நடிகர் ஷாருக்கானின் பதான், ஜவான் படங்கள் அடுத்தடுத்து வெளியாகி ரசிகர்களை கவர்ந்துள்ளது.
இந்தப் படத்தை தொடர்ந்து அடுத்ததாக ராஜ்கமார் ஹிரானியின் இயக்கத்தில் Dunki படத்தில் நடித்து முடித்துள்ளார் ஷாருக்கான்.
படம் டிசம்பர் 21ம் தேதி திரையரங்குகளில் ரிலீசாகவுள்ள நிலையில் படத்திற்கான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. முந்தைய படங்களை போலவே இந்தப் படமும் 1000 கோடி ரூபாய் கிளப்பில் இணையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
நடிகர் ஷாருக்கானின் நடிப்பில் கடந்த ஜனவரி மற்றும் செப்டம்பர் மாதங்களில் அடுத்தடுத்து பதான் மற்றும் ஜவான் படங்கள் ரிலீசாகின. 4 ஆண்டுகளுக்கு பிறகு இந்த ஆண்டின் துவக்கத்தில் ஷாருக்கானின் பதான் படம் வெளியான நிலையில் அந்தப் படத்தை ரசிகர்கள் கொண்டாடினர். படத்தில் தீபிகா படுகோன் ஷாருக்கிற்கு ஜோடியாகியிருந்தார். படம் சர்வதேச பாக்ஸ் ஆபீசில் 1000 கோடி ரூபாய்க்கும் அதிகமாக கலெக்ஷனை எட்டியது.
இந்தப் படத்தை தொடர்ந்து கடந்த செப்டம்பரில் வெளியானது ஜவான் படம். அட்லீ இயக்கத்தில் வெளியான இந்தப் படத்தில் ஷாருக்குடன் நயன்தாரா, விஜய் சேதுபதி, பிரியா மணி, யோகிபாபு உள்ளிட்டவர்கள் இணைந்து நடித்திருந்தனர். இந்நிலையில் இந்தப் படமும் 1000 கோடி ரூபாய் கிளப்பில் இணைந்து மாஸ் காட்டியது. இந்தப் படம் ஷாருக்கான் கேரியரில் மிகப்பெரிய வசூலை பெற்ற படமாக மாறியுள்ளது. தயாரிப்பாளராகவும் இந்தப் படம் அவருக்கு சிறப்பாக கைக்கொடுத்துள்ளது.
இந்நிலையில் இந்தப் படங்களை தொடர்ந்து இந்த ஆண்டிலேயே ஷாருக்கான் நடிப்பில் ரிலீசாகவுள்ளது Dunki படம். ராஜ்குமார் ஹிரானி இயக்கத்தில் உருவாகியுள்ள இந்தப் படம் வரும் 21ம் தேதி சர்வதேச அளவில் திரையரங்குகளில் ரிலீசாகவுள்ளது. முன்னதாக முன்னாபாய் எம்பிபிஎஸ், 3 இடியட்ஸ், பிகே போன்ற படங்களை இயக்கியுள்ள ராஜ்குமார் இரானியின் இயக்கத்தில் டங்கி படம் உருவாகியுள்ளது. தற்போது இந்தப் படத்தின் ட்ரெயிலர் வெளியாகி ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளது.
படத்தில் ஷாருக்கானுடன் டாப்சி பன்னு, போமன் இரானி, விக்கி கவுசால் போன்றவர்கள் நடித்துள்ளனர். படத்தை ஜியோ ஸ்டூடியோஸ் மற்றும் ஷாருக்கின் ரெட் சில்லீஸ் என்டர்டெயின்மெண்ட் இணைந்து தயாரித்துள்ளது. ராஜ்குமார் இரானியும் இணைந்து இந்தப் படத்தை தயாரித்துள்ளார். இங்கிலாந்திற்கு செல்ல முயற்சிக்கும் 4 இளைஞர்களின் வாழ்க்கை நிகழ்வுகளை இந்தப் படம் கதைக்களமாக கொண்டுள்ளது. ரத்தம், வன்முறை இல்லாமல் சிறப்பான படைப்பாக இந்தப் படம் ரசிகர்களை கவரும் என்று எதிர்பார்க்கலாம்.
ஆங்கிலம் தெரியாததால் விசா மறுக்கப்படும் 4 இளைஞர்கள், நாட்டின் எல்லையை சட்டத்திற்கு புறம்பாக கடக்க முயற்சிப்பதையும் அதன்போது ஏற்படும் பிரச்சினைகளும் இந்தப் படத்தில் கூறப்பட்டுள்ளன. இந்தப் படத்திலும் வழக்கம்போல தன்னுடைய டாப் நடிப்பை கொடுத்துள்ளார் ஷாருக்கான். அவரது நடிப்பு படத்தின் வெற்றிக்கு முக்கிய காரணமாக அமையும் என்று எதிர்பார்க்கலாம். மேலும் இந்த ஆண்டில் அடுத்தடுத்த 3 படங்கள் ஷாருக்கான் நடிப்பில் ரிலீசாவது அவரது ரசிகர்களை உற்சாகப்படுத்தி வருகிறது.