வரலாற்றில் இன்று ( 06.12.2023 )

வரலாறு என்பது இறந்த காலத்தில் நிகழ்ந்த விஷயத்தை பற்றி நாம் தெரிந்து கொள்ளும் ஒன்றாகும். குறிப்பாக வரலாற்றில் ஒருவர் செய்த சாதனைகள், தியாகங்கள், சிறப்புகள் இதுபோன்ற பலவகையான முக்கிய விஷயங்கள் பற்றி அனைவருக்கும் தெரியப்படுத்தும் விஷயமாகும். தெளிவாக சொல்ல வேண்டும் என்றால் தங்கள் வாழும் காலத்தின் பின்னணியில் கடந்த காலத்தின் நிகழ்வுகளை விளக்கி வரலாறாக எழுதுகின்றனர். சரி இந்த பதிவில் நாம் நமது வாழ்வில் கடந்து செல்லும் ஒவ்வொரு நாட்களிலும் ஏதாவது ஒரு விஷயம் நிகழ்ந்திருக்கலாம் அந்த  வகையில் வரலாற்றில் இன்று என்ன நாள்? என்பதை பற்றி நாம் நமது மின்கைத்தடியின் இந்த தொகுப்பில் படித்து தெரிந்து கொள்வோம் வாங்க..

வரலாற்றில் இன்று | Today History in Tamil

டிசம்பர் 6 (December 6) கிரிகோரியன் ஆண்டின் 340 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 341 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 25 நாட்கள் உள்ளன.

நிகழ்வுகள்

963 – எட்டாம் லியோ உரோம் நகரின் எதிர்-திருத்தந்தையாகப் பதவியேற்றார்.
1060 – முதலாம் பேலா அங்கேரியின் மன்னனாக முடிசூடினாr.
1240 – உக்ரைனின் கீவ் நகரம் படு கான் தலைமையிலான மங்கோலியரிடம் வீழ்ந்தது.
1704 – முகாலய-சீக்கியப் போரில், சீக்கிய கால்சாக்கள் முகாலய இராணுவத்தினரைத் தோற்கடித்தனர்.
1768 – பிரித்தானிக்கா கலைக்களஞ்சியத்தின் முதற் பதிப்பு வெளியிடப்பட்டது.
1790 – ஐக்கிய அமெரிக்க சட்டமன்றம் நியூயோர்க் நகரில் இருந்து பிலடெல்பியாவுக்கு இடம்பெயர்ந்தது.
1877 – தி வாசிங்டன் போஸ்ட் செய்திப்பத்திரிகையின் முதலாவது இதழ் வெளிவந்தது.
1884 – வாசிங்டன் நினவுச்சின்ன அமைப்பு வேலைகள் முடிவடைந்தது.
1897 – வாடகை வாகனங்கள் உலகில் முதற்தடவையாக லண்டனில் சேவைக்கு விடப்பட்டன.
1907 – மேற்கு வர்ஜீனியாவில் மொனொங்கா என்ற இடத்தில் நிலக்கரிச் சுரங்கம் ஒன்றில் இடம்பெற்ற வெடிவிபத்தில் 362 தொழிலாளர்கள் கொல்லப்பட்டனர்.
1916 – முதலாம் உலகப் போர்: மைய சக்தி நாடுகள் புக்கரெஸ்ட் நகரைக் கைப்பற்றின.
1917 – முதலாம் உலகப் போர்: அமெரிக்காவின் யாக்கோப் யோன்சு என்ற போர்க் கப்பல் செருமனி நீர்மூழ்கிக் குண்டு வைத்துத் தகர்த்தூ மூழ்கடித்தது.
1917 – பின்லாந்து சோவியத் உருசியாவிடம் இருந்து விடுதலையை அறிவித்தது.
1917 – கனடாவின் நோவா ஸ்கோசியாவில் ஆலிபாக்சு துறைமுகத்தில் ஆயுதக் களஞ்சியக் கப்பல் ஒன்று வெடித்ததில் 1,900 பேர் உயிரிழந்தனர். நகரத்தின் பெரும் பகுதி அழிந்தது.
1921 – இங்கிலாந்துக்கும் அயர்லாந்துக்கும் இடையில் இலண்டனில் நட்புறவு ஒப்பந்தம் கையெழுத்தாகியது.
1922 – ஐரிய சுதந்திர நாடு உருவானது.
1928 – கொலம்பியாவில் ஒரு மாத கால வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டவர்கள் மீது அரசுப் படைகள் தாக்குதல் நடத்தியதில் பலர் கொல்லப்பட்டனர்.
1941 – இரண்டாம் உலகப் போர்: ஐக்கிய இராச்சியமும் கனடாவும் பின்லாந்து மீது போரை அறிவித்தன..
1957 – வங்கார்ட் விண்கலம் ஏவப்படுகையில் வெடித்ததை அடுத்து பூமியின் சுற்றுவட்டத்துக்கு அமெரிக்கா தனது முதலாவது செயற்கைக்கோள் அனுப்பும் திட்டம் நிறைவேறவில்லை.
1971 – இந்தியா வங்காள தேசத்தை அங்கீகரித்ததைத் தொடர்ந்து பாக்கித்தான் இந்தியாவுடனான அனைத்து தூதரக உறவுகளையும் துண்டித்தது. 1971 இந்திய-பாக்கிஸ்தான் போர் வெடித்தது.
1977 – தென்னாபிரிக்கா “பொப்புதட்சுவானா”வுக்கு விடுதலை அளித்தாலும் எந்த நாடும் அதனை அங்கீகரிக்கவில்லை.
1989 – மொண்ட்ரியாலில் ஏக்கோல் கல்வி நிலையத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு நிகழ்வில் 14 இளம் பெண்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
1991 – குரோவாசியாவில் துப்ரோவ்னிக் நகர் மீது யுகொசுலாவிய மக்கள் இராணுவம் குண்டுத் தாக்குதல்களை நடத்தியது.
1992 – அயோத்தியாவில் இராமர் பிறப்பிடத்தில் கட்டப்பட்ட பாபர் மசூதி இடிக்கப்பட்டதை அடுத்து இடம்பெற்ற கலவரங்களில் 1,500 பேர் வரை உயிரிழந்தனர்.
1997 – சைபீரியாவில் உருசிய சரக்கு விமானம் ஒன்று குடிமனைத் தொடர் ஒன்றில் மோதியதில் 67 பேர் உயிரிழந்தனர்.
2005 – ஈரானின் இராணுவ சரக்கு விமானம் ஒன்று தெகுரானில் பத்து-மாடி குடிமனைக் கட்டடம் ஒன்றில் மோதியதில் விமானத்தில் இருந்த அனைத்து 84 பேரும் தரையில் 44 பேரும் உயிரிழந்தனர்.
2005 – சீனாவின் டொங்சூ என்ற இடத்தில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தின் போது பல கிராம மக்கள் சுட்டுக்கொல்லப்பட்டனர்.
2006 – செவ்வாய்க் கோளில் இருந்து மார்ஸ் குளோபல் சேர்வயர் அனுப்பிய படங்களில் இருந்து அங்கு நீர் திரவ நிலையில் இருப்பதை உறுதிப்படுத்தியதாக நாசா அறிவித்தது.
2017 – எருசலேம் நகரை இசுரேலின் தலைநகராக அமெரிக்க அரசுத்தலைவர் டோனால்ட் டிரம்ப்பின் நிருவாகம் அதிகாரபூர்வமாக அறிவித்தது.

பிறப்புகள்

1698 – அந்தனி மூயார்ட், ஒல்லாந்த இலங்கையில் யாழ்ப்பாணத்தின் கட்டளை அதிகாரி (இ. 1767)
1732 – வாரன் ஹேஸ்டிங்ஸ், பிரித்தானிய கிழக்கிந்திய கம்பெனியின் வங்காளத்தின் முதல் தலைமை ஆளுநர் (இ. 1818)
1792 – இரண்டாம் வில்லியம், நெதர்லாந்து மன்னர் (இ. 1849)
1823 – மாக்ஸ் முல்லர், செருமானிய-ஆங்கிலேய மொழியியலாளர் (இ. 1900)
1863 – சார்லஸ் மார்ட்டின் ஹால், அமெரிக்க வேதியியலாளர், பொறியியலாளர் (இ. 1914)
1892 – ருக்மிணி லட்சுமிபதி, இந்திய விடுதலைப் போராட்ட செயற்பாட்டாளர் (இ. 1951)
1918 – ஆர்வி, தமிழக எழுத்தாளர் (இ. 2008)
1928 – சந்திரலேகா, இந்தியப் பரத நாட்டியக் கலைஞர் (இ. 2006)
1935 – சாவித்திரி, தென்னிந்தியத் திரைப்பட நடிகை (இ. 1981)
1937 – டி. டி. குசலகுமாரி, தென்னிந்தியத் திரைப்பட நடிகை
1988 – ரவீந்திர ஜடேஜா, இந்தியத் துடுப்பாட்ட வீரர்

இறப்புகள்

343 – நிக்கலசு, கிரேக்க ஆயர், புனிதர் (பி. 270)
1788 – நிக்கோல்-ரெயின் லெப்பாட், பிரான்சிய வானியலாளர், கணிதவியலாளர் (பி. 1723)
1868 – ஆகஸ்ட் சிலெய்ச்சர், செருமானிய மொழியியலாளர் (பி. 1821)
1889 – ஜெபர்சன் டேவிஸ், அமெரிக்க அரசியல்வாதி, அமெரிக்கக் கூட்டமைப்பின் தலைவர் (பி. 1808)
1892 – வெர்னர் வொன் சீமன்சு, செருமானியப் பொறியியலாலர் (பி. 1816)
1956 – அம்பேத்கர், இந்தியப் பொருளியலாலர், அரசியல்வாதி (பி. 1891)
1961 – பிரன்சு ஃபனோன், பிரான்சிய மருத்துவர் (பி. 1925)
1982 – க. கைலாசபதி, இலங்கைத் தமிழறிஞர், திறனாய்வாளர், கல்வியாளர் (பி. 1933)
1990 – துங்கு அப்துல் ரகுமான், 1வது மலேசியப் பிரதமர் (பி. 1903)
2001 – எஸ். டி. சோமசுந்தரம், தமிழக அரசியல்வாதி (பி. 1930)
2005 – தேவன் நாயர், சிங்கப்பூரின் 3வது குடியரசுத் தலைவர் (பி. 1923)
2009 – பினா ராய்,பிரபல இந்தி நடிகை

சிறப்பு நாள்

விடுதலை நாள் (பின்லாந்து, உருசியாவிடம் இருந்து 1917)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Follow by Email
Instagram
Telegram
WhatsApp
FbMessenger
URL has been copied successfully!