட்டப்பெயர் கொண்ட அந்த மனிதரிடம், சொந்தமாக ஒரு ‘டிரான்சிஸ்டர்’ கூட இல்லை.

அதுவும் ஒரு ஆடம்பரம் என்று கருதியவர்தான் ராஜாஜி!

மூதறிஞர் ராஜாஜியின் 145-வது பிறந்தநாள் – தமிழக அரசு சார்பில் அமைச்சர்கள் மரியாதை

மூதறிஞர் ராஜாஜியின் 145-வது பிறந்தநாளை முன்னிட்டு தமிழ்நாடு அரசின் சார்பில் ராஜாஜியின் உருவசிலைக்கு மரியாதை செலுத்தப்பட்டது. சென்னை பாரிமுனையில்,

ஐகோர்ட்டு வளாகம் அருகே அமைந்துள்ள ராஜாஜியின் உருவசிலைக்கு கீழ் அவரது புகைப்படம் அலங்கரிக்கப்பட்டு வைக்கப்பட்டிருந்தது.

இதையடுத்து ராஜாஜியின் உருவப்படத்திற்கு தமிழக அரசு சார்பில் அமைச்சர் சேகர் பாபு, அமைச்சர் சாமிநாதன் மற்றும் அதிகாரிகள் ஆகியோர் மலர் தூவி மரியாதை

செலுத்தினர்.

uma kanthan

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...