இந்திய கிரிக்கெட் வீராங்கனை ஹர்மன்பிரீத் கவுர், ‘டைம்’ பத்திரிகையின் உலகின் சிறந்த ‘100’ பேர் பட்டியலில் இடம் பெற்றுள்ளார்.
அமெரிக்காவின் ‘டைம்’ பத்திரிகை (இதழ்) ஒவ்வொரு ஆண்டும் உலகளவில் அரசியல், கலை, விளையாட்டு உட்பட பல்வேறு துறைகளில் வளர்ந்து வரும் சிறந்த தலைவர்களை தேர்வு செய்கிறது.
2023ல் சிறந்தவர்களுக்கான பட்டியல் வெளியானது.
இதில் புதிதாக சிந்திப்பவர் பிரிவில், சிறந்த வளர்ந்து வரும் தலைவராக (கேப்டனாக) இந்திய பெண்கள் கிரிக்கெட் அணி கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் தேர்வு செய்யப்பட்டார்.
ரோகித் சர்மா, ஹர்திக் பாண்ட்யா உள்ளிட்டோரை பின் தள்ளினார்.
இந்தியாவில் இருந்து நந்திதா வெங்கடேசன் (பத்திரிகையாளர்), வினு டேனியல் (கட்டடக்கலை) என மொத்தம் 3 பேர் இதில் இடம் பிடித்தனர்.
அமெரிக்க கூடைப்பந்து வீராங்கனை ஏஞ்சல் ரீசே, கோல்ப் வீராங்கனை ரோஸ் ஜங்கும் இடம் பெற்றனர்