பாகிஸ்தானை காட்டிலும் இந்தியாவை பற்றி நான் அதிகம் கவலைப்படுகிறேன், இம்ரான்

 பாகிஸ்தானை காட்டிலும் இந்தியாவை பற்றி நான் அதிகம் கவலைப்படுகிறேன், இம்ரான்

பாகிஸ்தானை காட்டிலும் இந்தியாவை பற்றி நான் அதிகம் கவலைப்படுகிறேன், இம்ரான் 

நியூயார்க்: பாகிஸ்தானை காட்டிலும் இந்தியாவை பற்றி நான் அதிகம் கவலைப்படுகிறேன், இன்றைய இந்தியா நேரு மற்றும் காந்தியின் இந்தியா அல்ல, இந்து மேலாதிக்கத்தில் இந்தியா இன்று இருக்கிறது என பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் தெரிவித்துள்ளார்.

நியூயார்க்கில் வெளிநாட்டு உறவுகள் கவுன்சிலின் தலைவர் ரிச்சர்ட் என். ஹாஸ் உடன் உரையாடிய பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் இந்தியா குறித்து பல்வேறு விஷயங்களை பேசினார்.

அப்போது இம்ரான்கான் கூறியதாவது: பாகிஸ்தானை காட்டிலும் இந்தியாவை பற்றி இப்போது நான் அதிகம் கவலைப்படுகிறேன். ஏனெனில் இந்தியாவில் நான் கிரிக்கெட் விளையாடி இருக்கிறேன். இப்போதைய இந்தியா நேரு மற்றும் காந்தியின் இந்தியா அல்ல. இந்து மத மேலாதிக்கத்தில் இந்தியா இன்று இருக்கிறது. காந்தியை படுகொலை செய்த சித்தாந்தம் இதுதான் என்றார்.

அதற்கு பதில் அளித்து இம்ரான் கான் பேசுகையில், இப்போதைய (இந்தியா-பாகிஸ்தான்) எங்கள் நிலைப்பாடு வருத்தமளிக்கிறது. எங்களின் பொதுவான எதிரிகளான வறுமை மற்றும் கால நிலை மாற்றம் உள்பட பல்வேறு பிரச்சனைகளை எதிர்த்து போராடுவது பற்றி பிரதமர் மோடியுடன் பேசினேன். கடிதங்கள் எழுதியுள்ளேன். இந்தியாவுடனான உறவுகளை மீட்டமைக்க விரும்பினேன்.

தீவிரவாதம் குறித்து பிரதமர் மோடி கேட்டபோது, நாங்கள் தீவிரவாத வலைப்பின்னல்களை அகற்றுவோம் என்று நான் உங்களுக்கு உறுதியளிக்கிறேன் என்று அவரிடம் சொன்னேன். ஆனால் பிரச்சனை நம்பிக்கை இல்லாதது தான். எங்கள் வெளியுறவு அமைச்சர்கள் கடந்த ஆண்டு இந்திய அமைச்சர்களை சந்திக்க விருந்த நிலையில் அவர்களின் சந்திப்பு ரத்து செய்யப்பட்டது. தேர்தலுக்குப் பிறகு அவர்கள் நிலைப்பாட்டை மாற்றுவார்கள் என்று நாங்கள் நினைத்தோம். ஆனால் மாறவில்லை.

புல்வாமாவுக்குப் பிறகு நான் சொன்னேன், தயவுசெய்து ஒரு பாகிஸ்தானியருக்கு தொடர்பு இருந்ததற்கான ஒரு தகவலையாவது எங்களுக்குத் தாருங்கள் என்றேன்,. அதற்கு பதிலாக இந்தியா எங்கள் மீது குண்டு வீசியது. நாங்கள் எந்த கேள்வியும் இல்லாமல் ஒரு விமானியை திருப்பி அனுப்பினோம், ஆனால் இந்தியா அதை எங்கள் பலவீனமாக விளையாடியது. எங்களை நிதி நடவடிக்கை பணிக்குழு தடுப்புப்பட்டியலில் சேர்க்க இந்தியா அழுத்தம் கொடுப்பதை நாங்கள் கண்டோம், அவர்கள் இதற்கான வேலையை செய்து இருப்பதை நாங்கள் உணர்ந்தோம்” என்றார்.

இன்பா 

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...