நடிகர் சிவகார்த்திகேயன் மீது இசையமைப்பாளர் டி இமான் குற்றச் சாட்டு! | தனுஜாஜெயராமன்

 நடிகர் சிவகார்த்திகேயன் மீது இசையமைப்பாளர் டி இமான் குற்றச் சாட்டு! | தனுஜாஜெயராமன்

நடிகர் சிவகார்த்திகேயன் எனக்கு துரோகம் செய்துவிட்டார். அவருடன் இணைந்து பயணிப்பது கடினம் என்று இசையமைப்பாளர் டி இமான் குற்றம் சாட்டியுள்ளார்.

தமிழ் சினிமாவில் தொடர்ந்து வளர்ந்து வரும் நடிகர்களில் முக்கியமானவர் நடிகர் சிவகார்த்திகேயன். சின்னத்திரையில் தொகுப்பாளராக தனது வாழ்க்கையை துவங்கிய சிவகார்த்திகேயன் மிகவும் கஷ்டப்பட்டு சினிமாவில் பெரும் இடத்தை பெற்றுள்ளார்.

இசையமைப்பாளர் டி. இமான் மற்றும் நடிகர் சிவகார்த்திகேயன் இணைந்து பணியாற்றிய “வருத்தப்படாத வாலிபர் சங்கம்” நம்ம வீட்டு பிள்ளை பட  பாடல்கள் மிகப்பெரும் அளவில் வரவேற்பினை பெற்றிருந்த்து.

அதைத் தொடர்ந்து இவர்கள் இரிவருமரவ ரஜினி முருகன், சீமா ராஜா உள்ளிட்ட படங்களிலும் இணைந்து பணியாற்றினார்.

சீமா ராஜா படத்திற்கு பிறகு இவர்கள் இருவரும் இணைந்து பணியாற்றுவதை தவிர்த்து வந்தனர். இந்த நிலையில் இசையமைப்பாளர் டி இமான் சிவகார்த்திகேயனோடு இந்த ஜென்மத்தில் இணைந்து பணியாற்றுவது கடினம் என்று கூறி அவர் மீது குற்றச்சாட்டை தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில் தற்சமயம் சிவகார்த்திகேயன் நடித்து வரும் அயலான் திரைப்படம் வரும் பொங்கலுக்கு வெளியாக இருக்கிறது இந்த திரைப்படத்தை மலைபோல் நம்பி உள்ளார் சிவகார்த்திகேயன். ஏனெனில் இதற்கு தயாரிப்பு செலவு எக்கச்சக்கமாக செய்துள்ளார் சிவகார்த்திகேயன்.

இந்த நிலையில் அவரது பெயருக்கு கலங்கம் விளைவிக்கும் விதமாக இசையமைப்பாளர் இமான் ஒரு செய்தியை வெளியிட்டிருந்தார். சிவகார்த்திகேயன் தனக்கு மிகப்பெரிய துரோகம் செய்துவிட்டதாகவும் அதை வெளியில் செல்ல முடியாது. எனது குழந்தைகள் அதனால் பாதிக்கப்படுவர் என்றும் நேரடியாக கூறிவிட்டார்.

மேலும் சிவகார்த்திகேயன் இந்த வீடியோவை பார்த்தவுடனே இமானுக்கு போன் செய்து அண்ணா உங்கள் காலில் வேணும்னாலும் விழுகிறேன் அந்த வீடியோவை டெலிட் செய்ய சொல்லுங்க என்று கூறியுள்ளதாக செய்திகள் பரவி வருகிறது. ஆனால் கோபமடைந்த இமான் அவரிடம் சத்தம் போட்டுவிட்டு ஃபோனை வைத்து விட்டாராம். இதனை அடுத்து சிவகார்த்திகேயன் அவரது ஐடி குழுவை அழைத்து இமானின் வீடியோ அதிகம் பரவாத வகையில் செய்யுமாறு கூறியுள்ளதாகவும் செய்திகள் வெளியாகி சினிமா வட்டாரங்களில் பரபரப்பினை ஏற்படுத்தி வருகிறது.

தனுஜா ஜெயராமன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...