தனது 25வது படத்தை தானே தயாரிக்கவுள்ள ஜிவி பிரகாஷ்..
இசையமைப்பாளர், நடிகர், தயாரிப்பாளர், பாடகர் என சினிமாவில் பன்முகம் காட்டி வருபவர் ஜிவி பிரகாஷ்குமார். கடந்த 2006ம் ஆண்டில் வெளியான வெயில் படம் மூலம் சினிமாவில் அறிமுகமான ஜிவி பிரகாஷ், இசை அசுரன் என்று ரசிகர்களால் கொண்டாடப்படுகிறார். வெயில் படத்திற்கு முன்னதாகவே ஏஆர் ரஹ்மான், ஹாரீஸ் ஜெயராஜ் உள்ளிட்ட இசையமைப்பாளர் இசையில் இவர் பாடியுள்ளார். இவர் ஏஆர் ரஹ்மானின் சகோதரி மகன்.
கடந்த 2006ம் ஆண்டில் வெளியான வெயில் படம் மூலம் தமிழில் இசையமைப்பாளராக அறிமுகமானவர் ஜிவி பிரகாஷ்குமார். ஏஆர் ரஹ்மானின் சகோதரி மகனான இவர், வெயில் படத்திற்கு முன்னதாகவே ஏஆர் ரஹ்மான், ஹாரீஸ் ஜெயராஜ் உள்ளிட்டவர்களின் இசையில் பாடல்கள் பாடியுள்ளார். வெயில் படத்தின் பாடல்கள் ஹிட்டடித்த நிலையில், தொடர்ந்து விஜய், தனுஷ் உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் கூட்டணி அமைத்து சிறப்பான பாடல்களை கொடுத்து வருகிறார்.
ஜிவி பிரகாஷ் இசையமைப்பாளராக இருந்து நடிகராகவும், தயாரிப்பாளர், பாடகர் என பன்முகம் காட்டி வருகிறார். இசை அசுரன் என்றும் பாராட்டப்படும் இவர், தன்னுடன் இணைந்து பணியாற்றிய பாடகி சைந்தவியை கடந்த 2013ம் ஆண்டில் மணந்துக் கொண்டார். இதனிடையே கடந்த 2015ம் ஆண்டில் ரிலீசான டார்லிங் என்ற படத்தின்மூலம் நடிகராகவும் இவர் அறிமுகமானார். தொடர்ந்து பல படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார். தன்னுடைய படங்களுக்கும் இவர் தொடர்ந்து இசையமைத்து வருகிறார்.
சூர்யா -சுதா கொங்கரா கூட்டணியில் வெளியான சூரரைப் போற்று படத்திற்காக தேசிய விருதை பெற்றுள்ளார் ஜிவி பிரகாஷ். தொடர்ந்து பிலிம்பேர் உள்ளிட்ட விருதுகளையும் பெற்றுள்ளார். கடந்த 2013ம் ஆண்டில் மதயானைக் கூட்டம் என்ற படத்தை தயாரித்திருந்தார் ஜிவி பிரகாஷ். இந்தப் படம் சிறப்பான விமர்சனங்களை பெற்றுக் கொடுத்ததுடன் நல்ல வசூலையும் தயாரிப்பளராக ஜிவிக்கு பெற்றுத் தந்தது. ஆனால் தொடர்ந்து தயாரிப்பில் இவர் ஈடுபடவில்லை. இந்நிலையில் தற்போது 10 ஆண்டுகள் கழித்து மீண்டும் தயாரிப்பில் ஈடுபடவுள்ளார் ஜிவி பிரகாஷ். தான் அடுத்ததாக நடிக்கவுள்ள, தனது 25வது படத்தைதான் இவர் தற்போது தயாரிக்கவுள்ளார். இந்தப் படத்தின் முன் தயாரிப்பு பணிகள் தற்போது முடுக்கி விடப்பட்டுள்ளன. விரைவில், படத்தின் நாயகி உள்ளிட்ட விவரங்கள் வெளியாகும் என்றும் படத்தின் அறிவிப்பும் விரைவில் மேற்கொள்ளப்பட உள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.
சமீபத்தில் ஜிவி பிரகாஷ் நடிப்பில் வெளியான அடியே படம் சிறப்பான விமர்சனங்களை பெற்றது. இவரது பல பாடல்கள் இயல்பான கலவையில் புதுமையை புகுத்தி வெளியாகியுள்ளன. அக்கம் பக்கம் யாரும் இல்லாத பூலோகம் வேண்டும் என்ற நா முத்துக்குமாரின் பாடல் வரிகளுக்கு தன்னுடைய இசையால் உயிர் கொடுத்தவர் ஜிவி பிரகாஷ். இதேபோல அங்காடித் தெரு படத்தில் வெளியான உன் பேரை சொல்லும் போதே என்ற பாடலை கேட்கும்போது, மனதிற்குள் இனம் புரியாத வலி ஏற்படுவதை தவிர்க்க முடியாது. சமீபத்தில் வெளியான வாத்தி படத்திலும் சிறப்பான பாடல்களை கொடுத்துள்ளார்.