அருவா கத்தி எடுக்கணுமா வேண்டாமா ? – இறுகப்பற்று இயக்குநர் யுவராஜ் தயாளன் ! தனுஜா ஜெயராமன்
மாயா, மாநகரம், மான்ஸ்டர், டாணாக்காரன் என ரசிகர்களின் ரசனைக்கு விருந்தளிக்கும் வித்தியாசமான கதைக்களங்களுடன் படங்களை தயாரித்து வரும் பொட்டன்ஷியல் ஸ்டுடியோ நிறுவனத்தின் தயாரிப்பில் அடுத்து வெளியாக இருக்கும் படம் ‘இறுகப்பற்று’.
வடிவேலு நடித்த தெனாலிராமன், எலி ஆகிய படங்களை இயக்கிய யுவராஜ் தயாளன் இப்படத்தை இயக்கியுள்ளார்.
விக்ரம் பிரபு, விதார்த், ஸ்ரீ, ஷ்ரத்தா ஸ்ரீநாத், சானியா ஐயப்பன், அபர்ணதி உள்ளிட்ட பலர் நடித்துள்ள இப்படத்தில் இசைக்கு ஜஸ்டின் பிரகாரன், ஒளிப்பதிவிற்கு கோகுல் பினாய், படத்தொகுப்பு மணிகண்ட பாலாஜி, பாடல்கள் கார்த்திக் நேத்தா என பக்கபலமான தொழில்நுட்ப கூட்டணியும் இணைந்து கைகோர்த்துள்ளனர்.
இப்படத்திற்கான பத்திரிக்கையாளர் சந்திப்பின் சிறப்பு துளிகள்:
வரும் அக்-6ஆம் தேதி இப்படம் உலகெங்கும் ரிலீஸாக இருக்கிறது.
ஆணின் அகம்பாவத்திற்கும் பெண்ணின் திமிருக்கும் சரியான சம்பட்டி அடி விழும்” ; நம்பிக்கை தெரிவித்த பாடலாசிரியர் கார்த்திக் நேத்தா.
நான் என்ன சூர்யாவா ? விக்ரமா ?” ; இறுகப்பற்று படத்திற்காக ரிஸ்க் எடுத்த நடிகை அபர்ணதி.
“என்னையே நான் புரிந்து கொள்ள இறுகப்பற்று படம் உதவி இருக்கிறது” ; விதார்த் நெகிழ்ச்சி.
விக்ரம் பிரபுவிடம் தான் உரிமை எடுத்து கேட்க முடியும்” ; இறுகப்பற்று தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபு.
“எல்லா நடிகர்களுமே பிரகாசிக்க வாய்ப்பு கொடுத்து இருக்கிறார்” ; இறுகப்பற்று இயக்குனருக்கு ஸ்ரத்தா ஸ்ரீநாத் பாராட்டு.
“சின்ன படங்கள் தான் சினிமாவின் முதுகெலும்பு” ; தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபு.
“என் மனைவிக்கு நான் தரும் பிறந்தநாள் பரிசு தான் இறுகப்பற்று” ; இரட்டிப்பு மகிழ்ச்சியில் விக்ரம் பிரபு.
“நான் இனி அருவா, கத்தி எடுக்கணுமா வேண்டாமா ?”; இறுகப்பற்று இயக்குநர் யுவராஜ் தயாளன் ஓபன் டாக்.