வரலாற்றில் இன்று (12.10.2023)

 வரலாற்றில் இன்று (12.10.2023)

வரலாறு என்பது இறந்த காலத்தில் நிகழ்ந்த விஷயத்தை பற்றி நாம் தெரிந்து கொள்ளும் ஒன்றாகும். குறிப்பாக வரலாற்றில் ஒருவர் செய்த சாதனைகள், தியாகங்கள், சிறப்புகள் இதுபோன்ற பலவகையான முக்கிய விஷயங்கள் பற்றி அனைவருக்கும் தெரியப்படுத்தும் விஷயமாகும். தெளிவாக சொல்ல வேண்டும் என்றால் தங்கள் வாழும் காலத்தின் பின்னணியில் கடந்த காலத்தின் நிகழ்வுகளை விளக்கி வரலாறாக எழுதுகின்றனர். சரி இந்த பதிவில் நாம் நமது வாழ்வில் கடந்து செல்லும் ஒவ்வொரு நாட்களிலும் ஏதாவது ஒரு விஷயம் நிகழ்ந்திருக்கலாம் அந்த  வகையில் வரலாற்றில் இன்று என்ன நாள்? என்பதை பற்றி நாம் நமது மின்கைத்தடியின் இந்த தொகுப்பில் படித்து தெரிந்து கொள்வோம் வாங்க..

வரலாற்றில் இன்று | Today History in Tamil

அக்டோபர் 12 (October 12) கிரிகோரியன் ஆண்டின் 285 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 286 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 80 நாட்கள் உள்ளன.

நிகழ்வுகள்

கிமு 539 – பாரசீகத்தின் மகா சைரசின் இராணுவம் பாலிலோனைப் பிடித்தது.
1492 – கொலம்பஸ் கரிபியனில் பஹாமாசை அடைந்தார். அவர் கிழக்காசியாவைத் தான் அடைந்ததாக எண்ணினார்.
1582 – கிரெகொரியின் நாட்காட்டி அறிமுகப்படுத்தப்பட்டதை அடுத்து இத்தாலி, போலந்து, போர்த்துக்கல், ஸ்பெயின் ஆகிய நாடுகளில் புதிய நாட்காட்டியில் இவ்வாண்டின் இந்நாள் இடம்பெறவில்லை.
1654 – நெதர்லாந்தில் டெல்ஃப்ட் நகரில் இடம்பெற்ற குண்டுவெடிப்பில் நூற்றுக்கும் அதிகமானோர் கொல்லப்பட்டனர்.
1785 – ரிச்சார்ட் ஜான்சன் என்பவர் தமிழ்நாட்டின் முதல் செய்திப்பத்திரிகையான மெட்ராஸ் கூரியர் என்ற வார இதழை வெளியிட்டார்.
1798 – இலங்கை பிரித்தானியாவின் அரச குடியேற்ற நாடாக (King’s Colony) அறிவிக்கப்பட்டது. பிரெடெரிக் நோர்த் ஆளுநராக ஆக்கப்பட்டார்.
1899 – தென்னாபிரிக்காவின் போவர் குடியரசு இங்கிலாந்து மீது போரை அறிவித்தது.
1915 – முதலாம் உலகப் போர்: கூட்டுப்படைகளை பெல்ஜியத்தில் இருந்து தப்ப உதவியமைக்காக பிரித்தானியத் தாதி எடித் கவெல் என்பவர் ஜேர்மனியர்களினால் சுட்டுக் கொல்லப்பட்டார்.
1918 – மினெசோட்டாவில் கிளம்பிய காட்டுத்தீயினால் 453 பேர் கொல்லப்பட்டனர்.
1941 – உக்ரேனின் தினிபுரோபெத்ரோவ்ஸ்க் நகரில் இந்நாளிலும் இதற்கு அடுத்த நாளிலும் நாசி ஜேர்மனியினர் 11,000 யூதர்களைக் கொன்றனர்.
1964 – சோவியத் ஒன்றியம் வஸ்கோத் 1 விண்கலத்தை விண்ணுக்கு ஏவியது. இதுவே பல விண்வெளி வீரர்களை விண்ணுக்குக் கொண்டு சென்ற முதலாவது கப்பலாகும்.
1968 – எக்குவட்டோரியல் கினி ஸ்பெயினிடம் இருந்து விடுதலை பெற்றது.
1976 – மறைந்த மா சே துங்கின் இடத்திற்கு ஹுவா குவோஃபெங்க் என்பவரை சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவராக நியமிப்பதாக மக்கள் சீனக் குடியரசு அறிவித்தது.
1984 – ஐ.ஆர்.ஏ குண்டுவெடிப்பில் இருந்து மார்கரெட் தாட்சர் காயமெதுவும் அடையாமல் உயிர் தப்பினார்.
1986 – மன்னார் அடம்பனில் விடுதலைப் புலிகள் தாக்குதல் நடத்தியதில் முதன் முதலாக சிங்கள இராணுவத்தினர் சிறைப்பிடிக்கப்பட்டனர். இத்தாக்குதலில் புலிகளின் தளபதிகளில் ஒருவரான லெப். கேணல் விக்டர் கொல்லப்பட்டார்.
1993 – இந்தியாவின் தேசிய மனித உரிமை ஆணையம் அமைக்கப்பட்டது.
1994 – மகெலன் விண்கலம் வீனஸ் கோளின் வளிமண்டலத்தை அடைந்ததை அடுத்து அதனுடனான தொடர்புகளை நாசா இழந்தது. இது அடுத்தடுத்த நாட்களில் எரிந்து சேதமடைந்தது.
1999 – பாகிஸ்தானில் இடம்பெற்ற இரத்தம் சிந்தாப் புரட்சியில் பெர்வேஸ் முஷாரஃப் நவாஸ் ஷெரீப்பை ஆட்சியில் இருந்து அகற்றி நாட்டின் அதிபரானார்.
1999 – உலகின் மக்கள் தொகை 6 பில்லியனை எட்டியது.
2001 – அமைதிக்கான நோபல் பரிசு ஐ.நா. பொதுச் செயலர் கோபி அனானுக்கும் ஐக்கிய நாடுகளுக்கும் பகிர்ந்து அளிக்கப்பட்டது.
2002 – பாலியில் இரவு விடுதி ஒன்றில் இடம்பெற்ற குண்டுவெடிப்பில் 202 பேர் கொல்லப்பட்டு 300 பேர் காயமடைந்தனர்.
2003 – பெலாரசில் மனநோய் வைத்தியசாலை ஒன்றில் இடம்பெற்ற தீவிபத்தில் 30 மனநோயாளர் இறந்தனர்.
2005 – சீனாவின் இரண்டாவது ஆட்களுடன் கூடிய விண்கலம் சென்ஷோ 6 இரண்டு விண்வெளி வீரர்களுடன் ஏவப்பட்டது.

பிறப்புகள்

1891 – எஸ். வையாபுரிப்பிள்ளை, தமிழறிஞர், பதிப்பாளர் (இ. 1956)
1921 – ஆர்ட் குலொக்கி, களிமண்ணால் செய்யப்படும் இயங்குபடங்களின் முன்னோடி (இ. 2010)
1918 – கே. கே. பிர்லா, இந்தியாவின் தொழிலதிபர் (இ. 2008)
1935 – லூசியானோ பாவ்ராட்டி, இத்தாலியப் பாடகர் (இ. 2007)

இறப்புகள்

1870 – ராபர்ட் ஈ. லீ, அமெரிக்க இராணுவத் தளபதியும் பொறியியலாளரும் (பி. 1807)
1924 – அனத்தோலி பிரான்ஸ், பிரெஞ்சு எழுத்தாளர், நோபல் பரிசு பெற்றவர் (பி. 1844)
1965 – போல் ஹேர்மன் முல்லர், சுவிட்சர்லாந்து வேதியியலாளர், நோபல் பரிசு பெற்றவர் (பி. 1899)
1999 – வில்ட் சேம்பர்லென், அமெரிக்கக் கூடைப்பந்து ஆட்டக்காரர் (பி. 1936)

சிறப்பு நாள்

எக்குவடோரியல் கினி – விடுதலை நாள் (1968)
மலாவி – அன்னையர் நாள்

சதீஸ்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...