இசைப்புயல் ஏ. ஆர்.ரஹ்மான் இசை நிகழ்ச்சியில் குளறுபடி ! | தனுஜா ஜெயராமன்
இசைப்புயல் ஏ. ஆர்.ரஹ்மான் இசை நிகழ்ச்சியில் நடந்த குளறுபடி குறித்து நிகழ்ச்சியை ஏற்பாடு செய்நிறுவனம் ரசிகர்களிடம் மன்னிப்பு கோரியுள்ளது. இந்த நிலையில் இந்த நிகழ்ச்சியை ஏற்பாடு செய்த ஏசிடிசி நிறுவனம் தனது எக்ஸ் தள பக்கத்தில் இந்த குளறுபடி முழு பொறுப்பேற்று மன்னிப்புக் கோரியுள்ளது.
கோல்டு, பிளாட்டினம், சில்வர் என டிக்கெட் வாங்கிய பலரும் இசை நிகழ்ச்சியை பார்க்காமல் வீடு திரும்பியதாக குற்றம்சாட்டியுள்ளனர்.
சென்னை பனையூரில் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானின் ‘மறக்குமா நெஞ்சம்’ இசை நிகழ்ச்சி நேற்று செப்.10 நடைபெற்றது.
திரையுலகில் தனது 30 ஆண்டுகால இசைப் பயணத்தை கொண்டாடும் வகையில் இந்த நிகழ்ச்சியை ஏ.ஆர்.ரஹ்மான் நடத்தினார். இதற்கான பொறுப்பு சென்னையைச் சேர்ந்த ஏசிடிசி என்ற நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்டிருந்தது.
இந்த இசை நிகழ்ச்சியில் பணம் கொடுத்து டிக்கெட் வாங்கிய பலரும் உள்ளே கூட செல்ல முடியாமல் வெளியிலேயே நிறுத்தப்பட்டனர். இதனையடுத்து பலரும் சமூக வலைதளங்களில் தங்கள் அதிருப்தியை வெளிப்படுத்தி வருகின்றனர்.
ஏ ஆர் ரஹ்மான் சரியான நிகழ்ச்சி ஏற்பாட்டாளரை நிர்ணயிக்க வில்லை என்றும் அதிகளவில் டிக்கெட்டுகளை விற்றது தான் இப்படியான கூட்ட நெரிசலுக்கு காரணம் என சமூக வலைதளங்களில் பலரும் குமுறி வருகின்றனர்.
இந்த விழாவில் உரிய போலீஸார் மற்றும் பவுன்சர்களை போடவில்லை என்றும் பேராசை காரணமாக அந்த அரங்கின் இருக்கைகளை விட அதிக டிக்கெட்டுகளை விற்றதே இதற்கு காரணம் என குற்றம்சாட்டி வருகின்றனர்.
ஏ. ஆர். ரஹ்மான் தான் இதற்கு பதில் சொல்லியாகணும் என்றும் இந்த மறக்குமா நெஞ்சம் நிகழ்ச்சியை என்றைக்குமே மறக்க முடியாதபடி செய்துவிட்டனர் என ரசிகர்கள் பலர் வீடியோக்களை வெளியிட்டு சோஷியல் மீடியாவில் ஏ.ஆர். ரஹ்மானையும் இசை நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களையும் கிழித்துத் தொங்க விட்டு வருகின்றனர். மொத்தத்தில் இசைப்புயலுக்கு மிகவும் கெட்டபெயர் ஏற்படுத்தி விட்டனர் என்கின்றனர்.