தேசிய மனித உரிமை ஆணையம் அமைக்கப்பட்ட தினமிது

 தேசிய மனித உரிமை ஆணையம் அமைக்கப்பட்ட தினமிது

இந்தியாவில் தேசிய மனித உரிமை ஆணையம் அமைக்கப்பட்ட தினமிது ⚖

🇮🇳இந்தியாவின் தேசிய மனித உரிமை ஆணையம் ஒரு தன்னாட்சி பெற்ற இந்திய அரசாங்கத்தின் ஆணையமாகும். அக்டோபர் 12, 1993 இல் மனித உரிமைகள் பாதுகாப்புச் சட்டம், 1993 , (டி பி எச் ஆர் ஏ) இன் கீழ் இவ்வாணையம் நிலைநாட்டப்பெற்றது. பாரிசில் நடைபெற்ற ஐக்கிய நாடுகள் அவை சார்பில் மனித உரிமை பாதுகாப்பு ஆணைய கூட்டத்தில் எடுக்கப்பெற்ற தீர்மானத்தின் அடிப்படையில் இவ்வாணையம் இந்தியாவில் உருவாக்கப்பட்டது,

இங்கு பெற அல்லது வரப்படும் ஒவ்வொரு புகாரும் அதன் தன்மைக் குறித்து ஆய்வு செய்யப்பட்டு அதன் படி வகைப்படுத்தப் படுகின்றது. அவற்றை ஒழுங்குபடுத்தியபின் அவற்றை தன்மைக்கேற்ப வழக்குப் பதிவு செய்து அதற்கு பதிவெண் வழங்கப்படுகின்றது.

புகார்ரைப்பதிவு செய்த நாளிலிருந்து 7 நாட்களுக்கு மிகாமல் ஆணையத்தின் முன் வைக்கவேண்டும். அவசரத் தேவையாக இருப்பின் அவற்றின் அவசரத்தன்மைக் கருதி 24 மணி நேரத்திற்குள்[3] தேசிய அல்லது மாநில மனித உரிமை ஆணையத்தின் முன் வைக்கப்படவேண்டும் என்று வரையறை செய்யப்பட்டுள்ளது.

டி பி எச் ஆர் ஏ பிரிவு 3 மற்றும் 4 ன் கீழ் வரையறுத்துள்ளதின்படி இவ்வாணையத்தின் நியமனங்கள் அமைக்கப்பட்டுள்ளன. தேசிய மனித உரிமை பாதுகாப்பு ஆணையத்தின் நியமனங்கள் அதன் சிறப்புக்குழுப் பரிந்துறையின்படி இந்தியக் குடியரசுத் தலைவரால் நியமிக்கப்படுகின்றனர்.

uma kanthan

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...