கூகுள் தொடங்கி 21 ஆண்டுகள் ஆகிறது. கூகுள் பற்றிய 21 சுவாரஸ்ய தகவல்கள்:
கூகுள் தொடங்கி 21 ஆண்டுகள் ஆகிறது. கூகுள் பற்றிய 21 சுவாரஸ்ய தகவல்கள்:
கூகுள் உலகத்தின் அதிகம் பார்க்கப்பட்ட இணையதளம் ஆகும். பிங்கில் அதிகம் தேடப்பட்ட இணையதள பக்கம் ஆகும். கூகுள் முதலில் லேரி பேஜ் மற்றும் செர்கே ப்ரின் என்ற இரண்டு கல்லூரி மாணாவர்களால் தொடங்கப்பட்டது. இணைய தளங்களை தரவரிசைப் படுத்தும் ஒரு தளமாக இதை உருவாக்க விரும்பினர். ஒரு குறிப்பிட்ட இணைய தளத்தின் இணைப்பை எத்தனை இணைய தளங்கள் பகிர்கிறன்றன என்பதை அடிப்படையாக வைத்து இந்த தரவரிசை உருவாக்கப்பட்டது. கூகுள் என்ற சொல் கூகொல் என்ற சொல்லில் இருந்து வந்தது. இதன் பொருள் ஒன்றுக்கு பக்கத்தில் 100 பூஜ்ஜியம் போடுவதால் வரும் எண்ணைக் குறிப்பதாகும். எவ்வளவு தரவுகளை தாங்கள் தேட விரும்புகிறோம் என்பதைக் குறிக்கும் வகையில் இந்த பெயரை அவர்கள் பயன்படுத்தினர். முதல் கூகுள் டூடுல் 1998 ‘burning man’ நிகழ்வுக்காக உருவாக்கப்பட்டது. அந்த நாளில் மக்கள் ஏன் அலுவலகத்தை விட்டு வெளியே இருக்கின்றனர் என அனைவரும் அறிய வேண்டும் என கூகுளின் நிறுவனர்கள் எண்ணினர். நிலவில் தண்ணீர் இருப்பதைக் கண்டறிந்ததற்கு போடப்பட்டது என்றும் நினைவிலிருக்கும் சில முக்கிய கூகுள் டூடுல்களில் ஒன்றாகும். ஜான் லெனனின் 70 வது பிறந்த நாளுக்கு வெளியான டூடுல் முதல் விடியோ டூடுல் ஆகும்.