மரம் வளர்ப்போம் மண் வளம் காப்போம்

 மரம் வளர்ப்போம் மண் வளம் காப்போம்

இனிய காலை வணக்கம் வாழ்க வளமுடன் நலமுடன் ஆளுக்கொரு மரம் வளர்ப்போம்  மண் வளம் காப்போம் மனித வளமும் காப்போம் சுத்தமான காற்றை சுவாசிப்போம் பிறரை மகிழ்வித்து மகிழ் எல்லாந்தான் மனுஷங்கூட சேந்து வாழுது … ஆடு, குருதெ, கயுதெ, கோயி … இப்பிடி பலதும்…

ஆனா இந்த பசு மட்டும் என்னாத்தெ ஒசத்தி ? ஏன் கோயில கட்டி கும்புடறோம் … கோமாதான்னுட்டு?

சமாச்சாரம் இல்லாங்காட்டியா … ஒசரத்துல தூக்கி வச்சி பேசுவோம்?

சொல்றதை கேட்டீங்கனா … மூக்கு மேல வெரலை வைக்கணும் … அம்புட்டு விஷயம் இருக்கு … பசுகிட்ட …

அகஸ்மாத்தா .. வெஷங்கொண்ட பொருள தின்னுடிச்சின்னு வச்சிக்குங்க … அத செரிக்க வச்சி … இரத்தத்துல கலந்து … பாலுல கலந்து … அத நாம குடிச்சி … நமக்கும் வெஷம் ஏறி …stop stop … 

இந்த மாதிரி எதுவும் நடக்காதுங்க…

வெஷத்தை நீலகண்டர் மாதிரி கழுத்திலேயே அதக்கி வச்சுக்கும்… அப்பால கக்கி உட்டுடும்…

வெஷத்த பிரிக்கறத்துக்கு … கழுத்துல சேகரிக்கறத்துக்கு … நெனைச்சப்ப கக்கி வெளிய தள்றதுக்கு எல்லாத்துக்குமே … அதுக்கு வசதி பண்ணி குடுத்துருக்காரு கடவுள்…

ரெண்டுவதா, ஆக்ஸிஜன உள் இழுத்துக்கிட்டு … கரியமிலவாயுவ வெளியத் தள்ளுற மனுஷப் பசங்க பிஸினசு பசுவுக்கு கெடையாது. ஆக்ஸிஜன சுவாசிச்சு … மாத்து கொறையா தங்கம் மாதிரி … ஆக்ஸிஜனாவே ,. வெளியே விடுதுங்க பசு…

மூணாவதா, பசு நெய் பொட்டு… அரிசியோட சேத்து சமைச்சோமின்னா …ரெண்டு வாயு உருவாகுமுங்க …ethylene – oxide & propylene – oxide. இது ஒடம்புக்கு ரொம்ப நல்லதுங்க … கோயிலுல வெண்பொங்கல், சக்கரை பொங்கல் … போட்டு உடறத்துக்கு காரணம் நாக்குல தண்ணி வரவைக்கறது மட்டுமில்லாம … ஒடம்புக்கு நல்லது … மட்டுமில்லாம … நாட்டுக்கும் நல்லது செய்யறோமுங்க…

என்னாதுதுது … நானு பொங்க சோறு திங்கறதால … நாட்டுக்கு என்னா நல்லது நடந்துடப் போவுது?

பொங்க சோறு செய்ய … பசு நெய்யும், அரிசியும் போட்டு சமைக்கறோமா? அது ethylene – oxide & propylene – oxide தருதா? சரி … இந்த propylene – oxide உபயோகப் படுத்திதான் …. செயற்கை மழையை உருவாக்கறோமுங்க! 

ஆக்கூடி… நாம சமைக்கறப்ப உருவாகிற propylene oxide … வளி மண்டலத்துல சேமிக்கப்பட்டு … மழை வரத்துக்கு காரணமா பூடுது…. அடுத்த மொற பொங்க சோறு திங்கயில … நன்னியோட தின்னுங்க…

நாலாவதா,

பசுவோட சாணி இருக்கே அது … radioactive waves தடுத்து நிறுத்தி … அதோட ஓட்டத்த … அப்பால திருப்பி உட்டுடும்…. சாணி மொழுவி உட்ட மண் வூட்டுல இருந்த பழைய ஆளுங்களுக்கு cancer வந்திருக்கவே வந்திருக்காது…

கோமியம் நல்ல கிருமி நாசினி’ங்க …

பசுவோட உச்சா … கோமியம்னு சொல்லுவோம். அது ஏங்க கோமியத்துக்கு போயி இவ்ளோ encomium? 

(encomium னா புகழுரைகள்னு அர்த்தம்.)

அஞ்சாவதா, 

பசு மூத்தரத்த புடிச்சி … சாணிய கலந்து அவன் வாயில ஊத்துனாத்தான் … அவனுக்கு சரியா வரும்.

யாரோ யாரையோ திட்டுறாங்கன்னு … நெனைச்சிக்காதீங்க… 

கண்டது கடயதையும் துன்னுப்புட்டு … வயத்து வலி கொடல் பொறுமல்னு அவஸ்தை படறாங்க பாருங்க … அவங்களுக்கு மருந்துதாங்க மேலே சொன்னது !

பத்தே 10 கிராம் பசு நெய்யை …

 யாகத்துல போட்டு எரிச்சோமுன்னா … ஒரு டன்… ஆக்ஸிஜன் … உருவாகுமுங்க …

———-

admin

Leave a Reply

Your email address will not be published.