வரலாற்றில் இன்று (11.10.2023)

 வரலாற்றில் இன்று (11.10.2023)

வரலாறு என்பது இறந்த காலத்தில் நிகழ்ந்த விஷயத்தை பற்றி நாம் தெரிந்து கொள்ளும் ஒன்றாகும். குறிப்பாக வரலாற்றில் ஒருவர் செய்த சாதனைகள், தியாகங்கள், சிறப்புகள் இதுபோன்ற பலவகையான முக்கிய விஷயங்கள் பற்றி அனைவருக்கும் தெரியப்படுத்தும் விஷயமாகும். தெளிவாக சொல்ல வேண்டும் என்றால் தங்கள் வாழும் காலத்தின் பின்னணியில் கடந்த காலத்தின் நிகழ்வுகளை விளக்கி வரலாறாக எழுதுகின்றனர். சரி இந்த பதிவில் நாம் நமது வாழ்வில் கடந்து செல்லும் ஒவ்வொரு நாட்களிலும் ஏதாவது ஒரு விஷயம் நிகழ்ந்திருக்கலாம் அந்த  வகையில் வரலாற்றில் இன்று என்ன நாள்? என்பதை பற்றி நாம் நமது மின்கைத்தடியின் இந்த தொகுப்பில் படித்து தெரிந்து கொள்வோம் வாங்க..

வரலாற்றில் இன்று | Today History in Tamil

அக்டோபர் 11 (October 11) கிரிகோரியன் ஆண்டின் 284 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 285 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 81 நாட்கள் உள்ளன.

நிகழ்வுகள்

1138 – சிரியாவில் பெரும் நிலநடுக்கம் ஏற்பட்டது. 200,000 பேர் வரையில் கொல்லப்பட்டனர்.
1582 – கிரெகொரியின் நாட்காட்டி அறிமுகப்படுத்தப்பட்டதை அடுத்து இத்தாலி, போலந்து, போர்த்துக்கல், ஸ்பெயின் ஆகிய நாடுகளில் புதிய நாட்காட்டியில் இவ்வாண்டின் இந்நாள் இடம்பெறவில்லை.
1634 – டென்மார்க், மற்றும் ஜெர்மனியில் இடம்பெற்ற பெரும் வெள்ளத்தினால் 15,000 பேர் கொல்லப்பட்டனர்.
1801 – காளையார் கோயிலைக் கைப்பற்றிய ஆங்கிலேயர் அதனையும் சுற்றியுள்ள காடுகளையும் தீயிட்டுக் கொளுத்தினர்.
1811 – ஜோன் ஸ்டீவன்ஸ் கண்டுபிடித்த ஜூலியானா என்ற முதலாவது நீராவிப் படகுக் கப்பலின் சேவை நியூ யோர்க்கிற்கும் நியூ ஜேர்சிக்கு இடையில் ஆரம்பிக்கப்பட்டது.
1852 – ஆஸ்திரேலியாவின் மிகப் பழமையான சிட்னி பல்கலைக்கழகம் ஆரம்பிக்கப்பட்டது.
1865 – ஜமெய்க்காவில் நூற்றுக்கும் அதிகமான கறுப்பின மக்கள் அரசுக்கெதிரான எதிர்ப்புப் போராட்டத்தை ஆரம்பித்தனர். இது அன்றைய பிரித்தானிய அரசால் நசுக்கப்பட்டதில் நானூறுக்கும் அதிகமான கறுப்பினத்தவர்கள் கொல்லப்பட்டனர்.
1899 – இரண்டாவது போவர் போர் தென்னாபிரிக்காவில் ஐக்கிய இராச்சியத்துக்கு எதிராக ஆரம்பமானது.
1941 – மக்கெடோனியாவில் தேசிய விடுதலைப் போர் ஆரம்பமானது.
1944 – துவீனிய மக்கள் குடியரசு சோவியத் ஒன்றியத்துடன் இணைந்தது.
1954 – வட வியட்நாமை வியட் மின் படைகள் தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தன.
1958 – நாசாவின் முதலாவது விண்கலம் பயனியர் 1 சந்திரனை நோக்கி ஏவப்பட்டது. இது சந்திரனை அடையாமலே மீண்டும் இரண்டு நாட்களில் பூமியில் வீழ்ந்து எரிந்தது.
1968 – நாசா முதற் தடவையாக மூன்று விண்வேளி வீரர்களை அப்பல்லோ 7 விண்கலத்தில் விண்ணுக்கு ஏவியது.
1984 – சலேஞ்சர் விண்ணோடத்தில் சென்ற கத்ரின் சலிவன் விண்ணில் நடந்த முதலாவது அமெரிக்கப் பெண் என்ற பெருமையைப் பெற்றார்.
1987 – விடுதலைப் புலிகளுக்கு எதிராக இந்திய அமைதிப் படை பவான் நடவடிக்கை என்ற பெயரில் போரை ஆரம்பித்தனர்.
1998 – கொங்கோவில் வானூர்தி ஒன்று தீவிரவாதிகளால் சுட்டு வீழ்த்தப்பட்டதில் 40 பேர் கொல்லப்பட்டனர்.
2002 – பின்லாந்தில் கடைத் தொகுதி ஒன்றில் இடம்பெற்ற குண்டுவெடிப்பில் ஏழு பேர் கொல்லப்பட்டனர்.
2006 – ஈழப்போர்: முகமாலையில் இடம்பெற்ற சமரில் 129 இராணுவத்தினரும் 22 விடுதலைப்புலிகளும் கொல்லப்பட்டனர். 300 இராணுவத்தினர் படுகாயமடைந்தனர்.

பிறப்புகள்

1738 – ஆர்தர் பிலிப், நியூ சவுத் வேல்ஸ் முதலாவது ஆளுநர் (இ. 1814)
1758 – ஹென்ரிச் ஒல்பெர்ஸ், செருமானிய மருத்துவர், வானியலாளர் (இ. 1840)
1820 – ஆணல்ட் சதாசிவம்பிள்ளை, ஈழத்தின் தமிழறிஞர், தமிழாசிரியர், இதழாசிரியர், புலவர் (இ. 1896)
1826 – மாயூரம் வேதநாயகம்பிள்ளை, தமிழ்ப் புதின முன்னோடி (இ. 1889)
1884 – எலினோர் ரூசுவெல்ட், அமெரிக்க அரசியல்வாதி (இ. 1962)
1896 – உரோமன் யாக்கோபுசன், உருசிய-அமெரிக்க மொழியியலாலர் (இ. 1982)
1902 – ஜெயபிரகாஷ் நாராயண், இந்திய அரசியல்வாதி (இ. 1979)
1930 – கே. பி. உமர், இந்திய நடிகர் (இ. 2001)
1942 – அமிதாப் பச்சன், இந்திய நடிகர்
1947 – லூகாசு பாபடெமோசு, கிரேக்கப் பிரதமர்
1952 – ஐசக் இன்பராஜா, ஈழத்து நாடகக் கலைஞர் (இ. 2014)
1962 – ஆன் என்ரைட், அயர்லாந்து பெண் எழுத்தாளர்
1973 – தகேஷி கனேஷிரோ, சப்பானிய நடிகர், பாடகர்
1977 – மாட் போமேர், அமெரிக்க நடிகர்

இறப்புகள்

1889 – ஜேம்ஸ் பிரிஸ்காட் ஜூல், ஆங்கிலேய இயற்பியலாளர் (பி. 1818)
1896 – ஆன்டன் புரூக்னர், ஆத்திரிய இசையமைப்பாளர் (பி. 1824)

சிறப்பு நாள்

சர்வதேச பெண் குழந்தைகள் தினம்

சதீஸ்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...