அசோக் செல்வன், மேகா ஆகாஷ் நடித்துள்ள சபா நாயகன் படத்தின் டிரெய்லர் வெளியானது..! | நா.சதீஸ்குமார்

 அசோக் செல்வன், மேகா ஆகாஷ் நடித்துள்ள சபா நாயகன் படத்தின் டிரெய்லர் வெளியானது..! | நா.சதீஸ்குமார்

சூது கவ்வும் படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானவர் அசோக் செல்வன். தெகிடி, ஓ மை கடவுளே போன்ற வெற்றி படங்களில் நடித்தவர்  இவர்.  அசோக் செல்வன் நடிப்பில் சில நேரங்களில் சில மனிதர்கள், மன்மத லீலை, ஹாஸ்டல், வேழம், நித்தம் ஒரு வானம் போன்ற திரைப்படங்கள் வெளியாகி கலவையான விமர்சனங்களைப் பெற்றது.

தற்போது சிஎஸ் கார்த்திகேயன் இயக்கத்தில் சபா நாயகன் என்ற படத்தில் நடித்துள்ளார். இந்தப் படத்தை அரவிந்த் ஜெயபாலன், ஐயப்பன் ஞானவேல் உள்ளிட்டோர் இணைந்து தயாரிக்க, லியோன் ஜேம்ஸ் இசையமைத்துள்ளார். மேகா ஆகாஷ் கதாநாயகியாக நடித்துள்ளார்.

இந்தப் படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த நிலையில், தற்போது வெளியான இப்படத்தின் டிரெய்லர் இணையதளத்தில் வைரலாகி வருகிறது. கதாநாயகனின் காதல் வாழ்வை மையமாகக் கொண்டு நகைச்சுவையாக நகரும் காட்சிகள் இளம் தலைமுறையினர் ரசிக்கும் வகையில் டிரெய்லரில் காட்சிகள் இடம்பெற்றுள்ளது.

மேலும் இத்திரைப்படம் வரும் டிச. 15-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.

சதீஸ்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...