நடிகர் திலகம் பிறந்த நாள்! | தனுஜா ஜெயராமன்

 நடிகர் திலகம் பிறந்த நாள்! | தனுஜா ஜெயராமன்

தமிழ் சினிமாவின் பெருமையும் தென்னிந்திய நடிகர் சங்க முன்னோடியுமான நடிகர் திலகம் செவாலியே சிவாஜி கணேசன் அவர்களின் 96 வது பிறந்தநாள் இன்று.

அதனைமுன்னிட்டு தென்னிந்திய நடிகர் சங்க அலுவலகத்தில் அவரது திருவுருவ படத்துக்கு நடிகர் சங்க தலைவர் நாசர், துணைத்தலைவர் பூச்சி முருகன், மற்றும் செயற்குழு உறுப்பினர்கள் தளபதி தினேஷ், பிரகாஷ், நடிகர் சங்க மேலாளர் தாம்ராஜ் உள்ளிட்டோர் மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினார்கள்.

நடிகர் திலகம் சிவாஜி கணேசன் கலைமாமணி, பத்மஸ்ரீ, பத்மபூஷன், உள்பட பல விருதுகளை பெற்றுள்ளார் என்பதும் அவர் நடித்த ஒரு சில திரைப்படங்கள் தேசிய விருது பெற்றுள்ளன என்பதும் குறிப்பிடத்தக்கது.

தனுஜா ஜெயராமன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...