உலக கோப்பை கிரிக்கெட்டில் அரையிறுதிக்கு முன்னேறுமா பாக் அணி ! | தனுஜா ஜெயராமன்
உலகக்கோப்பையின் இன்றைய ஆட்டத்தில் தென்னாப்பிரிக்கா பாகிஸ்தான் அணிகள் மோத உள்ளனர். வெற்றி பெறும் முனைப்புடன் பாகிஸ்தான் அணி இன்று களமிறங்குகிறது.
ஏனெனில் பாகிஸ்தான் இந்த போட்டியில் வெற்றி பெற்றால் மட்டுமே அரையிறுதிக்கு முன்னேறும் வாய்ப்பை தக்கவைக்க முடியும். எனவே இன்றைய போட்டி பாகிஸ்தான் அணிக்கு வாழ்வா சாவா ஆட்டம் என்பதில் எந்த சந்தேகமில்லை. களத்தில் பாக் அணி ஆக்ரோஷமாக விளையாடும் என்பதில் சந்தேகமேயில்லை.
ஆனால் மிக பலமான அணியாக சிற்ப்பாக விளையாடி வருகிறது தென் ஆப்ரிக்கா . இன்றைய போட்டியில் வெற்றி பெற்றால் புள்ளிப்பட்டியலில் முதலிடத்திற்கு தென்னாப்பிரிக்கா முன்னேறும் வாய்ப்புள்ளது. வெற்றிக் கணக்கை தொடரும் என நினைத்து தென்னாப்பிரிக்கா இன்றைய போட்டியில் களமிறங்குவதால், இன்றைய போட்டி ரசிகர்களுக்கு நல்ல விருந்தாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தென் ஆப்ரிக்கா நெதர்லாந்து அணியுடனான போட்டியில் தோல்வியை தழுவினாலும், மற்ற 4 போட்டிகள் அதிக ரன்கள் வித்தியாசத்தில் எதிரணியை வீழ்த்தி, புள்ளிப்பட்டியலில் 2வது இடத்தில் தென்னாப்பிரிக்கா உள்ளது.
ஆனால் பாகிஸ்தானோ இதுவரை விளையாடிய 5 போட்டிகளில், 2 வெற்றி மற்றும் 3 தோல்விகளுடன் புள்ளிப்பட்டியலில் 6வது இடத்தில் உள்ள பாகிஸ்தான் அணி, எஞ்சியுள்ள 4 போட்டிகளில் வெற்றி பெற்றால் மட்டுமே அரையிறுதிக்கு முன்னேறும் வாய்ப்பை தக்கவைக்க முடியும் என்கிற இக்கட்டான நிலை.
இரு அணிகளும் ஆக்ரோஷமாக மோதவுள்ள பரபரப்பான இன்றைய ஆட்டத்தில் ஜெயிக்கப்போவது யாரு? அரையிறுதிக்கு முன்னேறுமா பாகிஸ்தான்? முதலிடத்திற்கு வருமா தென் ஆப்ரிக்கா? பார்க்கலாம்.